குழப்பத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் சரயூ. அதை கவனித்தவன், இதுதான் சரியான சமயமென தன் பக்கத்தில் நின்றிருந்த கௌதமின் கையை அவளறியாமல் அழுத்தினான்.
அதை புரிந்த கௌதம், “நீ சொன்னது சரிதா கிரண். இப்போ என்னாயிடுச்சு? விடு மச்சா… எல்லாத்தையு நான் பார்த்துகுற…. எல்லா கான்ஸல் ஆயிருச்சுனு சொல்லிடலா” என்றபடி கிரணின் கையை பிடித்து இழுத்துகொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
“நில்லுங்க! ஏன் அவசரபடுறீங்க? அந்த காம்பிடிஷன் தேதிலேயே என் ஃப்ரெண்டு அண்ண கல்யாணமிருக்கு. அதான் கொஞ்ச யோசிச்ச. பரவால்ல விடுங்க….அவளை நான் சமாளிச்சுக்குற”
“என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம் சரயூ!” அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கிரண் சொல்லவும்
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
“கஷ்டமெல்லாம் ஒன்னுமில்லை… இந்த டான்ஸ் நிறுத்தினாதா….இதுல பங்கெடுத்துக்கனும்னு நினைச்சு ப்ராக்டீஸ் பண்ணவங்களுக்கு கஷ்டமாயிருக்கும்… ஒன்பது பேரும் தயாராயிருக்கும்போது ஒருத்தரால இது நின்னா நல்லாயிருக்காது”
“தாங்க்ஸ் சரயூ” எதிரிலிருந்தவளைப் பார்த்து புன்னகைத்தவன் அவளறியாமல் நண்பனுக்கு தன் வலது கையின் கட்டைவிரலை உயர்த்தி திட்டத்தின் வெற்றியைக் குறிப்பிட்டான்.
நடந்ததை சொல்லி முடித்தவள், “ப்லீஸ் சஞ்சு! எங்கிட்ட பேசு… உனக்கு எத்தனை முறை ஃபோன் பண்ணேன் தெரியுமா? உன்னோட நம்பர் ரீச்ல இருக்கலை”
“சரி!” அவனிடமிருந்து வந்த ஒற்றை வார்த்தை பதிலில் அவன் சமாதானமடையவில்லை என்பது தெரிந்தது.
“சாரி சஞ்சு! எங்கிட்ட பேசு….”
“பேசுறனே… கேட்கலையா உனக்கு?”
இவள் வெகு நேரமாக ஃபோனில் பேசியதை கவனித்திருந்த கிரண் அங்கு வந்து சேர்ந்தான்.
“சரயூ! வா போகலாம்…. நீ இன்னும் ப்ராக்டீஸ் செய்யனும்”
“இதோ வரேன் கிரண்!” அவனுக்கு பதிலளித்தவள் மறுபடியும் சஞ்சயிடம் பேசினாள்.
“ப்லீஸ் சஞ்சு! என்னை பார்த்தா பாவமாயில்லையா? ஏதாவது சொல்லு… நான் ஏதாவது செய்தாதா உன் கோபம் போகும்னாலும் சொல்லு”
இதுதான் நல்ல வாய்ப்பு… உன்னோட காதலை சொல்லிடு ஜெய்.. அவ கெஞ்சும்போதே சொல்லிடு… என்றது மனம்.
“கம் ஆன் சரயூ! எவ்வளவு நேரந்தான் ஃபோன்லயே இருப்ப…” கிரண் மறுபடியும் இவளை அழைத்தான்.
“சாரி சஞ்சு! கிரண் கூப்பிடறான். ப்ராக்டீஸ் செய்யனும். ஈவ்னிங் உனக்கு ஃபோன் பண்ணுற… பை” அவசரமாக சொன்னவள் ஜெய்யின் பதிலுக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்தாள்.
