(Reading time: 29 - 57 minutes)

ன்ன தோன்றியதோ, அவளது மனநிலை என்னவாக புரிந்ததோ அவள் தோளை மெல்ல அணைத்துக்கொண்டான் பரத்.

மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை அருணின் நினைவு வந்து அடி மனது கசந்து வலித்தது என்றால் 'இப்படி நில்லு கண்ணம்மா, இங்கே வா கண்ணம்மா, பசிக்குதா கண்ணம்மா' நிமிடத்துக்கு மூன்று முறை அவனது கண்ணம்மா அவளை வருடிக்கொண்டிருந்தது.   

எல்லாரும் சாப்பிட அமர்ந்திருக்க அப்போது ஒலிக்கிறது ப்ரியாவின் கைப்பேசி. அழைத்தது அருண்.

'அபர்ணா என்ன பண்றா???'

'என்ன வேணும் அருண் உங்களுக்கு அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு..' என்றாள் ப்ரியா அடிக்குரலில்.

'எனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு... ஹாஸ்பிட்டல்லே இருக்கேன் தெரியுமா அவளுக்கு...'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

'பேசற அளவுக்கு தெம்பாதானே இருக்கீங்க..' என்றாள் ப்ரியா சட்டென. இப்படி ஒரு பதிலை அருண் எதிர்ப்பார்க்கவில்லை.

'எனக்கு அவகிட்டே பேசணும்...'

'சாரி அருண் இப்போ முடியாது..' அழைப்பை துண்டித்தாள் அவள். அவன் நோக்கம் கொஞ்சம் புரியத்தான் செய்தது ப்ரியாவுக்கு..

'வேண்டாம் இப்போதைக்கு அபர்ணாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம் ' கைப்பேசியை அணைத்தும் விட்டிருந்தாள் அவள்

அதன் பின் அலுவலக நண்பர்கள் யாரும் அபர்ணாவை நெருங்காதாவாறு கவனித்துகொண்டு எல்லாரையும் அழைத்துக்கொண்டு மண்டபத்தை விட்டு கிளம்பி இருந்தாள் ப்ரியா.

சில மணி நேரத்தில் அபர்ணாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர் புது தம்பதியினரும் அவர்கள் பெற்றவர்களும்.

அம்மாவின் புன்னகை கலந்த ஆரத்தி அவர்களை வீட்டுக்குள் வரவேற்றது. இதுவரை பெரிதாக தனிமை எதுவும் கிடைத்து விடவில்லை இருவருக்கும். இருந்தாலும் அவனது கண்ணம்மா மட்டும் அவளை தொடர்ந்துக்கொண்டே இருந்தது.

எல்லாருடனும் கலகலவென பேசிக்கொண்டிருந்து விட்டு இரவு உணவை முடித்துவிட்டு

'டேக் ரெஸ்ட் கண்ணம்மா. பீ ரிலாக்ஸ்ட். மத்ததை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் அவள் கன்னம் தட்டி புன்னகைத்து விட்டு பரத் மாடிக்கு சென்று விட எல்லாரும் அவரவர்கள் உறங்க சென்று விட்டிருந்தனர்.

எதுவுமே புரியாமல் வழக்கம் போல் தனது அறைக்கு வந்தாள் அபர்ணா. வழக்கம் போல் அருகில் வந்து படுத்துக்கொண்டார் அம்மா.

'என்ன திருதிருன்னு முழிக்கறே??? அவ மனசு நம்ம எல்லாருக்கும் தெரியும். என் பொண்டாட்டியை யாரும் தொந்தரவு பண்ணாதீங்க. அவ முதல்லே ரிலாக்ஸ் ஆகட்டும். அதுக்கு அப்புறம் மத்த ஏற்பாடு எல்லாம் பார்த்துக்கலாம்..' அப்படின்னு மேலிடத்து ஆர்டராம். உங்க அப்பா சொன்னார். அதனாலே தூங்கு..' சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு படுத்துவிட்டார் அம்மா.

இன்றைய இரவுக்கான அலங்காரங்களும் சம்பிரதாயங்களும் அவள் மனதை நிறையவே கீறிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கும். அதை அவன் அழாகாய் புரிந்துக்கொண்ட விதம் அவளுக்கு ரொம்பவே பிடித்தது  அவனது உண்மையான அன்பிற்கு இது இன்னுமொரு சான்று.

சின்ன புன்னகையுடன் கட்டிலில் சாய்ந்தவளின் காதுகள் ஏனோ அவன் 'கண்ணம்மாவை' தேடின.  அடி மனதில் சுருக்கென்று ஏதோ ஒன்று தைத்தது.

'நேற்று வரை அந்த 'கண்ணம்மா' உனக்கு பிடிக்கவில்லை. நேற்று மாலை வரை அருணுக்காக காத்திருந்தாய். இன்று பரத்தா??? எப்படிப்பட்ட பெண் நீ???

'இவளை கட்டிக்கிட்டு நான் என்ன பண்ண..' என்றானே அவனை நினைத்து நான் அழுதுக்கொண்டு கிடக்கவா???

'அப்படியே பார்த்தாலும் ஒரே இரவில் எப்படி இப்படி மாறிப்போக முடியும் ஆம். தவறுதான். இது தவறுதான். பெரிய தவறுதான். வேண்டாம் எனக்கு கண்ணம்மாவும் வேண்டாம் எதுவும் வேண்டாம்'

இப்படியே யோசித்து யோசித்து புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள் அபர்ணா. அசதியில் அசந்து உறங்கிவிட்டிருந்தார் அம்மா.

அருணுக்கும் பரத்துக்கும் நடுவில் அவள் இதயம் எரிந்துக்கொண்டுதான் இருந்தது. அப்போது அவள் கைப்பைக்குள் ஒலித்தது அவள் கைப்பேசி. அருண் காலையிலிருந்து அவளை திரும்ப திரும்ப அழைத்துக்கொண்டிருக்கிறான் என்பது அவளுக்கு தெரியவில்லை. காலையிலிருந்து அதை எடுத்துக்கூடப்பார்க்கவில்லை.

'யாராக இருக்கும் இந்த நேரத்தில்???' என்று யோசித்தபடியே எடுத்தாள் கைப்பேசியை. இப்போது மறுமுனையில் பரத்.

'ஹ.. ஹலோ..'

'க...ண்....ண...ம்....மா'

எரியும் இதயத்துக்கு குளிர் மழையாய் அவன் குரல் வருடல். களுக்கென அவளுக்குள் பூக்கின்றன சந்தோஷ பூக்கள்.

அதே நேரத்தில் வேண்டாம். எனக்கு கண்ணம்மாவும் வேண்டாம். எதுவும் வேண்டாம். கூவுகிறது அவள் மனம். கீழுதட்டை கடித்து தன்னை கட்டுப்படுத்திக்கொள்கிறாள் அபர்ணா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.