(Reading time: 30 - 59 minutes)

மாடியில் இருந்து இறங்கிவந்த மஹிந்தன் அவன் வைப்பதை பார்த்துக்கொண்டு வேகமாக இறங்கிவந்து ஏய் அதை முதலில் எடு என்று கையை அந்த படத்தினை நேக்கி காட்டி கோபமாகச் சொன்னதும் அப்பணியாளன் அந்தகப்பை பயத்துடன் எடுத்தான் .

அவன் எடுத்த போது அந்த படத்தில் அக்கப்பின் கீழ்படிந்திருந்த தேநீரின் வட்டமான தடம் பட்டு இருந்ததைப் பார்த்தவுடன் அப்பணியாளன் தன் தோழில் போட்டிருந்த துண்டினால் அந்த தடத்தை துடைத்தான் .

அதனைப் பார்த்த மகிந்தனுக்கு மேலும் கோபம் வந்து அவ்வேலையாளின் கன்னத்தில் ஓர் அறையை விட்டான். என் ழாயா படத்திமேல் இப்படி செய்ய உனக்கு எப்படி தைரியம் வந்தது. இதில் இருப்பது யார் தெரியுமா? என்னுடைய ஒய்ப் .என்று கூறி தன் பாக்கெட்டில் வைத்திருந்த கைக்குட்டையால் அந்த படத்தின் முகத்தை தானே நன்றாக் துடைத்து ஒரு விரலை நீட்டி அவனைப் பத்திரம் என்று கூறிவிட்டு வெளியில் சென்றான் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அந்த சம்பவம் நடந்தபோது அங்கு இருந்த காயத்திரி அப்படத்தில் இருந்த உருவம் நேரில் இன்று அங்கு வந்ததைப் பார்த்தவள் அது தன் முதலாளியின் மனைவி என்று தெரிந்து கொண்டாள் .மேலும் அவள் முதல் முதலாக அங்கு வந்ததும் அவளுக்கு ஆரத்தி சுற்றி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது .எனவே பயத்துடன்தான் அவள் தன் முதலாளியைப் பார்த்து ஒருநிமிடம் வாசலில் நில்லுங்கள் ஐயா ஆரத்தி எடுக்க வேண்டும் என்று கூறினாள் .

ஆனால் அதற்கு தன் முதலாளி சிரிப்புடன் தன் மனைவியுடன் நின்றதும் ஆச்சரியமாகி ஆரத்திசுற்றியவளிடம் தட்டில் பணத்தை போட நினைத்தவன் கவிழையாவிடம் பேபி என்னுடைய பர்ச்சில் கார்டு தான் இருக்கிறது ரூபாய் இல்லை என்று கூறி அவள் கையில் இருந்த ஹன்ட்பேக்ஐ பரித்து அதன் உள்ளே வைத்திருந்த மொத்தம் ஐந்து நூறு ரூபாய்த்தால்களையும் மொத்தமாக காயத்திரியிடம் கொடுத்தான் .

அவன் கொடுத்ததும் அதை மகிழ்ச்சியாக் பெற்றுக்கொண்டு அம்மா வலதுகாலை எடுத்து உள்ளே வைத்து வாருங்கள் என்று கூறினாள் காயத்திரி .

மஹிந்தனின் செயலில் கடுப்பான ழையா அதனை வெளியில் காயத்திரி முன் காட்டாமல் அவளிடம் சிரித்தது போல் முகத்தை வைத்துக் கொண்டு பின் மஹிந்தனின் புறம் திரும்பி என்னுடைய ரூபாயை எப்படி என் அனுமதியில்லாமல் நீங்கள் எடுக்கலாம் என்று குறைந்த குரலில் பல்லை கடித்தபடி கூறினாள்

அவள் கூரியதைகேட்ட மஹிந்தன் இனி உன்னிடம் உள்ள எல்லாமே எனக்கு தான் சொந்தம் என்று கூறினான் . அவன் எல்லாவற்றிலும் என்று கூறும் போது அழுத்தமாக அவளை மேலிருந்து பாதம்வரை கண்களினால் கபளீகரம் செய்வதுபோல் பார்த்துக்கொண்டே வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கூறினான் .

