(Reading time: 29 - 57 minutes)

'ப்போ கொஞ்ச நேரத்திலே எல்லாரும் நம்ம கல்யாணத்தை பத்திதான் பேசுவாங்க. அதுவும் தெரியும் எனக்கு.  நீ கவலைபடாதே  நான் வேண்டாம்னு சொல்லிடறேன்..' எழுந்தான் அவன். 'நான் வரேன் அபர்ணா..'

'நீங்க என்ன வேண்டாம்னு சொல்றது. நான் சொல்லிக்கறேன்.' என்றாள் பட்டென

'அதுக்கில்லைமா..'  

எனக்கு என்ன பண்றதுன்னு தெரியும். என்னை மீறி யாரும் உங்ககிட்டே வந்து கேட்க மாட்டங்க அப்படி யாரவது கேட்டா சம்மதம்னே சொல்லுங்க. மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்...' அவள் குரல் கடுமையாகவே இருந்தது. நான் உன் அன்பிலே தோற்றுவிட்டேன் என்பதை ஏனோ அவனிடம் அப்போது ஒப்புக்கொள்ள தோன்றவில்லை அவளுக்கு.

'ஏன் அபர்ணா??? எல்லாரும் உன்னை கட்டாய படுத்துவாங்கமா. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அதனாலே..'

ப்ளீஸ்..எனக்கு தெரியும் என்னை என் போக்கிலே விட்டுட்டுங்க நான் சொல்றபடி மட்டும் செய்யுங்க ..'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வசுமதியின் "சர்வதோபத்ர... வியூகம்...!!!" - சாகசம் + கற்பனை + நகைச்சுவை கலந்த தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

'சரிடா.. சரி... நீ எப்படி சொன்னாலும் சரி. ஆனா அப்படி அதுக்கு மேலே உன்னை யாரவது ரொம்ப கட்டாய படுத்தறாங்கன்னு தோணிச்சுன்னா எனக்கு ஒரே ஒரு மிஸ்டு கால் கொடு போதும். நான் பார்த்துக்கறேன்.. 

ப்ளீஸ் பரத்... இப்போ என்னை கொஞ்சம் தனியா விடுங்க..' அவள் வெடிக்க  பேசாமல் தலை அசைத்து விட்டு சற்று தடுமாறியபடியே நடந்தான் பரத். அவன் போகும் திசையையே கண்ணீருடன் பார்த்திருந்தாள் அவள்.

அதன் பின்னர்தான் இவன் கடற்கரைக்கு போனதும். அதன் பின்னர் கொஞ்ச நேரம் கழித்து அம்மா, அப்பா விஷ்வாவென அனைவருமே இவர்கள் திருமணம் குறித்து ஏதேதோ சொல்ல அது எதுவுமே அவள் காதில் ஏறவில்லைதான்.

சற்று முன் பரத் பேசிய வார்த்தைகள் மட்டுமே அவளுக்குள்ளே ரீங்காரம்!!!

கடைசியாக சொன்னாள் அவள் 'சரிமா .. நான் கல்யாணம் பண்ணிக்கறேன் பரத்தை!!!'

ஆனால் இரவு முழுதும் அவனுக்கு எதுவுமே சொல்லவில்லை அவள். அவள் அழைப்பாளோ என கைப்பேசியுடனே கழிந்தது அவன் இரவு. இதோ இன்று காலையில் அவன் கையால் புன்னகையுடன் தாலி வாங்கிக்கொண்டிருகிறாள் அபர்ணா..

அதே நேரத்தில் அங்கே சாலையில் மண்டபத்தை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறான் அருண். அப்போது.......அங்கே...... மழை ஈரத்தில் வண்டியின் சக்கரங்கள் சறுக்கிவிட வண்டியுடன் சேர்ந்து விழுந்தான் அவன்.

'திருமணம் முடிந்திருக்குமே!!! அபர்ணாவுக்கும் பரத்துக்கும் திருமணம் முடிந்திருக்குமே..'

அதே நேரத்தில் இங்கே

மெதுவாக அவர்கள் அருகில் வந்தாள் அஸ்வினி. நிச்சியமாக நிறைவான சந்தோஷம்தான் அவளிடம். இந்த திருமணத்திற்காக அபர்ணாவை அலங்கரித்தது முதற்கொண்டு அத்தனையும் ஓடி ஓடி செய்துக்கொண்டிருக்கிறாள் இவள். ஆனாலும் அக்கா அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதுதான் நிஜம்

அக்காவின் கையை பிடித்துக்கொண்டாள் இவள். 'அப்பூ இனிமே நீ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருப்பே பாரேன்...'

..................................

'பரத் எல்லாம் உன்கிட்டே சொல்லிட்டார் போல. ப்ரியா சொன்னாங்க ரொம்ப கோவமா என் மேலே..' குரலில் குற்ற உணர்ச்சி மேலோங்க கேட்டாள் அவள்.

............................................

'ஏதாவது பேசேன் அப்பூ ப்ளீஸ்..' அவள் கெஞ்ச பார்வையை வேறு புறம் திருப்பிக்கொண்டாள் அபர்ணா. வாடித்தான் போனது அஸ்வினியின் முகம்.

'ஹேய்... விடும்மா.. கொஞ்ச நேரம் கழிச்சு பேசுவா.. நான் பேச சொல்றேன். நீ கவலை படாதே..' பரத் சொல்ல தலை அசைத்துவிட்டு இறங்கினாள் தங்கை.

வந்திருந்த விருந்தினர்கள் எல்லாரும் வாழ்த்திவிட்டு நகர, தயங்கி தயங்கி மேடை ஏறினார் அந்த பெண்மணி. அவர் அருண் அம்மா!!! யாருமே, யாருமே அவரை அங்கே எதிர்ப்பார்க்கவில்லை. சில நொடிகள் மேடையில் அப்படி ஒரு அமைதி.

இத்தனை நடந்த பிறகும் அவரை பார்க்கும் மற்றவர்கள் ஆயிரம் கேள்விகள் கேட்க கூடும், அவரது மரியாதை கூட குறையக்கூடும்மென்ற சூழ்நிலை இருந்தபோதும் அவர் அங்கே வந்து நின்றது  எல்லாருக்கும் வியப்பே.

மணமக்கள் அருகில் வந்து நின்றார் அவர். 'நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருக்கணும்..' அட்சதையை தூவி வாழ்த்தினார் அவர். அவர் விழிகளில் நீரேற்றம். பரத் அபர்ணா இருவர் முகத்திலும் நெகிழ்ச்சி.

'சாரிமா...' என்றார் அவர் அபர்ணாவை பார்த்து. எவ்வளவோ சொன்னேன் நான் அவனுக்கும் அவன் அப்பாவுக்கும். அவங்க யாரும் கேக்கறதா இல்லை. என்னத்தை சொல்ல. எனக்கு கொடுத்து வைக்கலை அவ்வளவுதான்..' என்றார் அபர்ணாவின் கன்னம் தடவி.

'உன் மனசு எவ்வளவு கஷ்டபடும்னு எனக்கு தெரியும். நீ கவலைப்படாதே. உனக்கு இனிமே நல்லதுதான் நடக்கும்..'  அவர் சொல்ல மெல்ல தலை அசைத்ததாள் அபர்ணா.

அதன் பின்னர் எல்லாரிடமும் தலை அசைத்து விடைபெற்றுக்கொண்டு நகர்ந்தார் அவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.