(Reading time: 11 - 22 minutes)

வளுடைய கண்ணைத் தொடும் அகல புன்னகைக் கண்டு வழக்கமாய் எழும் ஆசை எழாமல் இப்போது ஆத்திரம் தான் வந்தது. இப்படித்தானே அவனோடும் சிரித்துக் கொண்டு நின்றாள். அறிவு கிடையாதுடி உனக்கு? யாரோடு பேச வேண்டும்? யாரிடம் சிரிக்க வேண்டும்? எப்படி பழக வேண்டும் என்று ஒன்றும் தெரியாது? பச்ச பிள்ளை மாதிரி சிரித்து வைக்க மட்டும் தெரியும்… எண்ணியவன் பற்கள் கோபத்தில் நற நறத்தன.

அவனுக்கு இருந்த பதட்டத்திற்கு இப்போதே அவளை தாலி அணிவித்து மனைவியாக்கி அவனிடமே பத்திரமாக வைக்க தோன்றிற்று. ஆனால், அது முடியாதே………. இவளுக்குத் தான் அப்படி எதுவும் செய்தால் பிடிக்காதே. எல்லாம் முறையாக செய்ய வேண்டுமாம். ஏடாகூடமாக நான் எதையாவது செய்து வைக்க அவள் என்னை வெறுத்து விட்டால் என பயமெழ…… ம்ஹீம் அவனிடம் பெருமூச்செழுந்தது. இவளை எப்படி நான் காப்பாற்றப் போகிறேன்? மனதை மறுபடி ஒருமுறை பயப்பந்து அழுத்தியது. அதே சிந்தனையில் அவர்களைக் கடந்துச் சென்றான்.

“அத்தான் நான் விஷ் பண்ண வந்தேன். ஹாப்பி கிறிஸ்மஸ்” என்றுச் சொல்லி ரூபன் முன் வந்து நின்று அவனிடம் கை நீட்டிய அனிக்காவிற்கு அது வரை ஞாபகம் வராத அவனது பெண்கேட்ட நிகழ்வு அப்போது சட்டென்று ஞாபகத்திற்கு வர என்னச் செய்யவென புரியாமல் திக்கு முக்காடினாள்.

அனிக்காவின் கரம் பற்றி அவளுக்கு வாழ்த்துச் சொன்ன தம்பியையும் ,அவளையும் முதன் முறையாக ஜோடிகளாக எண்ணி கண் நிறையப் பார்த்துக் கொண்டிருந்தான் தீபன். அவர்களைப் பார்க்க பார்க்க அவனுக்கு மிக அழகாக தோன்றிற்று. அவர்கள் ஒருவருக்கொருவர் பேசட்டும் என்றெண்ணியவனாக அங்கிருந்து நகன்றுச் சென்றான்.

“அனி உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றவனாக அவன் தன் அறைக்குள் நுழைய , திருமண விஷயம் குறித்தோவென எண்ணியவளாய் மிக தயங்கி எட்டுக்கள் எடுத்தவளாய் அவன் பின்னே அவளும் உள்ளே வந்தாள்.

என்னத்தான்?.......

அவன் கரத்தைப் பற்றி தன் தலை மேல் வைத்தவன்.

எனக்கொரு பிராமிஸ் செய்வியா? என்றவனிடமிருந்து தன் கரத்தை விலக்கி

நீங்க என்ன லூசா அத்தான்? என அவள் பொறியவும் திகைத்து விழித்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

தன் மேல் சத்தியம் கேட்டது அவளுக்கு பிடிக்கவில்லையோ என அவன் எண்ணியிருக்க,

நம்மளுக்கு பிராமிஸ் செய்யிறதுக்கெல்லாம் பர்மிஷன் கிடையாது அது உங்களுக்கு தெரியாதா? எனச் சொல்ல அவளது ரூல்ஸ் ரெகுலேஷன்ஸ் அவதாரம் குறித்து ஜீவன் சொன்னது அப்போது தான் ஞாபகம் வந்து தொலைத்தது. இனிமேல் சொல்லி முடிக்காம நிக்க மாட்டாளே? சரி திட்டட்டும் கொஞ்சம் திட்டு வாங்கிக்குவோம் என எண்ணிக் கொண்டான்.

