(Reading time: 19 - 38 minutes)

01. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

இனிய தோழிகளுக்கு,

இவள் எந்தன் இளங்கொடிஇந்த கதை என்னுடைய முதல் தொடர்கதை, கதாப்பாத்திரங்களை கதையின் போக்கிலேயே அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஒரு மென்மையான காதல் கதை. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

-முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

ரவு போர்த்தியிருந்த இருட்டை மெல்லிய விடியற்கதிர்கள் கிழித்தது. தன் அலைபேசி அலாரம் அடிக்கும் முன்னரே விழித்துக்கொண்டாள் தர்ஷினி, தன் உள்ளங்கையைத் தேய்த்து, விரித்த கைகளில் கண்களைப்பதித்தாள். தன் காலைக்கடனை முடித்துவிட்டு, சமையலறைக்குள் போனவள், வெகு விரைவாக காலை, மதிய உணவுகளை தயாரித்து உணவு மேசையில் அடுக்கினாள். மாணிக்கம் எழுந்து முகம் கழுவி ஹாலுக்குள் நுழையும் போது, டீக் கப்பையும், அன்றைய செய்திதாளையும் அவர் கைகளில் கொடுத்து புன்னகைத்தாள்.

“என்னம்மா, தர்ஷினி இன்னிக்கு சீக்கிரமா கிளம்பிட்டே? புடவை எல்லாம் கட்டிநிக்கிற?” மாணிக்கம் தன் மகளை கண்களில் கணிவு மின்னக் கேட்டார்.

“அப்பா, உங்களுக்கு நினைவில்லையா?, இன்னிக்கு காவ்யாவோட பர்த்டே அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன், அவளும் நானும் கோவிலுக்கு போயிட்டு அஃபீஸ் கிளம்பிடுவோம்!” என்று கண்களை சிமிட்டியவாரே கூறினாள்.

“அம்மா, தர்ஷினி, நான் இராத்திரி வரக் கொஞ்சம் லேட் ஆயிடும், நீ இன்னோரு வீட்டு சாவியை மறக்காம எடுத்துக்கம்மா!” என்றாவரே அவர் செய்திதாளில் கண்களிப்பதித்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

தலையில் சுற்றியிருந்த தூவாலையை, உருவி தன் நீண்டக் கூந்தலை உலர்த்தும் பொருட்டு தொள்களில் சரிய விட்டு தன் வீட்டின் பின் வாசலைத்திறந்து, தோட்டத்திற்குள் நுழைந்தாள். ஆயாசமாக அந்த தோட்டத்தின் நடுவேயிருந்த சலவைக்கல்லில் அமர்ந்து விடியலின் அழகை இரசித்தாள். அவளது ஏகந்த உலகமே அந்த தோட்டமும் அதன் மர செடிக்கொடிகள் தான், பெசன்ட் நகரில் நாற்பது ஆண்டுகளிக்கு முன் கட்டப்பட்ட காலணி வீடு, வீட்டின் முன்னேயும் பின்னேயும் பரந்த நீண்ட முற்றம், அக்கம் பக்கத்து வீடுகள் அனைத்தும் அந்த முற்றத்தை அடைத்து அறைகளாக கட்டிவிட்டனர், ஆனால் தர்ஷினியோ வீட்டின் பின்புறமிருந்த ஆயிரம் சதுரடியை அழகிய தோப்பாக்கிவிட்டாள். சிறுவயதில் அவள் நட்டுவைத்த இளம் கன்றுகள் அவள் பருவம் எய்தும் போது பூத்துக் காய்த்துவிட்டது. தாயில்லாமல் வளர்ந்த தர்ஷினியின் மீது உயிரையே வைத்திருந்தார் மாணிக்கம், எத்தனையோமுறை அவர், “தர்ஷினிமா, பின்னாடி இருக்கும் இடத்தில் இரண்டு அறைக்கட்டினா, நமக்கு வசதியா இருக்கும், உனக்கு கல்யாணம் குடும்பம்னு வரும்போது நமக்கு இந்த இடம் போதாது” என்பார். அவர் முடிக்கட்டும் என்பதுபோல் காத்திருப்பவள், “அப்பா, நம்ம இரண்டுபேருக்கு இந்த இடம் தாராளமா போதும், இந்த தோப்பை அழிச்சுதான் வீடு கட்டனும்னா அதில் எனக்கு விருப்பமில்லைப்பா! என்பாள். போஸ்ட்மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றபின், தன் மகளோடு ஒரு எழிமையான வாழ்கையை வாழ்பவர் மாணிக்கம்,

