(Reading time: 15 - 30 minutes)

10. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

ன்று ஞாயிறு என்பதால் கோவிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது... இளங்கோ பெயரில் அர்ச்சனை செய்வதற்காக கங்கா வந்திருந்தாள்...

துஷ்யந்திற்கு மதியம் அலுவலகத்தில் ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்காம்... அதனால காலையிலேயே பூஜையை முடிச்சிடலாம் கங்கா... சீக்கிரம் வந்துடு என்று இளங்கோ கூறியிருந்தான்... பூஜைக்கான ஏற்பாடுகளை செய்ய வாணியையும், இவள் இன்ஸ்ட்டியூட்டில் வேலை செய்யும் ரம்யாவையும் அங்கு அனுப்பிவிட்டு, இவள் கோவிலுக்கு வந்திருந்தாள்...

கடந்த இரண்டு வருடமாக கொஞ்சம் விமரிசையாகவே ஆண்டு விழாவை கொண்டாடினான்... இவனுக்கு ஆர்டர் கொடுப்பவர்கள், சில பள்ளி தாளாளர்கள் இப்படி யாரையாவது அழைப்பான்... அன்று ஏதாவது புத்தகம் பதிப்பிடுவான்... ஆனால் இந்த முறை வெறும் பூஜையோடு சிம்பிளாக கொண்டாடலாம் என்று கூறிவிட்டான்... அதற்கேற்றார் போல், இளங்கோவின் குடும்பத்தாரால் கூட இந்த விழாவிற்கு வர முடியவில்லை...

"யார் பேருக்கும்மா அர்ச்சனை பண்ணனும்...?" இவளிடம் அர்ச்சனை கூடையை வாங்கியப்படி கோவில் குருக்கள் கேட்டார்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீ தான் என் சந்தோஷம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"இளங்கோவன்... தனுசு ராசி, உத்திராடம் நட்சத்திரம்.." என்று அவள் சொல்லவும், வாயில் மந்திரங்களை உரைத்தப்படியே அம்மனுக்கு அர்ச்சனை செய்தார்... இளங்கோ இன்னும் மேலே முன்னேற வேண்டும் என்று கங்கா மனமுருக வேண்டிக் கொண்டாள்... பின் அர்ச்சனை கூடையை வாங்கியவள், கோவில் பிரகாரத்தை சுற்ற சென்றாள்...

அந்த நேரம் நர்மதாவும் இளங்கோ பேரில் அர்ச்சனை செய்ய கோவிலுக்குள் நுழைந்தாள்... இன்னைக்கு பதிப்பகத்துல ஆண்டு விழாம்மா... வேலை செய்றவங்களை வச்சு சிம்பிளா ஒரு பூஜை மட்டும் பண்ணலாம்னு இருக்கேன்... அதனால, சண்டே ஈவ்னிங் உனக்கும் யமுனாக்கும் ஒரு சின்ன ட்ரீட் இருக்கு வந்துடுங்க... என்று இளங்கோ அலைபேசியில் பேசியிருந்தான்...

அவன் அழைத்திருந்தாலும் அவளால் அந்த விழாவிற்கு போயிருக்க முடியாது... ஏனென்றால் இன்று தானே இவள் திருமணத்திற்கும் பட்டுப்புடவை எடுக்கிறார்கள்... இவளோடு புடவை தேர்ந்தெடுக்க, யமுனாவையும் இவள் உடன் அழைத்திருந்தாள்.... அதனால் அவன் இன்று மாலை ரெஸ்ட்டாரண்ட்க்கு வர சொன்னதற்கு இவளும் சம்மத்திருந்தாள்...

