(Reading time: 19 - 38 minutes)

26. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

Puthir podum nenjam

"நான் சொன்ன டர்ன் ஓவர் இந்த  அத்தியாயத்தில் இருந்து துவங்குகிறது. இனி கதை விறுவிறுவென்று நகர ஆரம்பிக்கும் படித்து விட்டு மறவாது உங்கள் கருத்துக்களை பகிருங்கள் தோழமைகளே!"

புதிர் 26

டந்த காலம்:

பூவிற்கெல்லாம் சிறகு முளைத்தது என் தன் தோட்டத்தில்!

முள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்!!!

டிசம்பர் 15, வெள்ளிக்கிழமை

அந்த நாளில்..  சசியிடம் தங்கள் காதலின் அடுத்த பரிணாமத்தை வெளிபடுத்திய முகுந்த்,  இரண்டு மாதத்திலே தங்கள் திருமணம் என்று அனைவர் முன்னும் அறிவிக்க...

அதுவரை பரணியை பார்த்த பூரிப்பில் நிலை கொள்ளாமல் தவித்த அஞ்சனாவின்  மனம்..  முகுந்த்தின் இந்த அறிவிப்பில்... அவர்கள் பக்கம் திரும்பி.. இருவருக்கும் உற்சாகமாக தன் வாழ்த்தைத் தெரிவிக்க....

இவளைக் கண்ட முகுந்த் “ஹே.. எங்கே நீ எடுத்த போட்டோஸ் காட்டு”,

என்றதும் முழித்தாள்! இவள் தான் பரணியைப் பார்த்த படி நிகழ்வை நிழல்படுத்த தவறியிருந்தாளே!!!

“அது போன்லே செட்டிங் மாறி இருந்ததா... ஸாரி! மறுபடியும் ஒரு போஸ்”,

ஒருவாறு சமாளித்து, அவர்களை படம் பிடித்து முடித்ததும்,

“ஆப் டீம் னே ஆர்சி அசைன் கர்தா”, என்று சொல்லிக் கொண்டே தினேஷ், சசியிடம் பரணியை காட்ட,  அவள் அருகிலிருந்த முகுந்த் பொசு பொசுப்புடன் பரணியைப் பார்த்தான். இவன் உரசி பார்த்த தங்கத்தை ஆர்யமன் அபகரித்து விட்டானே!!

அஞ்சனாவிற்கோ இதை கேட்டதும்  சந்தோஷத்தில் பேச்சே வராது

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேவதி சிவாவின் "வரத்தினால் பெற்ற சாபம்" - சமூக பார்வைக் கொண்ட தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

‘‘பெல்லி பாய் ஆர்யா மூலம் என் டீம்க்கே கூட்டி வந்துட்டாரே!’, என்று

மலர்ந்தவளாக வேக வேகமாக அவர்களை நெருங்கிய அஞ்சனா,

“இவரை தெரியுமே? பேரு கூட பரமேஷ் தானே???”,

சசி தினேஷ்ஷிடம் ஆரம்பித்து பரணியிடம் கேள்வியை வைத்த பொழுது, அவர்கள் உரையாடலில் முந்திரி கொட்டையாய் இடையிட்ட அஞ்சனா,

“பரமேஷ்ஷா.. அவர் பரணிதரன், பரணி நட்சத்திரம், மேஷ ராசி”, அவனை பார்த்து படி புன்னகையுடன் ஒப்பிக்க, திகைப்பும்.. வியப்புமாக... இவளை நோக்கிய சசி,

“நானே பேரை மறந்துட்டேன். நீ என்ன ஜாதகமே தெரிஞ்சு வைச்சிருக்கே!”,

அதற்கு பதில் சொல்ல அஞ்சனா வாய் திறந்த பொழுது, சரியாக அலைபேசி சிணுங்க.... அது கமிஷனரின் அழைப்பு என்றதும்,  தவிர்க்க முடியாதவளாக...

“அதெப்படி தெரியும்ன்னு.. கீப் கெஸ்ஸிங்!!!” என்று சசியிடம் சொல்லி விட்டு பரணியைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு கூட்டத்தில் இருந்து விலகி சென்றவள்....

அடுத்த சில நிமிடங்களிலே அலறலுடன் ஓடி வந்தாள் சசியை நோக்கி...

“சசி உடனே ஹாஸ்பிட்டல்ல ட்ராப் பண்ணு”, என்று!!!

டிசம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு நாட்கள் கழித்து...

“இன்னைக்கு பிள்ளை கண் விழிச்சு ஒத்த வார்த்தை பேசின பிறகு தான் உசிரே வந்திருக்கு! முழிச்சதும் ஸ்ருதிகிட்ட எதுவும் சொல்லாதேங்கிறதை பார்த்தியா? தங்கச்சின்னா அவ்வளோ உசிரு!"

மருத்துவ உபகரணங்கள் சூழ படுக்கையில் இருந்த ஸ்ரீவாசனை பார்த்துவாறு சொன்னார் அவன் அன்னை!

இன்று தான் அவர் முகத்திலே சிறு தெளிவு தெரிவதை பார்த்திருந்த அஞ்சனா,

“அதுவும் சரி தானே! ஸ்ரீ ஸார் நல்லா தேறின பிறகு ஸ்ருதிகிட்ட சொல்லுங்க! சின்ன பொண்ணுல பயந்துடுவாங்க!”, என்று அஞ்சனாவும் ஆறுதலாக தன் அறிவுரையை கலக்க...

“ஆமா.. இதை இந்த பெரிய மனுஷி சொல்றாங்க”, என்று சொன்னவாரே அந்த நேரம் அங்கு வந்த கமிஷனரும் அவர்கள் பேச்சில் இணைய,

அஞ்சனா அவரை முறைக்கவும், இடி சிரிப்பு சிரித்து அங்கிருந்த அத்தனை பேரையும் கலங்கடித்த கமிஷனர், பின் அஞ்சனாவிடம் திரும்பி,

“சரி குட்டி, அவங்க ரிலேட்டிவ்ஸ் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சிட்டாங்க.. நீ கிளம்பு!”

என்றார். தேவையில்லாமல் மற்றவர்கள் கேள்விக்கும் பார்வைக்கும் ஆளாக வேண்டாம் என்ற நினைப்பில் அவளை கிளப்புவதே குறியாக இருந்தார்.

ஸ்ரீ வாசன் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை உடன் நடத்த வேண்டும் என்ற சூழ்நிலையில் தான் வேறு வழியின்றி அலுவலகத்தில் இருப்பவளிடம் விவரத்தை சொன்னதே! 

விஷயம் காதுக்கு எட்டியதுமே, சடுதியில் தன் மாமனிடம் பேசி, அவர் சொன்ன நிபுணரை மருத்துவமனைக்கு வரவழைத்தவள்,

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ஆபத்து கட்டத்தை தாண்டி விட்ட பொழுதும் தன் மகன் கண் விழித்தால் தான் நிம்மதி என்று பரிதவித்த பெற்றோர்களைக் கண்டதும், கமிஷனருடன் கிளம்ப மறுத்து அவர்களுக்கு துணையாய் அங்கேயே  இருந்தாள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.