அவளது திருமணத்திற்கு முன் வீட்டின் பின் புரத்தை இழுத்து அறைகள் கட்டிவிட வேண்டுமென்பதில் அவர் உறுதியாக இருந்தார். தன் நீண்டக் கூந்தலைப்பிண்ணி இறுதியை ஒரு வண்ண பேண்டுக்குள் விட்டு முடிச்சிட்டாள், அவள் கைப்படக்கோர்த்த மல்லிகை சரத்தை தலையில் வைத்து ஹேர்பின் குத்தியவள் தன்னை ஒருமுறைக் கண்ணாடியில் இரசித்துவிட்டுக்கிளம்பினாள். தர்ஷினி மாநிறம் களையான முகம், அவளுக்கே உரிய சாந்தக் குணம், தவறியும் அடுத்தவர் மனதைக் காயப்படுத்தாத அவள் மனப்பாங்கு, அக்கம் பக்கத்து குழ்ந்தைகளுக்கு அவள் தேவதை, அவளிடம் நிறைந்திருந்த நல்லப் பண்புகளே அவளது மேன்மையான அழகு! கைக்கடிகாரத்தில் நேரத்தைப்பார்த்தவள் , அவளது டூவிலரைக்கிளப்பிக் கொண்டுப்போனாள்.

டையாறில் அரைக்கிரவுண்டை அடைத்து சம்பந்தம் கட்டியிருந்த மாளிகையின் பிரதானபடுக்கை அறையில், விழிக்கப் பிடிக்காது உருண்டுக்கொண்டிருந்தாள் காவ்யா! காவ்யாவின் தாய் மீரா, இரண்டு முறை அவளை எழுப்பியும் எந்த பயனும் இல்லாது போக சம்பந்தத்தின் குரலுக்கு தான் அவள் அடங்குவாள் என்று தன் அடுக்களை காரியங்களுக்கு ஏவல் சொல்ல சென்றுவிட்டாள். தர்ஷினியின் டூவிலரை பார்த்து அந்த மாளிகையின் செக்யூரிட்டி புன்னகையுடன் கதவை திறந்தான், அவனுக்கு பதிலாக புன்னகையை உதிர்த்துவிட்டு வீட்டினுள் சென்றாள்.  தர்ஷினியும் ,காவ்யாவும் பள்ளி பருவத்திலிருந்தே உயிர்த்தோழிகள். காவ்யாவிற்கு தர்ஷினியின்றி ஒன்றும் ஓடாது. அவளைத் தொடர்ந்தே கல்லூரியையும் முடித்தாள். தர்ஷினிக்கு கேம்ப்பஸ் இன்டர்வியூவில் வேலைக் கிடைத்துவிட, சம்பந்தம் தன் செல்வாக்கை பயன்படுத்தி காவ்யாவையும் அதே கம்பனியில் பணியில் சேர்த்தார். சம்பந்தம் பெரும் செல்வந்தர், எண்ணற்ற தொழில்களை செய்பவர். தனக்கு பின்னால் தன் தொழில் சாம்ராஜியத்தை ஆளும் அளவுக்கு காவ்யாவின் அறிவு பலப்பட வேண்டும் மேலும் விளையாட்டுத்தனமும் குறும்பும் கொஞ்சமேனும் பொறுப்புகளற்று வளர்ந்த மகளின் பாதுகாப்பின் பொருட்டே அவர் தர்ஷினி அலுவலகத்திலேயே காவ்யாவை பணியில் அமர்த்தினார்,  இது தர்ஷினிக்கு நன்றாகத் தெரியும்.. ஆனால் காவ்யாவிற்கு அது எள் அளவும் தெரியாது.

காவ்யா தர்ஷினிக்கு இனையான அழகி. குழந்தைத்தனமும் குறும்புத்தனமும் இன்னும் அகலாத இளம்பெண். தர்ஷினியை தன் உயிருக்கு இணையாக நினைப்பவள். அவளருகே பூரண சுதந்திரத்தையும் மகிழ்சியையும் உணர்பவள்.

“ஹாய் அங்கிள்” – தர்ஷினியின் மென்மையான குரலுக்கு தன் பணிகளின் பொருட்டு கணிப்பொறி திரையில் முகத்தை பதித்திருந்த சம்பந்தம் நிமிர்ந்து புன்னகைத்தார்.  கையில் சிறிய காப்பி கோப்பையுடன் வந்தாள் மீரா.

“ஹாய் ஆன்ட்டி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.