(Reading time: 29 - 57 minutes)

ந்த நினைவுகள் ஒரு பக்கம் இப்போது  வந்து அழுத்தின.

'கோபக்காரன். அருண் பெரிய கோபக்காரன். அவ்வளவுதான். உன்னை அப்படி எல்லாம் விட்டுவிட மாட்டான்.  அஸ்வினி ஏதாவது சொல்லி இருக்க கூடும். அந்த வேகத்தில் அவனும் ஏதாவது சொல்லி இருக்க கூடும். வருவான். இன்னும் சில மணி நேரங்களில் ராஜாவாக வந்து இறங்குவான்.' இன்னொரு பக்க மனம் அறுதியிட்டு கூறியது.

'என்ன அபர்ணா போன் பேசி பாரேன்..' மறுபடியும் சொன்னாள் ப்ரியா.

'வேண்டாம் ப்ரியா..'பார்ப்போம்.. என்ன நடக்குதுன்னு. எனக்கு நம்பிக்கை இருக்கு அருண் வருவார்னு...' உறுதியாக சொன்னாள் அவள்.

'இவளை கட்டிக்கிட்டு நான் என்ன பண்ண??? அந்த வார்த்தைகள் மறுபடியும் குத்தின அவளை.

'இல்லை அதெல்லாம் கோபத்தில் வரும் வார்த்தைகள். 'வருவான் அருண் நிச்சியமாக வருவான்!!!!

அந்த நேரத்தில் அவளை அழுத்திய இன்னொரு விஷயம் பரத். 'இதற்கெல்லாம் காரணம் பரத்தா???

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

யோசித்தபடியே அவள் வெளியில் வர மேடையில் அவன் அபர்ணா வெட்ஸ் அருண் என்ற பெயரை பதித்துக்கொண்டிருக்க உயிர் வரை வலித்தது அவளுக்கு.

செய்வதையும் செய்துவிட்டு இப்போது பெயரையும் அலங்கரித்துக்கொண்டிருக்கிறானே இவன். இவனும் இவ்வளவுதானா??? அவனால் இப்படி எல்லாம் செய்ய முடியுமா??? அவனால் எனக்கு துரோகம் செய்ய முடியுமா???

நேரம் கடந்துகொண்டே இருந்தது. ஆனால் அப்போதும் அருண் மீதிருந்த நம்பிக்கை மட்டும் கரையவில்லை அவளுக்கு.

'என்ன ரொம்ப பயந்துட்டியா??? ப்ரியா உன்கிட்டே சொல்லி இருப்பான்னு தெரியும். சும்மா கொஞ்ச நேரம் உன்னை டென்ஷன் பண்ணலாம்னுதான். நான் கோவக்காரன்தான் மா ஆனா உன்னை ஏமாத்த மாட்டேன் எப்பவும்..' சொல்வான் பார்!!! இப்போது வந்து சொல்வான் பார்!!! திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டாள் அவள்.

மாலை வந்தது. மழையும் வந்தது. ஆனால் அருண் மட்டும் வரவில்லை. 'அருண் கண்டிப்பாக வந்துவிடுவான்' என்ற அவளது நம்பிக்கை கோட்டையில் விழுந்தது பேரிடி. மன அழுத்தத்தை தாங்க முடியமால் மயங்கி விழுந்தாள் அவள்.

அதன் பின் அவள் கண்விழிக்க. அவரவர்களுக்கு தெரிந்ததை அவரவர்கள் பேசிக்கொண்டிருக்க, இடையில் வந்தாள் அஸ்வினி

'அப்பா இந்த கல்யாணம் நின்னு போனது ஒரு வகையிலே நல்லதுதான். அருண் அபர்ணாவை கை நீட்டி அடிச்சதை நான் கண்ணாலே பார்த்தேன்...' சொல்லியே விட்டாள் அவள்.

என்னது அடிச்சானா???'

'அபர்ணா இவ சொல்றது நிஜமா???'

ஆம்..' என அசைந்தது அபர்ணாவின் தலை,

'எப்போ??? எப்போ நடந்தது இது???. ஏன் என்கிட்டே சொல்லலை..' சரேலென ஏரிய உச்சகட்ட கோபத்தில் எகிறினார் அப்பா. சலனமில்லாமல் அமர்ந்திருந்தாள் அபர்ணா. அஸ்வினியும் பதில் பேசவில்லை.

'அடிச்சானா??? கை நீட்டி அடிச்சானா என்கிட்டே சொல்லி இருந்தா அன்னைக்கே....... அன்னைக்கே கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன். பொறுக்கி.!!! பொறுக்கி அவன்!!! கத்திக்கொண்டிருந்தார் அப்பா. அப்பா இவ்வளவு கோபப்பட்ட தருணங்கள் மிகக்குறைவு..

'அப்பா.. கொஞ்சம் நிதானமா இருங்க..' அபர்ணா சொல்ல

'அவ்வளவுதான். அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு. இனிமே அவன் வந்தாலும் இந்த கல்யாணம் நடக்காது...' என்றபடியே அபர்ணாவின் அருகில் அமர்ந்தார் அப்பா. அவள் முகம் பார்க்க அவர் குரல் இறங்கி கரைந்தது.

'எதுக்குடா அடிச்சான் உன்னை??? ரொம்ப வலிச்சதாடா..' கேட்டவரின் கண்ணில் கண்ணீர் ஏற்றம். அப்பா அழுது இதுவரை பார்த்தே இல்லை பெண்.

'அப்பா... என்னபா நீங்க..; அவள் குரலும் கரைய

மெல்ல சொன்னார் அப்பா 'நடந்தது எல்லாம் நல்லதுக்குதான். நீ என் பொண்ணுடா உன்னை அவனோட அனுப்பி விட்டுட்டு அவன் உன்னை அடிச்சானோ நீ எப்படி இருக்கியோன்னு தினம் தினம் பயந்திட்டு வாழ முடியாதுமா அப்பாவாலே...'

'இங்கே பாருங்க. நான் ஒண்ணு சொல்றேன். இவளை பேசாம பரத்துக்கு கொடுத்திடுங்க. அவன் அவளை நல்லா பார்த்துப்பான்..' இது அம்மா. அவருக்கு அவசரம்.

'அம்மா..' சட்டென பாய்ந்தாள் அபர்ணா. ''ப்ளீஸ்.. எல்லாரும் கொஞ்ச நேரம் வெளியே இருங்க. என்னை தனியா விடுங்க..'

'எல்லாரும் விலகி வெளியே செல்ல கதவை சாத்திக்கொண்டு ப்ரியாவின் அருகில் வந்து அமர்ந்தாள் அவள்.

வெளியே இடியும், மழையும் போட்டிப்போட்டு விளாசிக்கொண்டிருக்க 'முடிந்து போனதா??? எல்லாமே அவ்வளவுதானா??? குமுறியது அவள் உள்ளம்.

மனம் ஒரு முடிவுக்கு வர அவசரம் அவசரமாக அருணின் எண்ணுக்கு முயன்றாள் அபர்ணா.

'சுவிட்ச்டு ஆஃப்..'

இரண்டாவது முறை மூன்றாவது முறை அதே பதில். அவளை, அவர்கள் வீட்டு அழைப்பை தவிர்ப்பதற்காகவேதானே இப்படி செய்து வைத்திருக்கிறான்!!! நன்றாக புரிந்தது அவளுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.