வரும்போது லேட் ஆயிட்டா... அதான் நான் அந்த ரிலேட்டிவ்ட சொல்லி இங்கயே இறங்கிட்டேன். வீட்டுக்கு போயிட்டு திரும்ப வரனும்னா இன்னும் லேட்டாகிடும்ல. நாளைக்க்கு ஸ்வீட்ஸ் கொண்டு வரேன் என்றாள். இனி அடுத்த முறை அவள் இந்த வீட்டிற்க்கு வருவதற்க்குள் என்னென்ன பிரச்சினைகளையோ எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது என்பதை அறியாதவளாக.
ஏற்கெனவே தாமதமாகி விட்டதால் அனிக்காவை வீட்டில் விட தீபன் சென்று வந்தான். தீபனை வரவேற்று பேசிக் கொண்டு இருந்தார் சாரா, அனிக்காவிற்கு தீபன் அங்கிருந்துச் செல்லும் வரை வீட்டில் எல்லாம் சரியாக இருந்ததாகவே தோன்றிற்று. அதன் பின்னால் ஏனோ மனதிற்க்கு சரியாக தோன்றவில்லை.
கிறிஸ்மஸ்ஸிற்காக மதியம் பிரபா வீட்டிற்க்கு சென்றிருந்த கிறிஸ், பிரபா மற்றும் ஹனி மறுநாளே வருவதாக இருக்க, அவர்கள் வீடு வெறிச்சோடியிருந்தது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
வசுமதியின் "சர்வதோபத்ர... வியூகம்...!!!" - சாகசம் + கற்பனை + நகைச்சுவை கலந்த தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
தனியே தூக்கம் வராமல் படுக்கையில் உருண்டுக் கொண்டிருந்த அனிக்கா பக்கத்தில் அம்மா வந்து அமர, வாகாய் அவர் மடியில் படுத்துக் கொண்டாள் அவள்.
அனி நீ ஷாப்பிங்க் போனவ நேரா விட்டுக்கு வந்திருக்க வேண்டியது தானேம்மா. எதுக்கு அத்த வீட்டுக்கு போன? கணவன் தன்னிடம் காட்டிய கோபத்தை மகளிடம் வெளிப்படுத்தாதவராக அமைதியாக கேட்க,
இல்லம்மா நான் மதியமே போறதா இருந்தேன், ஆனா ஷாப்பிங்க்லர்ந்து வரவே லேட்டாயிட்டில்ல அதான் அத்தைக்கு, அத்தானுக்கு எல்லாம் விஷ் பண்ண போனேன். ஏன் இந்த புதிதான கேள்வி என்பது போல திரும்பி தாய் முகம் பார்த்தாள்.
உனக்கு கல்யாணத்துக்கு பேசிட்டு இருக்காங்க குட்டிம்மா. இனிமேல் நீ அங்க எல்லாம் போக வேண்டாம்? ஆஃபீசுக்கும் போகாம இருக்க அப்பா சொல்லிருக்காங்க. இன்னும் கொஞ்ச நாள் தான் நீ நம்ம வீட்ல இருக்க போற, அதுவரைக்கும் அம்மா கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவியாம் சரியா? சொல்லும் முன்பே சாராவின் குரல் தளதளத்து விட்டது.
அம்மா… வென்றவள் அவரை இடுப்பைக் கட்டியவண்ணம் தன்னையறியாமல் வெளியேறிய கண்ணீரை அவர் சேலையிலேயே அழுத்தி துடைத்தாள்.
இருவாரம் கடந்திருந்தது. ரூபனுக்கு விக்ரமிடமிருந்து எந்த தகவலுமில்லை, அவனுடைய தொடர்ந்த முயற்சிகளும் தோல்வியுற அவனோடு ரூபனாலும் தொடர்புக் கொள்ள இயலவில்லை., அவனோ அடிக்கடி இருப்பிடம் மாற்றிக் கொண்டிருந்தான். அவனைக் குறித்து அவனது திட்டங்கள் குறித்து ஒன்றையும் யூகிக்கவும் முடியவில்லை. அவன் ஓரிரு முறை அனிக்காவின் வீட்டிற்க்கு சென்றதாக தகவல் கிடைத்தது. ஆனால், அவனோடு அனிக்கா எங்கும் வெளியில் செல்லவில்லை. அவனோடு மட்டுமல்ல அவள் வீட்டை விட்டு எங்குமே சென்றிருக்கவில்லை. பல்வேறு பிரச்சினைகள், வேலைப் பளு, மற்றும் அனிக்காவைப் பல நாட்களாக பார்க்காமல் ஏறத்தாழ பைத்தியக்காரனைப் போல ரூபன் இருந்த நேரம் தான் அவனுக்கு அந்த தகவல் வந்தது.
ரூபனுக்கு அனிக்காவைத் தர சம்மதமில்லை என்பதாகவும், அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் முடிவாகி இருப்பதாகவும் தாமஸ் ராஜ்-க்கு போன் மூலமாக தகவல் தெரிவித்து இருந்தார்.
தொடரும்
{kunena_discuss:970}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.