திருமண பத்திரிக்கை அடிச்சாச்சு... திருமணத்திற்கு புடவை எடுக்கும் நாளும் வந்தாகிவிட்டது... இருந்தும் இன்னும் இவள் இளங்கோவிடம் தன் திருமண விஷயத்தைப் பற்றி கூறவில்லை... இவளே இன்னும் இந்த திருமணத்திற்கு தயாராகததால் இளங்கோவிடம் இதுவரை சொல்ல தோன்றவில்லை... ஆனால் இனியும் தாமதிக்கக் கூடாது.. திருமண பத்திரிக்கையை அவனிடம் கொடுத்து, இன்று மாலை அவனிடம் விஷயத்தை கூறிவிட வேண்டும் என்று முடிவில் இருக்கிறாள்...

இவ்வளவு தாமதமாக தன் திருமண செய்தியை சொன்னால், அவன் என்ன நினைப்பான் என்று மனதிற்கு நெருடலாகவே இருந்தது... இருந்தும் தன்னைப் புரிந்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது...

மாலை ரெஸ்ட்டாரன்ட்டிற்கு செல்வதற்கு முன்பு கோவிலுக்கு போகலாம் என்று தான் இவள் நினைத்திருந்தாள்... ஆனால் திடிரென்று தோன்றி இப்போதே புறப்பட்டு வந்துவிட்டாள்... அதற்கு காரணம் அந்த ரிஷப் தான்... கார் அனுப்புறேன் ஆன்ட்டி... அதுல வந்துடுங்க என்று, ஒன்றுக்கு இரண்டு முறை இவர்களை அழைத்தவன், மீண்டும் அலைபேசியிலும் காலையிலிருந்து இருமுறை அழைத்து கூறிவிட்டான்...

ஏன் இவன் கார் இல்லன்னா எங்களால போகவே முடியாதாமா..?? காரை பார்த்ததும் மயங்கி அதில் ஏறிடுவோம்னு நினைப்பு... என்று மனதில் நினைத்தே காலையில் கோவிலுக்கு கிளம்பினாள்...

என்னவோ அவன் மேல் இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தினாலும், இவள் பணத்துக்காக அலைபவள் என்று அவன் கூறியது இன்னுமே இவள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது... அதை சாதாரணமாக இவளால் எடுத்துக் கொள்ள முடியவில்லை... அதனாலேயே அந்த காரை தவிர்த்துவிட்டு வந்தாள்...

அம்மா காரணம் கேட்டதற்கும், "நம்ம 4 பேர் போற அளவுக்கு சின்ன கார் தான்ம்மா அனுப்புவாங்க... எனக்கு புடவை செலக்ட் பண்ண யமுனாவும் வரனும்... எல்லோரும் ஏன் இடுக்கிக்கிட்டு போகனும்... நான் கோவிலுக்குப் போக வேண்டியிருக்கு... அதனால கோவிலுக்கும் போய்ட்டு, அப்படியே யமுனாவையும் கூட்டிக்கிட்டு நேரா தி.நகர் வந்துட்றேன்... நீங்க 3 பேரும் கார்ல வாங்க.." என்று சொல்லிவிட்டு வந்தாள்... மல்லிகாவும் அரை மனதாக தலையாட்டி அனுப்பி வைத்தார்... இதையெல்லாம் சிந்தித்தப்படியே சன்னதியின் அருகில் வந்தவள்...

"இளங்கோவன்... தனுசு ராசி, உத்திராடம் நட்சத்திரம்.." என்று கூறி, குருக்களிடம் அர்ச்சனை கூடையை கொடுத்தாள்...

"ஏம்மா... இந்த பையனுக்கு பிறந்த நாளா..??" என்று கேட்டார் குருக்கள்...

"இல்ல சாமி... இன்னைக்கு அண்ணாவோட பதிப்பகத்துல ஆண்டு விழா... அவர் பதிப்பகம் தொடங்கி 3 வருஷம் முடியுது... இதுக்கும் மேல அவர் முன்னேறனும்னு அர்ச்சனை பண்ண வந்தேன்... ஆமாம் சாமி.. ஏன் கேக்கறீங்க..?"

