(Reading time: 15 - 29 minutes)

றுநாளின் விடியல் அழகாக ஆரம்பிக்க தன்னவளை சந்திக்க ஆர்வமாய் கிளம்பினான்..அதையும் தாண்டி உள்ளுக்குள் அந்த கனவின் தாக்கம் இருந்து கொண்டுதான் இருந்தது..

சஹானாவின் வீட்டினருகிலேயே அவளை அழைத்து கொண்டு தன் வண்டியில் கிளம்பினான்..ஈசிஆரில் அமைந்துள்ள இஷ்கான் கோவிலை அடையும் வரையுமே இருவரும் பேசி கொள்ளவில்லை..அவனுக்கு கனவின் தாக்கம் காரணமென்றால் அவளோ அவனோடானா அந்த பயணத்தை ரசித்தாள்..உள்ளே சென்று அந்த மாய கண்ணணை மனமாற வேண்டிக் கொண்டு அங்கிருந்த படிகளில் ஓரமாய் அமர்ந்தனர்..கார்த்திக் அவளையே பார்த்திருக்க முதன்முதலாய் தன் குறும்புதனத்தை தாண்டி பெண்மைக்கே உரிய நாணம் எட்டிபார்த்தது..அவள் முகத்தின் சிவப்பை வெகுவாய் ரசித்தான் அவளவன்..வேறெங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் கைகளை தன்னோடு இணைத்து கொள்ள முகத்தில் அப்படியாய் ஒரு பூரிப்பு பெண்ணவளிடத்தில்..

வாவ் சஹி உனக்கு வெட்கம் கூட பட தெரியுமா??

சின்னதே சின்னதாய் ஒரு சிரிப்பு அதைதாண்டி எதுவும் கூறும் நிலையில்லில்லை..அதை உணர்ந்தவனும் கரத்தை பிடித்தவாறே எங்கோ பார்வையை செலுத்தினான்..சற்று தூரத்தில் வயதான தம்பதியர் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்தபடி பிரசாதத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர்..

சஹி நம்ம லைவ்வும் இப்படிதான் இருக்கனும்டா..ஆத்மார்த்தமாய் உணர்ந்து கூறினான்..

கண்டிப்பா இப்படிதான் இருக்கும் கார்த்திக்..என அவன் கைகளை அழுந்தபிடித்தாள்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

சரிடா ஈவ்னிங் உன் மாமியார் மாமனாரோட வரேன் ரெடியாயிரு..இப்போ போலாமா என சிரிக்க..

கார்த்திக் நீ மட்டும் எப்படி இவ்ளோ அழகா சிரிக்குற??

ஆமா அதென்ன எப்போ பாத்தாலும் என் சிரிப்புலயே ஒரு கண்ணாயிருக்க..

ம்ம்ம் ஏனோ உங்க சிரிப்ப பாக்கும் போதெல்லாம் மனசு ஒருமாறி ஜாலியாயிருக்கு..

ஹா ஹா சைட் அடிக்குறநு டேரெக்ட்டா சொல்லு அதுக்கு இப்படி ஒரு எக்ஸ்பளநேஷன் வேற..

எப்படி வேணா நினைச்சுக்கோ..சைட் அடிச்சா மட்டும் என்ன தப்பு??என்ன தவற யாருக்கு அந்த ரைட்ஸ் இருக்கு??

ம்ம் அது என்னவோ கரெக்ட்தான் என்றவாறு அங்கிருந்து கிளம்பினர்..

மாலை சஹானாவின் வீட்டில் சிவாவின் குடும்பமும் அமர்ந்திருக்க சற்று நேரத்தில் கார்த்திக் தன் குடும்பத்தோடு உள் நுழைந்தானன்..பெரியவர்கள் அனைவரும் தங்களுக்குள் நலம் விசாரித்து கொள்ள சிவா கார்த்திக்கிடம் என்ன இப்படி மாட்டிகிட்டீங்களே மாப்ள??டெய்லி தலைய பாதுகாக்குறதே வேலையாயிருக்குமே பரவால்லையா என அவனை வாரிக்கொண்டே ஷரவந்தியை கண்களால் பருகி கொண்டிருந்தான்..

என்ன சிவா கொஞ்சம் என்ன பாத்தும் பேசுங்க..-கார்த்திக்..

