(Reading time: 19 - 38 minutes)

தன் விளைவு, பனை மரத்திற்கு கீழ் நின்று பால் குடித்த கதையாக அஞ்சனாவின் பெயரும் சேர்ந்து கெட்டது! அவளது டீம்மில் உள்ளவர்கள் பெரும்பாலும் அவளைப் பற்றி நல்ல விதமாகவே அறிந்து வைத்திருந்தாலும், அந்த சம்பவம் என்னவோ நடந்திருக்கு என்ற ஒரு சந்தேகத்தை விதைத்து தான் இருந்தது.

பரணியை பார்க்கும் ஆர்வத்தில் அலுவலகத்திற்கு வந்தவள் முன் முதலில் எதிர்பட்டது சுகுமார் தான்.  தன்னைப் பார்த்ததும்,

“என்ன ஓனரம்மா? வெள்ளிக்கிழமையே உங்களை ரிலீவ் பண்ண சொல்லி இருந்தாரே ஹர்ஷ்! பழக்க தோஷத்தில் கிளம்பி வந்துட்டீங்களா?”

என்று அவன் விசாரிக்கவும் தான் ஹர்ஷ்ஷை பற்றிய நினைவு வந்தவளாக,

“ஹைய்யோடா!!”, என்று பாவனையாக சொன்னவள்...

“குதிரட்ட சொல்ல மறந்துட்டேன்!!!” என்று பையில் இருந்த அலைபேசியை எடுக்க பரபரத்து கையில் இருந்த பொக்கேயை அவனிடம் நீட்ட..

“பொக்கே யாருக்கு?”, என்று கேட்டவாறு அதை வாங்கிக் கொண்டவன்,

“என் லவ்வருக்கு”, என்றவளின் பதிலில் திகைத்து பின் வாங்க.... அவன் பீதியைக் கண்டு கலகலவென்ற சிரிப்புடனே....

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“ஒழுங்கா காஞ்சனான்னு கூப்பிடுங்க.... ஓனரம்மான்னா லவ்வர் டாஸ்க் தான்!”,

என்றவளின் போலியாக மிரட்டலில் மிகப்பெரிய பெரிய கும்மிடு போட்டு,

“கருணை அன்பே.. காஞ்சனா முனியே..”, என்று பாடிக் கொண்டே சுகுமார் அவளை கடந்து செல்ல....

அதைக் கண்டு தாள முடியாமல் சிரித்தவாறு ஹர்ஷ்ஷை அலைபேசி அழைத்தவள் பார்வையில்.... பரணி!!!!

சசி தான் அவனுக்கு ஏதோ விளக்கிக் கொண்டிருந்தாள்!  அவனைக் கண்டதும், ஹர்ஷூடன் பேச நினைத்ததை கைவிட்டவளின்  நிலை கொள்ளாத கால்கள்... 

அவனை உற்சாகமாக அழைத்தவாறு அவனை நெருங்கி இருந்தது. அவள் தன்னை அழைக்கக் கண்டு படபடப்புடன்

“எஸ் மேம்”, படக்கென்று எழுந்தே நின்று விட்டான்.

அது மரியாதையினால் அல்ல! ஃபிலோமினா சொன்னதை கேட்டு அவளை மிகவும் கீழே தான் நினைத்திருந்தான். இவள் பின்புலம் அறிந்த பின் உண்டான  பயம்  அவனை எழுந்து நிற்க வைத்தது.

முதலில் திகைத்து பின் சிரிக்க ஆரம்பித்த அஞ்சனாவின் சிரிப்பில் இணைந்த சசியும் அவனைப் பார்த்து,

“என்ன பரணி உங்க லீட் என்னை சசின்னு கூப்பிடுறீங்க.. ஃப்ரஷர் அவளை போய் மேம்ன்னு சொல்றீங்க”, என்று கிண்டல் செய்ய..

இருவரையும்  “ஞே”வென்று முழித்தவனை பார்த்து புன்னகையுடன்,

“ஸ்டே கூல் மேன்! பிலேட்டட் விஷ்ஷஸ்...”, என்ற வாழ்த்தி பொக்கேயை கொடுத்த அஞ்சனாவை வியப்பாக பார்த்த சசி,

“அன்னைக்கு ஜாதகம் சொல்றே! இன்னைக்கு பொக்கே? தெரியுமா இவரை?”,

என கேட்டதும், அவளை நோக்கி முகம் பிரகாசிக்க,

“கோவில்ல பார்த்தேன்!”,

சொல்லி விட்டு, பரணியைப் பார்த்து,

“உங்களுக்கு நினைவில்லையா பரணி? நவசக்தி விநாயகர் கோவில், நவம்பர் சிக்ஸ்டீன்த்.... நீங்க அர்ச்சனை செய்ய சொல்றப்போ உங்க முன்னாடி தான் நின்னேன். பீச் ஸ்கர்ட்.. ஒயிட் டாப்.. நீங்க கூட என்னை பார்த்தீங்க......”

ஒரு எதிர்பார்ப்போடு அவனைக் கேட்க,

அவள் ஸ்கர்ட் டாப் என்றதும்.. லேசாக நினைவிற்கு வந்தது. பின் தங்கையை அந்த உடையை போடக் கூடாது என்று அவளைப் பார்த்த பின்னர் தானே!

‘அவளா இவ??’

திகைப்புடன்  கூர்ந்து கவனித்தவனுக்கு, ‘அதானே! இது எப்படி கேஸ்ன்னு பார்த்த அன்னைக்கே வந்த டவுட் சரியா தான் இருக்கு! எதுக்கும் இரண்டு அடி தள்ளியே நிற்கணும்!’

எண்ணியவனாக, 

“இல்லைங்க.. எனக்கு எதுவும் நினைவில்லை”, என்று முடித்து சசியிடம் ஏதோ சந்தேகம் கேட்பது போல வேறு பேச்சிற்கு தாவி விட்டான்.

அவன் தெரியாது என்றதிலே அஞ்சனாவிற்கு மனம் விழுந்து போனது!

‘என்னைப் போல இவனுக்கு எதுவும் தோணலையா? அப்போ இது லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் இல்லையா?’

தன் காதல் கோட்டை தகர்வது போல இருக்க  எப்படியேனும் அதை தக்க வைக்கவே மனம் விழைந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.