"இல்லம்மா... இதே பேர், ராசி, நட்சத்திரம் சொல்லி இப்போ தான் ஒரு பொண்ணு அர்ச்சனை பண்ணிட்டுப் போச்சு... அதான் கேட்டேன்.." என்று அவர் சொன்னதும், நர்மதா தான் இருந்த இடத்தை சுற்றி ஒரு பார்வை பார்த்தாள்...

யாராய் இருக்கும்..?? ஒருவேளை யமுனாவோ..?? இல்லையே நான் கோவிலுக்குப் போகப் போறேன் வர்றீயா..?? என்று கேட்டதற்கு, "இல்லடி இன்னைக்கு நான் கோவிலிக்கு வரக்கூடாது... நேரா தி.நகர் வந்துட்றேன் என்றாள்... பின்பு யாராய் இருக்கும் என்று தேடிப் பார்த்தாள்...

"அந்த பொண்ணு பிரகாரத்தை சுத்த போய்டுச்சும்மா..." என்றவர், அம்மனுக்கு அர்ச்சனை செய்தார்... இவளும் இளங்கோவிற்காக மனமுருகி வேண்டிக் கொண்டாள்...

பிரகாரத்தை சுற்றிவிட்டு சில நிமிடங்கள் அங்கு உட்கார்ந்த கங்கா பதிப்பகத்தில் பூஜைக்கு நேரத்துடன் செல்ல வேண்டும் என்பதால் கோவிலிலிருந்து கிளம்பினாள்... ஆட்டோவில் சென்றால் தான் சீக்கிரம் போக முடியும் என்பதால், கோவிலிலிருந்து வெளியே வந்தவள், ஆட்டோவிற்காக காத்திருந்தாள்...

நர்மதாவும் பிரகாரத்தை சுற்றிவிட்டு சில நிமிடங்கள் உட்கார்ந்தவள், ஆட்டோவில் சென்றால் தான் சீக்கிரம் போக முடியும் என்பதால், யமுனாவிற்கு போன் செய்து.. ஆட்டோவில் வரப் போவதாகவும், குறிப்பிட்ட இடத்தில் வந்து ஏறிக் கொள்ளுமாறும், இருவரும் ஒன்றாகவே தி.நகர் செல்லலாம் என்று கூறிவிட்டு வெளியே வந்தாள்....

நர்மதா வெளியே வரும்போது, கங்கா ஆட்டோவிற்காக காத்திருந்தாள்... "இங்கப் பாரு... போற வழியில உனக்கு பூ வாங்கி வைக்கலாம்னு இருந்தேன்... நீ கல்யாணப் பொண்ணு.. அதனால கோவிலில் இருந்து வரும்போது பூ வாங்கி வச்சிக்கிட்டு வா... உன்னோட கஞ்ச பிசினாறி தனத்தை பூவுல காட்டாம தலை நிறைய வாங்கி வை.." என்று தன் அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்ததால், அங்கிருந்த கடையில் பூ வாங்கினாள்... கூட யமுனாவும் வரப் போவதால், அவளுக்கும் சேர்த்தே பூ வாங்கினாள்...

பூ வாங்கி முடிக்கும் போது, ஆட்டோ சத்தம் கேட்கவே... இந்த ஆட்டோவை விட்டால் பிறகு எப்போதும் கிடைக்குமோ என்று, அப்போது தான் கிளம்பிய ஆட்டோவை... "ஆட்டோ.." என்று சத்தமாக கூறியப்படி ஓடி வந்தாள்... அந்த ஆட்டோக்க்காரரும் இவள் ஓடி வந்ததைப் பார்த்து நிறுத்தியவர்... "சவாரி இருக்கும்மா.." என்று சொல்லவும்,

"அண்ணா தி.நகர் போகனும்.." என்று இவள் கேட்கவும் சரியாக இருந்தது... அப்போது தான் உள்ளே ஆள் இருப்பதை கவனித்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.