(Reading time: 15 - 30 minutes)

முனாவை பற்றி இவள் எப்படி யோசிக்காமல் போனாள்... அவள் நர்மதாவின் தோழியாயிற்றே.. புடவை செலக்ட் செய்ய அவளும் கண்டிப்பாக நர்மதாவோடு வருவாள்... யோசித்தப்படியே வந்தவள், ஆட்டோ ஓடிக் கொண்டிருக்க,

"அண்ணா... கொஞ்சம் ஆட்டோவை நிறுத்துங்களேன்.." என்றாள்..

"என்னாச்சு கங்கா..??"

"அது... என்னோட ப்ரண்டுக்கு கிஃப்ட் வாங்கனும்... இறங்கற இடத்துலேயே வாங்கலாம்னு நினைச்சேன்... இப்போ தான் ஞாபகம் வந்துச்சு... நான் எப்பவும் கிஃப்ட் வாங்கும் கடை ஒன்னு இங்க இருக்கு... அதான் இங்கேயே வாங்கிட்டுப் போய்டலாம்னு நினைச்சேன்... நான் இறங்கிக்கிறேன், நீங்க உங்க ப்ரண்ட பிக்அப் பண்ணிக்கிட்டு தி.நகர் போங்க.."

"நிஜமா தான் சொல்றீங்களா..?? நான் வர்றது உங்களுக்கு டிஸ்டர்ப் ஆ இருந்தா சொல்லுங்க, நான் வேணா இறங்கிக்கிறேன்..."

"அய்யோ என்ன நர்மதா.. அப்படி நினைச்சிருந்தா... நான் உங்களை ஏறச் சொல்லியிருப்பேனா..?? நிஜமா கிஃப்ட் தான் வாங்கனும்... நீங்க போங்க, நான் கிஃப்ட் வாங்கிட்டு வேற ஆட்டோல ஏறிக்கிறேன்.." என்று ஆட்டோவிலிருந்து இறங்கியவள்,

"அண்ணா எவ்வளவு கொடுக்கனும்.??" என்றுக் கேட்டாள்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேவதி சிவாவின் "வரத்தினால் பெற்ற சாபம்" - சமூக பார்வைக் கொண்ட தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"என்ன கங்கா... கொஞ்ச தூரம் தான் வந்திருக்கோம்.. அதுக்கு போய் காசு கொடுத்துக்கிட்டு, மொத்தமா நானே கொடுத்துட்றேன்.. அப்போ தான் எனக்கு திருப்தியா இருக்கும்... இல்லன்னா, உங்களை இறக்கிவிட்டுட்டு நான் இந்த ஆட்டோல போறதா கில்ட்டியா ஃபீல் பண்ணுவேன்.." என்றாள்...

"அய்யோ அப்படியெல்லாம் நினைக்காதீங்க நர்மதா... சரி நீங்களே காசு கொடுங்க ஓகே வா.. அப்புறம் உங்களுக்கு பிடிச்ச மாதிரி சாரி அமைய என்னோட வாழ்த்துக்கள்.." என்றதும், நர்மதாவும் "தேங்க்ஸ்.." என்றாள்... பின் ஆட்டோ கிளம்பியது...

ஆட்டோ சிறிது தூரம் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்த கங்கா... அடுத்து ஒரு ஆட்டோ வர அதில் ஏறிச் சென்றாள்.

ட்டோவில் போய்க் கொண்டிருக்கும் நர்மதாவிற்கோ கங்கா கிஃப்ட் வாங்க இறங்கியிருப்பாள் என்று தோன்றவில்லை... பின் எதற்காக இறங்கியிருப்பாள்..?? யோசித்தப்படி செல்ல, யமுனாவை காத்திருக்கச் சொன்ன இடம் வந்தது... ஆட்டோ டிரவரிடம் அந்த இடத்தை குறிப்பிட்டு சொல்லி ஆட்டோவை நிறுத்தச் சொன்னாள்...

"ஹேய் சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வந்துட்ட... நல்லவேளை ரொம்ப நேரம் வெய்ட் பண்ண வேண்டியிருக்குமோன்னு நினைச்சேன்..." என்று ஆட்டோவில் ஏறியப்படியே யமுனா கூறினாள்...

