(Reading time: 19 - 38 minutes)

ண்ட் திஸ் இஸ் தி தேர்டியத்!!!” என்று மீண்டும் அவன் கண்களைப் பார்த்து,

“அது நீங்க என் லைஃப்ல உண்டுன்னு கன்ஃபர்ம் செய்த நாள்!”, உணர்ந்து சொன்னவள்,

“மை ஃபேவரைட் ரெட்... அது போல...”,

என்ற பொழுதே தூரத்தில் ஆள் அரவம் கேட்டதும்.. ரகசியக் குரலில்,

“யு ஆர் மை ஃபேவரெட்! யு ஆர் சோ சோ ஸ்பெஷல் தேட்....”

தன் மனதை வெளிபடுத்த நினைத்தவள்.. எதையும் வெளிபடுத்தாத அவனுக்குள் என்ன இருக்கிறது என்று அறிய முயலவில்லை. மாறாக, அவன் அமைதி, அவள் ஆர்வத்தை அதிக படுத்தியது.

மயக்கம் இருந்தால் தானே தயக்கம் வரும்!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

தயக்கம் மருந்துக்கு கூட அவளிடம் இல்லை! மேலெழுந்த ஆர்வத்தில் தனக்கே உரித்தான குறும்பு கூத்தாட...

“தேட்.... ஐ...ஐ... “

“ஐ ம் இன் லவ் வித் யு”,

கட கடவென்று சொல்லி விட்டு கண் சிமிட்டலோடு அவனிடமிருந்து விடைபெற்றவள்....

எந்த வேகத்தில் மனதில் உள்ளதை கொட்டினாளோ... அதே வேகத்திலே.... குடு குடுவென்று ஓடி வந்து தன் காரில் வந்து அமர்ந்தவளுக்கு படபடப்பு குறையவில்லை!

அதுவரை சொல்லி விட துடிதுடித்த நெஞ்சம்.. சொன்ன பின் படபடத்தது! தான் செய்வது சரியா தவறா என்று தெரியவில்லை! கொஞ்சம் பயம், கொஞ்சம் ஆர்வம்.. அதே சமயம் உள்ளுக்குள் ஒரு இதம்!

பேதை பெண் - அது வெறும் சிறு சேட்டை செய்து விட்டு வரும் குழந்தையின் குதூகலம் என்பதை அறியவில்லை அவள்!

‘இது தான் லவ்! ஐ பீல் லைக் ஃப்லோட்டிங்’ தனக்குள் சொல்லிக் கொண்டவள் தான் சொன்னதை கேட்டு அவன் எப்படி உணர்கிறான் என்பதை தெரிந்து கொள்ள பார்வை கார் ஜன்னல் வழியே பரணி மீது மோத அந்த நேரம் அவன் வண்டியை கிளப்பி இருந்தான்.

அவன் முகத்தையே உற்று நோக்கியவளுக்கு அதில் நிலவிய அதிருப்தி

‘எங்கோ சறுக்குகிறோமோ..’, என்ற பயம் உண்டானாலும் ஒருவனை நினைத்து விட்ட பின், அதிலிருந்து பின் வாங்க அவள் மனம் தயாராக இல்லை!

‘பெல்லி பாய் எப்படியாவது எங்களை சேர்த்து வைத்திடு’, என்ற மானசீக பிரார்த்தனையை வைத்து கடவுள் துணை வேண்டியது!

இவள் இப்படி சொல்லி செல்லவும் அப்படியே ஆடிப் போய் நின்றான் பரணி! அடுத்த நொடியே சுதாரித்தவன்.....  வேக வேகமாக, ‘யாராவது இதை பார்த்து மேலிடத்தில் போட்டு கொடுத்தா என் வேலை என்னாகுறது!’, என்று பதறி சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கையில் இருந்த பூங்கொத்தை அருவெறுப்பாக வெறித்தான். 

உள்ளுக்குள் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

‘சை... இவளுங்களுக்கு எல்லாம் வெட்கமே இருக்காதா? அலையுறாளுங்க! சாமி காட்டுனாருன்னு சாமியை வேற அசிங்க படுத்துறா! இவ கெட்ட கெடுக்கு பொக்கே வேறயா’,

அத்தனை வெறுப்பு... அருவெறுப்பு.. எழ..... வண்டியை கிளப்பி சென்றவன்... சற்று தொலைவு சென்றதும்... அதை சாக்கடையில் வீசினான்.

ஜாடியில் சேர வேண்டிய பூக்கள் சாக்கடையில் சேர்ந்ததை திருப்தியுடன் பார்த்து விட்டு தன் பயணத்தை தொடர்ந்தவனுக்கு...

‘அவ பார்கவா போறா!!!‘, என்ற இறுமாப்பு!!

அவள் பார்க்கவில்லை தான். ஆனால் அவன் பார்த்தான்!!!

அந்த அவன் எவன்?????

காதல் இல்லை! காயம் உண்டு!!

அடுத்து என்ன நடக்கும்? உங்கள் யூகங்களை மறவாது பகிருங்கள்!

தொடரும்

Episode 25

Episode 27

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.