நமக்கு காட் பிராமிஸ் அப்படில்லாம் சொல்ல பர்மிஷன் கிடையாது ஏன்னா அவர் நம்மை விட ரொம்ம்ப பெரியவர், அட் தெ சேம் டைம் நம்ம மேல பிராமிஸ் செய்யவும் பர்மிஷன் கிடையாது, ஏன்னா நாம காட் பிள்ளைங்க ஆச்சே, நம்ம மேல நம்மள விட காட் (God)-க்கு தான் நிறைய உரிமை இருக்கு, நமக்கு கிடையாது எனச் சொல்லி முடித்தாள். புரிஞ்சுதில்ல……..என துணைக் கேள்வியும் வேறு கேட்க,

புரிந்ததாக தலையை ஆட்டியவன் ஸாரி இனி பிராமிஸ்லாம் கேட்கலை. அதை விடு நான் எதுவும் சொன்னா நீ கேட்பல்ல, உன் நல்லதுக்குத்தான் சொல்வேன்.

ம்ம்…….

நான் இப்படில்லாம் எதுக்கு சொல்றேன்னு ரீசன் எல்லாம் இப்ப என்னால சொல்ல முடியாது அனிம்மா, ஆனாலும் நான் சொல்றதை நீ கேட்கணும் சரியா…… கொஞ்ச நாளைக்கு நீ தனியே எங்கேயும் போகக் கூடாது? யார் கூடயும் வெளிய போறப்ப அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி யாரையாவது துணைக்கு கூட்டிட்டு போ. நாளைக்கு ஆஃபீஸ் வர்றப்போ ஜீவன் கூட வா, தனியே வராதே ஓகேயா……

ஏறத்தாழ கெஞ்சிக் கொண்டிருந்தவனை எதற்காக இப்படி சொல்கிறானோ? எனப் பார்த்தவள்.

அவன் ப்ளீஸ் எனவும், சரி என்றவாறு அவன் அறையை விட்டும் வெளியேறினாள்.

ற்று நேரமுன்பு வெளியே சென்று விட்டு வந்திருந்த இந்திராவும் , ப்ரீதாவும் அவளை விசாரிக்க அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

தன்னுடைய அறையினின்றே அத்தனையையும் கவனித்துக் கொண்டு இருந்தான் ரூபன். அவன் எதிர்பார்த்தது போலவே அவளது மதிய நேர சம்பவங்களை அவளாகவே சொல்லிக் கொண்டிருந்தாள்.

நான் இங்க வரனும்னு தான் புறப்பட்டேன் அத்தை, அம்மாவும் இங்க கொண்டு வர்றதுக்கு என் கிட்ட கொடுத்து விட கிறிஸ்மஸ் ஸ்வீட்ஸ் எல்லாம் எடுத்து வச்சிருந்தாங்க, நான் வெளியே புறப்படவும் ஒரு வெளியூர் ரிலேடிவ் அப்பாவப் பார்த்துப் பேச வந்திருந்தாங்களா……அவங்களுக்கு ஷாப்பிங்க் செய்ய கூட போய்ட்டு வர ஹெல்ப் பண்ண அப்பா சொன்னாங்க. நம்ம xxx மால் (Mall) க்கு தான் ஷாப்பிங்க் கூட்டிட்டு போனேன்.

நானும் உடனே ஷாப்பிங்க் முடிஞ்சிடும்னு நினைச்சி போனா இவ்வளவு நேரம் ஆச்சு. அவங்க எவ்ளோ ஷாப்பிங்க் பண்ணினாங்க தெரியுமா அத்தே......... நானே டயர்ட் ஆயிட்டேன் ஷப்பா…. ……. லாக்ஸ் ல பில் வந்திருக்கும். நாம ஒரு வருஷம் செய்யிற ஷாப்பிங்க ஒரு நாள்ல செஞ்சிருக்கார். எல்லாம் அவங்க கர்ள் ஃபிரண்டுக்காம்…..கிளுக்கிச் சிரித்தவள்……………… நான் தான் அவங்க கர்ள் ஃபிரண்ட்க்கு ஷாப்பிங்க்கு ஹெல்ப் செஞ்சேன்னு என் ஃபோட்டோ காட்டணும்னு சொல்லி என்னோட செல்ஃபி வேற எடுத்து அனுப்பிச்சார்....என மேலும் சிரித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.