(Reading time: 30 - 59 minutes)

12. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

வன் தாழ்ந்து பேசவும் தன்னுடைய கோபத்தை வார்த்தைகளால் அவனின் மேல் கொட்ட முடியாமல் அவளுள் ஏதோ ஒன்று அவளை தடுத்தது . அவனாள் இப்படி இறங்கி தன்னிடம் பேசமுடியும் என்பதை அவள் இதுவரை கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. மேலும் , சமாதானமாகப் பேசுவது அவனுக்குப் பொருத்தமானதாக இல்லை என்பதை அவள் மனம் அவளுக்கு கூறியது.

எவ்வாறு இருந்தாலும் தன்னால் வேறுஒருவனை கல்யாணம் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. அதற்காக மஹிந்தனையும் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியும், என்றும் அவளுக்குத் தோன்றவில்லை .

தன்முகத்தை யோசனையுடன் பார்த்துக் கொண்டே தான் கேட்ட கேள்விகளுக்கு பதிலை அவள் வாய் கூறாமல் அவளின் கண்களே பேசுவது போல் உணர்ந்தான் மஹிந்தன் .அவனின் மனமும் இந்த கண் தான் இவளிடம் என்னை முதலில் வீழ்த்தியது என்று நினைக்கும் போது கார் குலுங்கி நின்றது .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "நின்னை சரணடைந்தேன்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அப்பொழுதுதான் மஹிந்தன் உணர்ந்தான் தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதை . கதிர் காரை நிறுத்திய வேகத்தில் வெளியில் இறங்கி நின்று கொண்டவன் டென்சனுடன் இருந்தான். அந்த டென்சன் குறைக்கும் நோக்கத்துடன் தன் பாக்கெட்டில் இருந்து சிகரட்டை எடுத்து பற்றவைக்கப் போனவன் காரில் கவிழையா இருப்பது உரைத்ததும் எடுத்த சிகரட்டை பற்றவைக்காமல் தூக்கிப் போட்டான் .

அப்பொழுது காரிலிருந்து இறங்கிய மஹிந்தன், ழையா இறந்குவதற்காக கார் கதவை திறப்பதற்காக சென்றதும் வேகமாக மஹிந்தனின் கையை பிடித்து அவனை சற்றுத்தள்ளி கூட்டிப்போனான்.

அவனின் செயலில் என்ன? என்ற கேள்வியோடு பார்த்த மஹிந்தனை கதிர், டேய்! இனி ஒரு முறை இது போல் சண்டையையும் ரொமான்சையும் கெஞ்சல்களையும் நான் இருக்கும் போது வைத்துக் கொள்ளக் கூடாது மஹிந்தன் என்றான் .

உடனே மஹிந், சரி கதிர், இதை சொல்வதற்குத்தான் என்னை தனியாக கூப்பிட்டாயா? என்று கேட்டான் மஹிந்தன் .

“இதை பார் மஹிந்” என்றவன், மாலையில் வெளிவரும் பத்திரிக்கையில் மஹிந்தன் கவிழையாவிரற்கு காரை திறந்துவிடுவது போன்ற வந்திருந்த போட்டோவுடன் கூடிய செய்தியை தனது மொபைலில் காண்பித்தான் மேலும் அந்த ஆர்டிக்கிலில் கவிழையாவை மஹிந்தனின் செக்ரட்டரி மற்றும் இரகசிய சினேகிதி என்றும் கூறப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டிய கதிர். ஐஸ்வர்யாவுடனான அவனின் கல்யாணம் முடிவாகியிருக்கும் இந்த நிலையில் இடையில் கவிழையா மேல் இருக்கும் சிநேகத்திற்கு என்ன பேர்? என்று கேள்வியுடன் முடிந்திருந்தது அந்த ஆர்டிகில் என்று கூறி காண்பித்தான் .

கதிரின் மொபைலில் அந்த ஆர்டிக்கிளை பார்த்த மஹிந்தன் இந்த மீடியா ஆட்களுக்கு என்னை கவனிப்பதைவிட்டு வேறு உருப்பிடியான ஒரு ஆனியையும் புடுங்க முடியாது என்று கோபத்துடன் கதிரின் போனை சுவிச் ஆப் செய்துவிட்டு இத எப்படி டீல் பண்ணனும் என்பதை ஒரு ஒன் அவர் கலித்து உன்னிடம் சொல்கிறேன் கதிர் .என்றான்

பின் .இவள் ஏன் இன்னும் காரிலேயே உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள் என்று கூறிக் கொண்டு காரின் அருகில் சென்றான் .

காரில் இருந்த கவிழையா தனது மொபைலில் தனது வீட்டிற்குத் தொடர்பு கொண்டு பேச மனம் தவித்தது .ஆனால் தான் திடீர் என்று மஹிந்தனால் அவனின் வீட்டிற்கு இழுத்துவரப்பட்டதை தனது தந்தை அறிந்தால் அதிர்ச்சியில் திரும்பவும் அவருக்கு உடல்நலம் பாதித்துவிடுமோ என்ற பயம் ஏற்பட்டது. இவ்வாறான யோசனையுடன் அவள் தனது மொபைலையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கும் போது தனுசிடம் இருந்து அழைப்பு வருவதை கண்டாள்.

அப்பொழுது .சொல்லுங்க தனுஷ் நான்தான் என்று கவிழையா கூறியவள் காரின் கதவை மஹிந்தன் திறக்கும் அதிர்வில் ஏறிட்டு அவன் முகம் பார்த்தாள் .

கதவைத் திறக்கும் போது அவள் மொபைலில் தனுஷ் என்று கூறியது மஹிந்தனின் காதிற்கு கேட்ட உடன் மஹிந்தன் கோபமானான் .ழையா காதில் மொபைலை வைத்துக் கொண்டு தன்னை ஏறிட்டுப் பார்க்கும் சமயம் மஹிந்தன் அவள் கையில் உள்ள மொபைலை பறித்து தன் காதிற்குக் கொடுத்தான்.

தனுஷ் கவிழையாவிடம் பேசுவதாக் நினைத்து .கவி நான் என் நண்பனிடம் பேசிவிட்டேன் .அவன் உங்களுக்கு வேலையும் தங்குவதற்கான இடத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், “நீங்கள் எப்பொழுது ஹைதராபாத் வருகிறீர்கள் என்று மட்டும் தகவல் கூறும்படி கூறினான்” என்றான் . கவி மஹிந்தனின் கையில் இருந்த போனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருக்கும் போது

மஹிந்தன் தனுசிடம் என் மனைவி அடுத்தவர்களிடம் வேலை பார்க்கும் நிலையில் இல்லை தனுஷ் என்றவன் என் மனைவி இனி என்னை விட்டு எங்கும் செல்வதாக இல்லை மேலும் நீங்கள் என் மனைவியுடன் போனில் தொடர்புகொண்டு பேசுவதை நான் விரும்பவில்லை அன்று கூறியவன் தொடர்பைத் துண்டித்தவன் போனை கவியிடம் கொடுக்காமல் தானே வைத்துக்கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.