(Reading time: 15 - 29 minutes)

வேதிக் வேறேதோ சொல்லிக்கொண்டிருந்தான்.  அவை இவன் செவிகளை சேரும் முன்னே அழைப்பை துண்டித்திருந்தான் ஜெய்.

‘சரூ! எங்க இருக்க? என்னை ஏண்டி இப்படி தவிக்க விடுற?’

அவளின் நிலை என்னென்று தெரியாமல் ஜெய் புலம்பிகொண்டிருக்க ஃபோன் அலறியது.  அவளுடைய அழைப்பாக இருக்குமென பேராசையில் அதை ஏற்றவனுக்கோ ஏமாற்றம்.  அழைத்திருந்தது ரூபின்.

“எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் மச்சா! இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா நானும் சௌம்யா கேட்டப்போ… உடனே ஓகே சொல்லிருப்பேனே”

“ஏண்டா நேரங்காலம் தெரியாம நீ வேற….” சலிப்பான வார்த்தைகளை கொட்டியவன் அழைப்பை துண்டிக்க முனைய

“ஃபோனை கட் பண்ணிடாத மச்சா! நீ சொல்லலைனாலும் நான் கண்டுபிடிச்சத சரயூகிட்ட இப்பவே சொல்லிடுவ” ஜெய் சரயூவைப் பார்க்கும் பார்வையை கொண்டு அவனின் காதலை புரிந்துகொண்ட ரூபின் இப்படி சொல்லவும்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“ப்ச்ச்…. என்னத்த கண்டுபிடிச்ச? அத ஏன் அவகிட்ட சொல்லி…..” அவனிருந்த கடுப்பில் ரூபின் சொன்னது என்ன என்று யோசிக்கவில்லை ஜெய்.  ஆனால் ரூபினருகில் சரயூ இருக்கிறாள் என்பது மட்டும் அப்போதைக்கு புரிய

“நீ எங்க இருக்க? சரயூ உன்னோட இருக்காளா?” பதட்டமாகவும் அவசரமாகவும் கேட்டான் ஜெய்.

“நா காலேஜ்ல இருக்க.  சரயூ எங்கூட இல்ல…. அந்த சீனியர் கிரண் கூட டான்ஸ் ஆடிட்டிருக்கா”

“என்னது?!” அதிர்ச்சியும் குழப்பமுமாக இவனின் கேள்வி வெளிவந்தது.

“உனக்கே தெரியாதாடா மச்சா? என்னடா உன் நிலைம இப்படி ஆயிடுச்சு? நானே பரவாயில்ல…. சௌம்யா கைல கால்ல விழுந்து என்னோட லவ்வை ஏத்துக்கவச்சுட்ட… நீயும் சரயூவும் எப்பவுமே ஒன்னா சுத்திட்டிருப்பீங்க… இப்ப என்ன புதுசா? இந்த சீனியர் நடுவுல வந்து எல்லாத்தையும் குழப்பிட்டானா? பாவம் மச்சா நீ”

போச்சு…போச்சு…எல்லா போச்சு! அந்த கிரண் அடிக்கடி சரூவ பார்க்க வரும்போதே நினைச்ச… உனக்கு எத்தன முறை சொன்ன… என் பேச்ச கேட்டியா? ஜெய்யின் மனம் தவித்து புலம்பி அவன் மீதே பழியையும் சுமத்தியது.  எனக்கு சரூ மேலயும் அவள் மேல நான் வச்சிருக்கும் காதல் மேலயும் நிறைய நம்பிக்கை இருக்கு…. நீ கொஞ்ச சும்மா இருந்தினா என்ன ஏதுன்னு விசாரிக்கலாம் என்று மனதிற்கு பதிலளித்தவன்

“கண்டத உளறாத ரூபின்! இப்படியே ஏதாவது பேசிட்டிருந்த சரூகிட்ட சொன்னேனு வை… சௌம்யா உனக்கு டாட்டா சொல்லிட்டு போயிடுவா… எப்படி வசதி?”

ரூபின்-சௌம்யா காதல் வெற்றியடைந்ததில் சரயூவின் பங்கும் இருந்தது. சஞ்சய் இப்படி சொல்லவும் ரூபின் அதிர்ந்தான்.

“உனக்கெல்லா பாவம் பார்த்த இல்ல… எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்.  சௌம்யா இந்த காண்டெம்பரி க்ரூப் டான்ஸ்ல சேர்ந்திருக்கா.. சரயூ இப்போ ப்ராக்டீஸ் பண்ணிட்டிருக்கவும்… சொல்லவே இல்லையேனு கேக்கலாம்னு….. ம்ஹீம்… நான் உனக்கு ஃபோன் பண்ணத தயவுசெஞ்சி மறந்திடு சஞ்சய்”

“அப்படியெல்ல விட்ற முடியாதுடா! சரயூகிட்ட பேசனும்… உன் ஃபோனை அவட்ட குடு”

ஃபோனை காதிலிருந்து எடுத்து முகத்தின் முன் பிடித்தவாறு “இது உனக்கு தேவையா?” என்று ரூபின் தனக்கு தானே கேட்கவும்

“என்ன புலம்பல் அங்க? ஃபோன் அவட்ட குடுப்பியா? இல்லை சௌம்யாட்ட நானே பேசவா?”

“அப்படி எதுவும் செய்யாதடா சாமி! ஒரு நிமிஷம் லைன்ல இரு”

சரயூவிடம் ஃபோனை கொடுத்தவன் அங்கே ப்ராக்டீஸ் செய்து கொண்டிருந்த சௌம்யாவை சைட் அடிக்க ஆரம்பித்தான்.

“ஹலோ சஞ்சு!”

“…………………..”

“ஹலோ சஞ்சு! கேக்குதா?”

“ம்ம்……..” குரலிலிருந்த கோபம் அவளுக்கு புரியவும்

“சாரி சஞ்சு! இங்க என்ன நடந்துச்சுனு தெரியுமா?” என்று துவங்கி நடந்ததை கூறினாள் சரயூ.

“இஸ்கான் ஹெரிடேஜ் ஃபெஸ்ட் (ISKCON Heritage Fest) பற்றி நோடீஸ் போர்ட்ல பார்த்திருப்பேயே சரயூ.  காண்டெம்ப்ரி (contemporary) க்ரூப் டான்ஸ்கு கிரண் ரெஜிஸ்டர் பண்ணிட்டான்.  விஷ்ணுவோட பத்து அவதாரத்தை காட்டுற மாதிரி ஒரு தீம் டான்ஸ்கு கிரண் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டா.  க்ரூப்ல இருக்க பத்து பேரும் ஒவ்வொரு அவதாரத்தை பண்ணுவாங்க.  ஆனா திடீர்னு நேத்தைக்கு ஒரு பொண்ணு பின்வாங்கிட்டா.  நீ டான்ஸ் பண்ணுவியே…. அதான் ஹெல்ப் பண்ணுவனு….” தங்கள் திட்டத்தின்படி அச்சுபிசகாமல் பேசினான் கௌதம்.

சரயூ உடனடியாக பதில் சொல்லாமல் யோசிக்க ஆரம்பித்தாள்.

“என்னால எதுக்கு எல்லாருக்கும் பிரச்சனை? நான் அப்பவே சொன்ன… நீதான் கேட்காம இங்க வந்த…” கௌதமிடம் கோபமும் வருத்தமும் கலந்து பேசியவனாக கிரண் மறுபடியும் சரயூவின் முகத்தை ஓரக்கண்ணால் ஆராய்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.