"அது உன்கிட்ட பேசிட்டு வெளியே வந்ததுமே ஆட்டோ கிடைச்சிடுச்சு... இந்தா அம்மா பூ வைக்க சொன்னாங்களேன்னு வாங்கினேன்.. நீயும் வச்சிக்க.." என்று பூவை அவள் கையில் கொடுத்தாள்...

நர்மதாவின் முகம் ஏதோ யோசனையில் இருப்பதாகவே யமுனாவிற்கு தோன்றியது... "என்னடி.. கல்யாணம் கிட்ட வந்திருச்சு... இன்னும் என்ன யோசனையிலேயே இருக்க.." என்றாள்...

இன்னும் நர்மதா இந்த கல்யாணத்தை நினைத்து குழப்பத்தில் இருப்பதாகவே தோன்றியது... அதனால் தான் அப்படி கேட்டாள்... யமுனா நினைப்பதும் உண்மை தான்... ஆனால் நர்மதா இப்போது அந்த சிந்தனையில் இருக்கவில்லையே...

"அதெல்லாம் இல்லடி... நான் இப்போ வேற ஒரு யோசனையில இருக்கேன்... நான் இந்த ஆட்டோவ இன்னொருத்தர் கூட தான் ஷேர் பண்ணிக்கிட்டு வந்தேன்... பர்ஸ்ட் அவங்க தான் இந்த ஆட்டோல ஏறினாங்க... எனக்கு அர்ஜன்ட்னு தெரிஞ்சு ஷேர் பண்ணிக்கிட்டாங்க... தேனாம்பேட்டை போகனும்னு சொன்னாங்க... திடிர்னு என்னாச்சுன்னு தெரியல... ஏதோ கிஃப்ட் வாங்கனும்னு கொஞ்ச தூரத்திலேயே இறங்கிட்டாங்க.. அதான் ஏன்னு தெரியல.."

"அதான் அவங்க ரீஸன் சொன்னாங்கல்ல... கிஃப்ட் வாங்க இறங்கினதா.. அப்புறம் என்ன..??"

"இல்லடி... அவங்க கிஃப்ட் வாங்க இறங்கினதா தெரியல... வேணும்னே இறங்கிட்டா மாதிரி தான் தோனுச்சு.. "

"ஒருவேளை முதல்ல உன்னை ஆட்டோல ஏறச் சொல்லிட்டு, அப்புறம் ஏன் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்னு நினைச்சு, ஏறச் சொன்ன உன்னை எப்படி இறங்குன்னு சொல்றதுன்னு யோசிச்சுக் கூட அவங்களே இறங்கியிருக்கலாம் இல்ல.."

"நீ சொல்ற மாதிரியும் இருக்கலாம்... ஆனா அவங்க முன்னாடியே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்னு தான் சொன்னாங்க... நல்லா ப்ரண்டிலியா தான் பேசிக்கிட்டு வந்தாங்க... பார்க்க நல்ல மாதிரியா தான் தெரிஞ்சாங்க...  நம்ம வயசோ இல்ல ஒன்னு ரெண்டு வயசு கூடவோ தான் அவங்களுக்கு இருக்கும்... ரெண்டுப்பேரும் ஒருத்தருக்கொருத்தர் அறிமுகப்படுத்திக்கிட்டோம்... அவங்க பேர் கங்கா.. டெய்லரிங் இன்ஸ்ட்டியூட் வச்சு நடத்தறாங்களாம்... பார்த்ததுமே அவங்கள பிடிச்சுடுச்சு..." என்று நர்மதா கங்காவை பற்றி சொல்ல,

இப்போது கங்காவின் பெயரைக் கேட்டு யமுனா அதிர்ச்சியானாள்... ஆனால் நர்மதாவைப் போல் அவள் குழம்பவில்லை... கங்கா திடிரென்று ஏன் இறங்கியிருப்பாள் என்று யமுனாவிற்கு புரிந்து தான் இருந்தது... அதை நர்மதாவிடம் அவள் சொல்லவில்லை... "விடு நர்மதா.. எதுக்கு இப்போ ஃபீல் பண்ணிக்கிட்டு.." என்று நர்மதாவை அந்த விஷயத்தில் இருந்து வெளிக் கொண்டு வந்தவளோ... அந்த பயணம் முழுவதும் கங்காவை பற்றி தான் சிந்தித்துக் கொண்டு வந்தாள்.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.