(Reading time: 29 - 57 minutes)

'ரி எதுக்கு குழப்பிக்கிட்டு. நீ அருண்கிட்டே போன் பண்ணி பேசிடேன்...எல்லாம் கிளியர் ஆயிடும் ' ப்ரியா சொல்ல

'ம்???' என்றபடியே யோசனையில் விழுந்தாள் அபர்ணா..

ன்று விஷ்வா அப்பாவின் அறுபதாம் திருமணத்தன்று நிகழ்ந்த நிகழ்வின் நினைவு ஒரு முறை அவளை குலுக்கியது.

அன்று மாலை மொட்டை மாடியில் நின்றிருந்தனர் அருணும் அபர்ணாவும். காலை முதலே அவன் சரியாக பேசாமல் இருக்க அவள்தான் அவனை கட்டாயபடுத்தி தனிமையில் அழைத்து சென்றிருந்தாள்..

'ஸோ.. நீ... யூ...எஸ்... போக மாட்டே இல்லையா???' மறுபடியும் அதே கேள்வியைதான் கொண்டு வந்தான் அருண்.

'ஏன் திரும்ப திரும்ப அதையே கேட்கறீங்க? அதுதான் எனக்கு பிடிக்கலைன்னு தெளிவா சொல்லிட்டேன்தானே???

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

'எந்த காலத்திலே இருக்கே நீ.? அப்புறம் வாழ்க்கையிலே எப்படி முன்னுக்கு வருவே நீ? சும்மா வீட்டுக்குள்ளேயே குண்டு சட்டியிலே குதிரை ஓட்டுவே அப்படித்தானே??? நம்ம ஃபிரண்ட்ஸ் எல்லாரும் நம்மை கேலி பண்ணுவாங்க.

'அதெல்லாம் யாரும் பண்ண மாட்டாங்க. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் சினிமாலே பாடி இருக்கேன். இன்னைக்கு ஈவ்னிங் சாங் ரிலீஸ். உங்க ஃபிரண்ட்ஸ் கிட்டே சொல்லுங்க. பாட்டை கேட்டு பார்க்க சொல்லுங்க..' குரலில் ஆர்வம் பொங்க சொல்லிக்கொண்டே போனாள்  அபர்ணா.

அவன் வியந்து போவான் என்ன பாடல் என்ன படமென கேட்பான் என்றுதான் நினைத்தாள் அவள். ஆனால் அதற்கு நேர் மாறாக சுருங்கிய முகத்துடன் அவளை ஏறிட்டான் அருண்.

'சினிமாலே பாடி இருக்கியா???

'ஆமாம். பாட்டுதானேபா.. இதிலே என்ன இருக்கு??? அவனது முக பாவனையில் கொஞ்சம் திகைத்தவளாக அவனை பார்த்தாள் அபர்ணா..

மனதில் இருப்பதை அவளிடம் தெளிவாக சொல்லி இருந்தால் கூட ஒரு வகையில் நல்லதாக போயிருக்கும். ஒரு வேளை அவள் சினிமாவில் பாடியதுதான் அவனது நிஜமான கோபமா என்று இப்போது தோன்றுகிறது சினிமா என்றாலே ஒரு தவறான எண்ணம் அவனுக்குள் இருக்குமோ???'  அதை வைத்து அவன் மனம் ஏதாவது யோசித்திருக்குமோ???

அவன் சொல்லி இருந்தால் அவனுக்காக இவள் பாடுவதை கூட தொடராமல் விட்டிருக்க கூடும். எதையும் சொல்லவில்லையே அவன்.. சில நிமிட மௌனம் அவனிடம். அவனது முகம் இறுகி கருத்தது போல் கூட தோன்றியது அவளுக்கு.

'என்ன ஆச்சு அருண்..' அவள்தான் மறுபடியும் அவனை கலைத்தாள்.

'ஆங் இல்லை ஒண்ணுமில்லை... நாளைக்கு நீ ஆபீஸ் வரே அவ்வளவுதான். என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் சொல்றபடி கேட்டு நடந்துக்கறே. நான் உன்னோட பி.எல் கிட்டேயும் பேசறேன். நீ யூ. எஸ் போறே.. அவ்வளவுதான்... குரலில் ஏறிய காரத்துடன் அவன் சொல்ல 

'நோ அருண்..' என்றாள் மிக உறுதியான குரலில்.'

இதுவரை அவனை அவள் இவ்வளவு உறுதியாக எதிர்த்து பேசியதில்லைதான். 'இந்த விஷயத்திலே நான் முடிவெடுத்திட்டேன். என்னாலே ஆபிஸ் வர முடியாது..' அவள் முடிக்கவில்லை

எல்லை மீறி போயிருந்தது அவன் கோபம். பளாரென அவன் விரல்கள் அவள் கன்னத்தில் இறங்கியே இருந்தன.சுளீரென்று வலி பிரவாகம். அவனது கோபத்தின் அளவை அந்த வலியில் அவளால் உணர முடிந்தது. உறைந்து போன சிலையாக நின்றிருந்தாள் அபர்ணா.

அடுத்த நொடி 'டேய்... பொறுக்கி ராஸ்கல்... என்ன தைரியம்டா உனக்கு!!! அவன் மீது பாய்ந்திருந்தான் பரத். அவன் எப்போது எப்படி அங்கே வந்தான் என அவளுக்கு புரியவில்லை.

'அவ மேலே கையை வைக்குற அளவுக்கு தைரியம் வந்திடுச்சாடா உனக்கு...' என்றபடியே அவன் சட்டையை பிடித்திருந்தான் பரத்.

'டேய்... நீ யாருடா நடுவிலே. நான் கல்யாணம் பண்ண போற பொண்ணு. அவளை நான் என்ன வேணும்னாலும் செய்வேன்..' அருண் இவனை நோக்கி கை ஒங்க முயல

'என்ன வேணும்னாலும் செய்வியா??? அவளை அடிக்கறது என்ன, எங்கே அவ பக்கத்திலே வா பார்க்கலாம். அதுக்கு அப்புறம் உன் உடம்பிலே உயிர் இருக்காது ... பொறுக்கி ராஸ்கல்...' சொல்லிக்கொண்டே ஓங்கிய அருணின் கையை தடுத்து மடக்கி அவனை அடித்து விட பரத் கை ஓங்கி இருக்க, அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த போதும் அவனை கஷ்டபட்டு அருணிடமிருந்து விலக்கி இருந்தாள் அபர்ணா.

கடுங்கோபத்தில் பொங்கியவனாக இருவரையும் எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு மாடியை விட்டு விறுவிறுவென இறங்கி நடந்தான் அருண்.

தனது கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியாதவனாக எரிமலையின் மொத்த ரூபமாக நின்றிருந்தான் பரத்.

'ச்சே.. ச்சே.. ச்சே..' காலால் தரையை ஓங்கி ஓங்கி மிதித்தான் அவன். 'இவனை போய் எப்படி அபர்ணா லவ் பண்ணே?

அவள் அருகில் வந்து அவன் விரல்கள் பதிந்திருந்த அவள் கன்னத்தை மெல்ல தொட்டுப்பார்த்தான் பரத்.

'ஒண்ணுமில்லை பரத் விடுங்க..' விலகி ஓரமாக சென்று நின்றுக்கொண்டாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.