(Reading time: 19 - 38 minutes)

வனுக்கு அந்த ஃபீல் இல்லைன்னாலும், எனக்கு அந்த ஃபீல் இருக்கே! என் காதலை புரிந்ததுனா.. ஹி டூ வில் ஃபால் இன் லவ்! எஸ்!!!’

என்று உறுதியாக எண்ணி தன் மனதை அவனிடம் சொல்லி விட துடித்தவளுக்கு, அவனிடம் தனிமையில் பேசும் வாய்ப்பு அமையவில்லை.

அன்று மாலையில் வீட்டிற்கு போகும் முன் பேசி விட வேண்டும் என்ற நினைவிலே பாத்ரூம் சென்று விட்டு வந்தவள் தன் உடைமைகளை எடுத்தவாறு அவன் இருக்கையை பார்க்க.... அவன் அங்கு இல்லை!

அவன்  வீட்டிற்கு போய் விட்டான் என்பதை சசியிடம் விசாரித்து அறிந்ததும் வெறுமையுடன் அவன் இருக்கையை தழுவியவள் பார்வை... டெஸ்க்கிலே அனாதையாக கிடந்த  பூங்கொத்தில் நிலைத்து அதிர்ந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“ஹய்யோ.. என் பொக்கேவை விட்டுட்டார்!”, என்று  பதறியவளைக் கண்ட சசி,

“ப்ச்.. இதுக்கு ஏன் இவ்வளோ ஷாக்?? ஆபிஸ் வாசலை கூட கடந்து இருக்க மாட்டார். இரு கால் பண்றேன்!”,

என்று சொல்லி முடிக்கும் முன்னே அதை எடுத்துக் கொண்டு விழுந்தடித்து ஓடியவளை கண்டு , “இவளுக்கு என்ன ஆச்சு”, என்பது போல சசி புரியாமல் பார்த்தாள்.

கட்டிடத்தை விட்டு வெளியே ஓடி வந்தவள்... பார்வையால் நாளா பக்கமும் தேடி சல்லடை போட்டு  தேடி அவன் பார்க்கிங் லாட்டில் வண்டியை கிளம்புவதைக் கண்டதும்,

பரணி!!!!!” என்று கத்திக் கொண்டே அவன் முன் வரவும்...  அவள் கையில் இருந்து பூங்கொத்தைக் கண்டதும்... சட்டென்று பைக்கில் இருந்து இறங்கியவன் வேக வேகமாக மன்னிப்பு கோரினான்.

“ஸாரிங்க! தப்பா நினைச்சுக்காதீங்க! மறந்துட்டேன்!”, என்றவாறு  பவ்யமாக வாங்கிக் கொண்டவனுக்கு அவளிடம் பேசவே பயமாக இருந்தது!

‘இவன் ஏன் பேசவே பயந்து சாகுறான்’, என்றிருந்தது அவனை கண்டவளுக்கு..

“வேணும்னா மறக்க போறீங்க!!! போனதும் ஒரு வேஸ்ல போட்டு வைங்க.. அப்போ தான் வாடாம இருக்கும்!”,

அவனை இலகுவாக்க முயன்றவளாக மூச்சு வாங்க சொல்லியவளுக்கு படு பவ்யமாக சரி சரியென தலையசைத்து கிளம்ப போனவனை கண்டவளால் அதற்கு மேலும் மனதை அடக்க முடியவில்லை.

“பரணி!!!”, என்று அழைத்து விட்டு நிதானிக்க... தன்னை ஏறிட்டவனிடம்,

“நிஜமாவா உங்களுக்கு என்னை கோவில்ல பார்த்த நினைவு இல்லையா?”

கேட்கும் பொழுது நெஞ்சில் உள்ள ஏமாற்றம் அவள் குரலை கவ்வியது...

‘இவ ஏன் அதையே கேட்கிறா என்று துணுக்குற்றவனாக, அவளைப் பார்த்து,

ஒன்றுமே அறியாதவன் போல,

“சுத்தமா நினைவே இல்லைங்க!”, சிறு புன்னகையுடன்  ஸ்திரமாக மறுக்கவே,

கன்னத்தில் அறை வாங்கியது போலாகி விட்டது அஞ்சனாவிற்கு!

“நீங்க இப்படி சொல்றது...”

“எனக்கு.. கொஞ்சம் அப்செட்டிங்கா இருக்கு பரணி!”

அவள் ஏமாற்றம்.... இப்பொழுது அப்பட்டமாக வெளிபடுத்த..

“உங்களை கோவில்ல பார்த்த பிறகு என்னால மறக்கவே முடியலை! மறுபடியும் எப்போடா பார்ப்பேன்னு ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கிட்டு இருந்தேன்!”

ஒரு தவிப்புடன் இவள் பேச... அவனோ தலையும் புரியாமல் காலும் புரியாமல், இந்த பொண்ணு என்னத்தை உளறுது...’ என்ற ரீதியில் புருவ முடிச்சிட அவள் சொல்வதை புரிந்து கொள்ள முயன்று தோற்றவனாய் முற்றிலும் குழம்பி போய் அவளைப் பார்க்கவும்,.

அவள் தன் நிலையை விளக்க முயன்றாள். அன்று கோவிலில் தான் வைத்த வேண்டுதலையும், அந்த நேரம் அவனைப் பார்த்தையும் சொல்லி விட்டு,

“நீங்க தான் எனக்குன்னு கடவுளே முடிவு செய்ததாலே தான்... நான் வேண்டிகிட்டது போல சரியா முப்பது நாள்ல  உங்களை நான் வேலை பார்க்கிற ஆபீஸ்லே, நான் வேலை பார்க்கிற டீம்லே கொண்டு வந்து நிறுத்தி இருக்கார்”

அவள் சொல்லச் சொல்ல,  ‘முப்பது நாள் அது இதுன்னு... சரியான  மறை கழண்ட கேஸ் போலவே’, என்று இவன் யோசிக்கும் பொழுதே,

“நான் என்னவோ பைத்தியம் மாதிரி உளர்றேன்னு தோணலாம் பரணி!”

என்று அவள் கேட்கவும் திகைத்தவன், அடுத்து தன் எண்ணங்களை முடிந்த அளவு வெளிப்படுத்தாமல் மறைப்பதில் கவனமாகி போனான். அவளோ தன் பேச்சை தொடர்ந்தாள்.

“ஆனா, நான் நம்புனேன்... என் முழு மனசோட நம்புனேன்!”,

கண்களைப் பார்த்து அழுத்தமாக சொன்னவளின் பார்வை தாழ்ந்து   அவன் கையில் இருந்த பூங்கொத்தை சென்று வருடியவாறு...

“இந்த முப்பது நாளும் வேண்டாத நாளே இல்லை! அந்த நினைவா தான் தர்டி ரோசஸ் வைச்சிருக்கேன்..!”,

என்றவள் விரலால் அந்த பூங்கொத்தின் நடு நாயகமாக இருந்த சிகப்பு ரோஜாவை சுட்டி,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.