அந்த கிரண் உனக்கு வில்லன்…. எத்தனை முறை உங்கிட்ட சொல்லியும் என்ன பிரயோஜனம்? அவன் கூப்பிட்டானு சரூ ஓடுறா… நீ வேற பேசாம சும்மாயிருந்துட்ட… என்ன நடக்குமோ? கடவுளே! இவன் எப்படி போனாலும் தயவுசெய்து எனக்கு சரூவை குடுத்துருங்க. அவளில்லாம என்னால இருக்க முடியாது என்று முதலில் ஜெய்யை குறைக் கூறி கடைசியில் கடவுளிடம் சரணடைந்தது மனம்.
வந்த வேலை முடிந்திருக்க மைத்ரீ இவனை அழைத்தாள்.
“எங்க இருக்க ஜெய்? பில்லிங்க் கவுண்டர்ல இருக்கோம்”
“கடைக்கு வெளில இருக்கேன். இங்க வந்துருங்க”
“ஓகே!”
பணத்தை கட்டிவிட்டு மைத்ரீ யஷ்விதாவோடு வந்து சேர்ந்தாள். எதுவோ சரியில்லை என்று அவன் முகத்தை கொண்டே தெரிந்துது மைத்ரீக்கு.
“சரயூ எங்க இருக்கா? நான் ஃபோன் பண்ணா எடுக்கலயே” சரயூதான் காரணமாக இருப்பாளென்ற ஊகத்தோடு கேள்வியை கேட்டுவிட்டு அவன் முகத்தை ஆராய்ந்தாள் மைத்ரீ.
பெருமூச்சோடு வேறெங்கோ பார்த்தபடி “காலேஜுல இருக்கா!” என்றான் ஜெய்.
யஷ்விதாவின் முன்னால் எதையும் காண்பித்து கொள்ளாமல் மைத்ரீ
“கிளம்பு ஜெய்! சாப்பிட்டிட்டு வீட்டுக்கு போலா” அவன் தோளை அழுத்தினாள்.
அவளிடமாக திரும்பியவன் அவள் யஷ்விதாவை கண்களால் சுட்டுவதை அறிந்து ஏதும் பேசாது காரை கிளப்பினான்.
தன் பேராசையை நிறைவேற்ற கிரண் வேறு சில போட்டிகளிலும் அந்த குழுவின் பெயரை பதிந்துவிட்டு சரயூ அதற்கு ஒப்புகொள்ளும்படியான மாயச் சூழலை ஏற்படுத்தினான். போட்டிகளை காரணம் காட்டி அவளை நாள் முழுவதும் தன்னோடு வைத்துகொண்டான்.
சரயூ ஜெய்யை சமாதானப்படுத்த செய்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. ஃபோன் அழைப்பு, மெஸ்ஸெஜ், மைத்ரீ, வேதிக், ரூபின் என்று யாருடைய தூதும் வெற்றி காணவில்லை. ஜெய் திருமணத்தின் காரணமாக காலேஜுக்கும் வரவில்லை. போட்டிகளுக்கு தயார் செயவதும் பங்குபெறுவதுமாக நேரம் கழிய… இவளால் அவனை நேரில் சென்று பார்க்க முடியாமல் போனது.
சரயூவின் மீதான அதீத காதலினால் ஜெய்யின் மனம் அவளின் புறக்கணிப்பை ஏற்க முடியாமல் தவித்தது. அவள் இவனை அழைத்த போதெல்லாம் அவளிடம் பேசாமல் தவிர்த்தான். அவளை பார்க்க வேண்டும் பேச வேண்டுமென பேராவல் கொண்ட மனதை சிரமபட்டு அடக்கினான். பிரிவின் வேதனையை துடிதுடிக்க அனுபவித்தான். அவனுக்கு வலியை கொடுத்த பிரிவே அவளுக்கு காதலை உணர்த்தும் என்பது அவனது நம்பிக்கை.
ஜெய்யின் நம்பிக்கை வெற்றிபெறுமா?
முத்து ஒளிரும்…
{kunena_discuss:1038}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.