(Reading time: 19 - 38 minutes)

நாம் எதை நினைக்கிறோமோ அதுவே செயலாகும்! இது அஞ்சனாவுக்கும் பொருந்தும்! அடி முதல் நுனி வரை காதல் மீது அலாதி ஆர்வம் கொண்டிருந்தவள்... இப்பொழுது அந்த காதல் மீதே காதலானாள்.

தன் மனதை அவனிடம் சொல்லி விட வேண்டும்.. அதை வெளிப்படுத்துவது எப்படி என்று பலவாறாக யோசித்து.... அன்றைய இரவின் தூக்கத்தை தொலைத்தவள்.. விடிந்தும் விடியாமலும் வீட்டின் முன் புறம் இருந்த தோட்டத்திற்குள் புகுந்தாள்.

ஷைலஜாவிற்கு தோட்டக்கலையில் மிகுந்த ஆர்வம் என்பதால் அவர் போட்டிருந்த பல வர்ண ரோஜா செடிகளை வளர்த்திருந்தார். மார்கழி பனி படர... மலர்ந்தும் மலராத ரோஜாக்களைக் கண்டதும்... ஆர்வக் கோளாறில் முதலில் ரோஜாக்களை கையாலே பறிக்க முயல... அதுவும் நான் அவ்வளவு எழுதில் வருவேனா என்று மல்லுகட்டி தன் முட்களால் பதம் பார்த்து விட்டு தான் வந்தது.

பார்க்க மென்மையாக ரோஜாவிற்கே இத்தனை அழுத்தம் இருக்கும் என்றால், மனிதனுக்கு எப்படி இருக்கும்? அவசர அவசரமாக பறிக்க நினைத்தால் அவள் தான் காயம் பட்டு போவாள் என்பதை அறியவே இல்லை அவள்!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

சிறு காயத்தைக் கூட பொறுக்க முடியாதவளுக்கு... முள்ளின் கீறல்களும் பொறுக்க முடியவில்லை தான்.

‘அவன் அவன் லவ்க்காக உயிரையே கொடுக்கிறான்! இத்தூனூன்டு ஸ்க்ராட்ச்சை தாங்க மாட்டியா அஞ்சு! அஞ்சாதே அஞ்சு! காதல் என்றால் காயம் தானே? ஊதி தள்ளு!’

வீர வசனம் பேசி்க் கொண்டாலும்... ரிஸ்க் எடுக்காமல் அடுத்து கத்திரிக்கோலின் துணை கொண்டு ஒரு கொத்து பூக்களை பறித்துக் கொண்டு வந்தாள்.

எழுந்ததும் கடலை தேடி ஓடுபவள்... என்றும் இல்லாத அதிசயமாக பூக்களோடு தோட்டத்தில் இருந்து வருகிறாள் என புருவ முடிச்சிட அவளை எதிர் கொண்ட சைலஜாவைப் பார்த்ததும்,

“பொக்கே செய்யப் போறேன் ஆன்ட்டி”,

செய்தி போல சொல்லிக் கொண்டே வந்தவள்... அப்படியே தரையில் அமர்ந்து.... பறித்த வந்த பல வர்ண ரோஜாக்களின் இடை இடையே இலை தளைகளை சேர்த்து  அழகிய பூங்கொத்தாக கட்ட ஆரம்பித்தாள்..

உள்ளங்கை கீறல்களில் அவை உரசும் போதெல்லாம் காந்தல் எடுக்க...  கையை ஊதி ஊதி விட, என்னவென்று கேட்ட சைலஜாவிடம், அந்த காயத்தின் வரலாற்றை சொல்லிக் கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தவளுக்கு,

பாவப்பட்டு உதவ வந்த சைலஜாவை , “இது முழுக்க முழுக்க என் சொந்த உழைப்பாக இருக்கணும்!”, என்று வசனம் பேசி தடுக்க... 

“யாருக்கு குட்டி இவ்வளோ கஷ்டபட்டு பொக்கே பண்றே??”,

கேட்டதும், அவரை நோக்கி நிமிர்ந்தவள், “என் லவ்வருக்கு சைலு ஆண்ட்டி!”, என்று கண்கள் மிளிர குறும்பாக சிரித்து கண் சிமிட்ட..

அவருக்குள் திகைப்பு உண்டான மறு கணமே, இப்படி சொல்லிட்டு தான் குடுப்பாங்களாக்கும் என்று எண்ணி சிரித்து விட்டவர்,

“லவ்வரா! சரியான வாலு”, என்று அவள் காதை திருக....

“ஸ்ஸ்ஸ்ஆஆஆ.. “ என்று கத்த, அந்த சமயம் பார்த்து கமிஷனர் அவர்களை நோக்கி வருவதைக் காணவும்...

சைலஜா ரகசியமாக இவளிடம், “இந்த ஜோக்கை மட்டும் சொல்லிடாதே அவர்கிட்டே! சிரிச்சே கொன்றுவார்”

என்றதும் அவளும் அவரை போலவே ரகசியமாக,  “ஆன்ட்டி இது ஜோக் இல்லை சீரியஸ்!!!”, சொல்லி முடிக்கும்  முன்னே அவர்கள் முன் வந்து நின்ற கமிஷனர்,

“இனி ஆபிஸ்க்கு உன் காரிலே போகலாம் குட்டி! செக்யூரிட்டி அரேஞ்மென்ட்ஸ் செய்துட்டேன்!”, என்றார் தீவிரமாக! தங்கள் உரையாடலை கவனிக்கும் நிலையில் கூட இல்லை என்பது இருவருக்கும் புரிய,

‘செக்யூரிட்டியா???!!!’, என்று விழித்த அஞ்சனாவிடம்... அதே தீவிர முக பாவனையில், 

“அது உன் சேஃப்டிக்காக! அவங்க உன் காரை ஃபாலோ பண்ணுவாங்க. அவ்வளோ தான். உனக்கான ப்ரைவசி இருக்கும்!”

என்ற கமிஷினர், “கவனமாக இருங்க”,  என்று தன் கண்களாலே மனைவிக்கும் எச்சரிக்கை செய்து விட்டு கிளம்பி சென்று விட்டார். ஏதாவது மிரட்டல் வந்திருக்கும் அதற்கு பழக்கபட்ட சைலஜாவிற்கு நம் வீட்டில் இருப்பதால் அஞ்சனாவுக்கும் சிரமம் என்று நினைத்துக் கொள்ள.. அவளோ,

‘ஆர்யா சொன்னதாலே செக்யூரிட்டி அரேஞ்ஜ் செய்து இருக்கிறார் போல’, என்று அதைப் பற்றி பெரிதாக எதையும் யோசிக்காமல் அலுவலகத்திற்கு கிளம்பி சென்றாள்.

அங்கே மேக்ஸ்சாஃப்ட்டில், அஞ்சனா ஹர்ஷவர்தனின் உறவு பெண் என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டிருந்தது. அவள் ஃபிலோமினா  கும்பலோடு பப்பிற்கு சென்று பொழுது அவர்களுக்குள் உண்டான பிரச்சனையில் ஹர்ஷ் அந்த கும்பலை வேலை நீக்கம் செய்து விட்டான் என்பது தான் பேச்சாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.