ஹாங்ங்ங் உங்ககிட்டதான பேசிட்டு இருக்கேன்..என அடுத்து அவன் பேச வருவதற்குள் சேகர் அவனை ஏதோ எடுத்து வர சொல்லி அனுப்ப விட்டால் போதுமென்று ஓடிவிட்டான்..துளசி சஹானாவை அழைத்து வருவதற்கு செல்ல கார்த்திக் தன்னவளை பார்ப்தற்காக தயாராய் இருந்தான்..அரக்கு வண்ண பட்டில் தங்க சரிகையோடு அளவான ஒப்பனையோடு கழுத்தில் ஒரு நீள சங்கிலி,காதில் ஜிமிக்கி என இத்தனை நாள் பார்த்த குறும்புதனம் மறைந்து மணமகளுக்கேயுரிய வனப்போடு ஒயிலாய் வந்து அவனின் எதிரில் அமர்ந்தாள்..கார்த்திக்கின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் இதயம் தாறுமாறாய் எகிறி கொண்டிருந்தது..அவளருகில் வந்து ஷரவந்தி ஏதோ கூற அவளை முறைத்தாள்..அந்நேரம் சிவா கார்த்திக்கிடம்,உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசனும் கொஞ்சம் வரீங்களா ப்ளீஸ்..

என்னவென்று ஓரளவு ஊகித்தவனோ சிறு புன்னகையோடு வெளியில் சென்றான்..

சொல்லுங்க சிவா அப்படி என்ன அவசரம்??

கார்த்திக் எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது நா…நா ஷரவந்திய ரொம்ப சின்சியரா லவ் பண்றேன்..பட் அவளுக்கு தெரியாது எங்க வீட்ல எல்லார்க்கும் பரிபூரண சம்மதம்..அவங்க பேச்ச ஆரம்பிக்குற மாறி தெரில அதான் நானே சொல்லிட்டேன் ப்ளாஷ்பேக்லாம் நாளைக்கு பொறுமையா சொல்றேன்..இப்போதைக்கு உங்களுக்கு ஓ.கே வா இல்லையாநு சொல்லுங்க??

லேசாய் புன்னகைத்தவன்,அண்ணணுக்கும் தங்கைக்கும் எதுல ஒத்து போகுதோ இல்லையோ சிவா,இப்படி தடாலடியா லவ்வ சொல்றதுல ஒத்துபோகுது..

ம்ம் எனக்கு இதுல சம்மதம்தான் பட் முக்கியமான ஆளூ ஷரவந்தி தான் நீங்க உங்க ஸ்டோரிய சொல்லி அவ அத ஏத்துகிட்டு என்ன சொல்றாளோ அதான் இறுதி முடிவு பட் அவளுக்கும் சம்மதம்ங்கிற பட்சத்துல வீட்ல பேசி சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு ஓ.கே??

தேங்க் யு சோ மச் கார்த்திக் இனி தைரியமா என் ஆள நா சைட் அடிப்பேன்..

ஓ அஅப்போ இவ்ளோ நேரம் நீங்க என் தங்கச்சிய பாக்கவேயில்ல??

சரி..சரி..அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பா..-சிவா..

அதற்குள் அங்கு கார்த்திக் சஹானாவின் திருமண நாள் குறிக்கப்பட்டிருந்தது..45 நாட்களில் திருமணம்..மிஸஸ் சஹானா கார்த்திக் ஆகபோகிறாள்..அவளவனின் சஹியாக அவனோடு வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கழிக்க போகிறாள்..மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு அவளிருக்க அதை ரெட்டிப்பாக்க சிவாவோ,சஹானா கார்த்திக்கு வீட்ட சுத்தி காட்டேன் அதான் எல்லாம் பேசி முடிச்சாச்சுல என்று எடுத்து கொடுக்க அவனை பார்த்துகண்சிமிட்டி நன்றி கூறிவிட்டு கார்த்திக்கை அழைத்து சென்றாள்..

ஹலோ ப்ரெண்ட்ஸ் இரண்டு வீட்டு பெரியவங்களையும் கரெக்ட் பண்ணியாச்சு..சஹானாவ ரோல்மாடலா எடுத்து யாரும் அப்பாகிட்ட போய் இதேமாறி டயலாக்லா பேசி அடி வாங்கினா சத்தியமா அதுக்கு நா பொறுப்பு இல்லப்பா

தொடரும்

Ninnai saranadainthen - 05

Ninnai saranadainthen - 07

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.