அவனின் பார்வையையும் அலுத்தமான வார்த்தையையும் கண்ட ழையாவிற்கு திரும்ப அவனிடம் பதிலுக்கு மல்லுக்கட்டிப் பேச வார்த்தைவர மறுத்து, படபடப்புடன் துடிக்கும் தன் நெஞ்சத்தின் ஓசையை சமப்படுத்துவதற்காக தன் கீழுதட்டை தன் பற்களால் மடித்து இருக்க கடித்தபடி மஹிந்தனின் பார்வையை தவிர்க்கும் நோக்குடன் வேறு புறம் பார்ப்பது போல் பாவனை செய்தாள் .

மகிந்தனுக்கு அவளின் நடுக்கத்தை பார்த்து மனதிற்குள் இப்படி என்னை பார்த்து இவள் நடுங்குவதை எப்படி மாற்ற? என்ற யோசனை செய்து கொண்டு இருக்கும் போது அவனுக்கு தெரியாத நம்பரில் இருந்து அவன் மொபைளுக்கு அழைப்பு வந்தது.

அதனை இயக்கி காதில் வைத்து ஹலோ என்று கூறியதும் .நான் வருண் பேசறேன் .இது மிஸ்டர் மஹிந்தனின் போன் தானே ? என்று கேட்டான் .

அவன் அவ்வாறு கேட்டதும் மஹிந்தன் மனதிற்குள் ரொம்ம்ப வேகமாகத்தான் இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு தான் பேசுவது ழையாவின் காதில் விழாதவாறு சற்றுத்தல்லிவந்து ம்.....சொல்லு வருண் நான்தான் என்றான் .

அது மஹிந்தன் என்று தெரிந்தவுடன் வருண் கோபத்துடன் என் அக்கா ஏன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை .அவளுக்கு ஆபீசில் லேட் ஆகும் என்றாள் என் அப்பாவிடம் போனில் தகவல் தெரிவித்திருப்பாள் . அவள் மணி 6:15 ஆகியும் இன்னும் ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று தெரிந்து கொள்ள அவள் நம்பருக்கு அப்பா போன் செய்தார்கள் அது ஸ்விட்ச் ஆப் என்று வருகிறது .

உடனே அவர்கள் உடல்நிலையும் பொருட்படுத்தாமல் ஆபீசுக்கு வந்து பார்க்க கிளம்பினார்கள். நான்தான் தடுத்து, நான் பார்த்துவிட்டு வருகிறேன் என்று வெளியில் வந்து போது தொலை பேசியில் இருந்து உங்களுக்கு போன் செய்தேன் என்றான் .

அவன் பேசியதை கேட்ட மஹிந்தன் இன்னும் பத்து நிமிடத்துக்குள் அன்று ஆஸ்பத்திரியில் என்னுடன் பார்த்தாயே கதிர் என்பவன் அவன் உன் அக்கா என் மனைவி என்ற ஆதாரத்தை காட்டவும் தற்போது அவள் என்னுடன் தான் இருக்கிறாள் என்ற விஷயத்தை கூறவும் உன் வீட்டிற்கு வருவான்.அதனால் நீ நேராக உன் வீட்டிற்குப் போ என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் நீங்கள் வலுக்கட்டாயமாக் என் அக்காவின் கழுத்தில் தாலி கட்டி விட்டால் மட்டும் என் அக்காவின் கணவன் ஆகி விட முடியாது .மேலும் இன்று மாலை வெளியாகும் நாளிதழில் வந்த செய்தியையும் படத்தையும் நான் இப்பொழுதுதான் இந்த பூத்தில் வாசலில் இருந்த கடையில் உள்ள பேப்பரில் பார்த்தேன் என்று கூறி மேலும் மகிந்தனிடம் கோபமாகப் பேசப் போனவனை,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.