அவள் அவ்வாறு கூறியது வருணுக்கு வருத்தமாகத்தான் இருந்தது .இருப்பினும் அதனை வெளியில் காண்பிக்காமல் வேறு என்ன செய்யச் சொல்கிறாய் அக்கா? இப்பொழுதுள்ள நம் அப்பாவின் உடல்நிலையில் வேறு எப்படி முடிவெடுக்க? மேலும், மிஸ்டர் மஹிந்தனுக்கு ஐஸ்வர்யாவுடனான கல்யாணம் நடக்காது என்றும் நீ அவரின் மணைவி என்றும் அவர் பத்திரிக்கைக்கு பேட்டிக்கொடுக்கப் போவதாக கூறியபின் அவருடன் உன்னுடைய வாழ்க்கையை துவங்க முடிவெடுப்பதுதான் புத்திசாளித்தனமான முடிவு என்றவன், நான் அப்பாவிடம் போனை கொடுக்கிறேன் நீ அவரிடம் நலமாக இருப்பதாகச் சொல் நாளை நான், நீ இருக்கும் இடம் வந்து உன்னைப் பார்க்கிறேன் என்று கூறியவன் வீட்டினுள் சென்றான் .
வருண் தன்னிடம் பேசியவிதத்தை நம்பமுடியாமல், ஆனால் தற்போதைய தன் தந்தையின் உடல்நிலையை அவன் உணர்த்திய விதத்தில் தான் என்ன செய்ய என்று குழம்பிய கவிழையாவின் கோபம் முழுவதுவும் மஹிந்தனின் மேல் திரும்பியது .
வருண் தன் தந்தையிடம் அக்கா பேசுகிறாள் என்று மொபைலை கொடுத்ததும், கையில் வாங்கிய ஈஸவரன் கவி நீ எப்படி இருக்கிறாய், உனக்கு அந்த மஹிந்தன் ஏதேனும் பிரச்சனை கொடுக்கிறானா? எதுவாக இருந்தாலும் என்னிடம் உண்மையைச்சொல் என்று கேட்டார் .
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
தன் அப்பா மிகுந்த பதற்றத்துடன் பேசுவதை கேட்ட கவிழையாவிற்கு அவரை அமைதிப்படுத்துவதுதான் அவரது தற்போதைய உடல் நிலைக்கு நல்லது என்பதை உணர்ந்தவள்
அப்பா நான் எந்த பிரச்ச்சனையும் இல்லாமல் நலமாக இருக்கிறேன் .மஹிந்தன் என் சம்மதம் இல்லாமல் தான் என்னை கல்யாணம் செய்தார். எனினும் உங்களின் சம்மதம் இல்லாமல் என்னுடன் வாழ நான் அனுமதிக்கவும் மாட்டேன் அதற்கு (என்று அர்த்தத்துடன் பக்கத்தில் இருந்த மஹிந்தனைபார்த்துக் கொண்டே) முயற்சிக்கும் தாழ்ந்த நிலைக்கு அவர் போகவும் மாட்டார் என்று நம்புகிறேன் என்றாள். மற்றபடி எனக்கு இங்கு எந்த பிரச்சனையும் இல்லை. அம்மாவிடம் நான் பேசவேண்டும் அவர்களும் என்னை நினைத்து கவலையுடன் இருப்பார்கள் அவர்களிடம் மொபைலை கொடுங்கள் என்றாள்.
தன் அம்மாவிடமும் தான் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் உள்ளதாகக் கூறியனாள். ஆனால் தன் கையில் மொபைலை வாங்கிய பார்வதி மாப்பிள்ளையின் மனம் அறிந்து அவரை கோபப்படுத்தாமல் நடந்துகொள் கவி. உன் வாழ்க்கை இதுதான் என்று முடிவு ஆகிவிட்டது எனவே நீ மாப்பிள்ளையுடனான உன் வாழ்க்கையை நல்லபடி வாழப்பார். இங்கு உன் அப்பா நலமாக இருக்கிறார். விரைவில் எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்று கூறியவர் தொடர்பைத் துண்டித்தார்.
பார்வதி தொடர்பைத் துண்டித்ததும் ஈஸவரன், என்ன பார்வதி கவியிடம் நீ பேசியவிதத்தின் அர்த்தம் என்ன? என்று புரிந்து தான் நீ பேசினாயா? என்று கோபத்துடன் கேட்டார் ஈஸவரன் .
அதற்கு ஒரு நிமிடம் பொறுங்கள் என்றவள் வருனிடம் நீ வாசலில் நின்று கொண்டிருக்கும் அந்த தம்பியிடம் இந்த மொபைலைக் கொடுத்துவிட்டு மாப்பிள்ளையின் தங்கையின் வருகைக்கு நாம் காத்திருப்பதாகச் சொல் வருண் என்று கூறினாள்.
நான் கூறுவதை கேட்டு நீங்கள் கோபமோ வருத்தமோ டெண்சனோ ஆகக் கூடாது என்று கூறி ஈஸ்வரனின் அருகில் அமர்ந்து அவரின் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.
தொடரும்
{kunena_discuss:1081}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.