(Reading time: 19 - 38 minutes)

மின்விளக்குகளில் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த பங்களாவை சுற்றிலும்  உயர்ரக கார்கள். மொட்டைமாடியில் விருந்து நடந்து கொண்டிருந்தது, ஒவ்வொரு வருடமும் சம்பந்தத்தின் செல்வாக்கு உயர, அவர்தன் மகளின் பிறந்தநாளையும் விமர்சையாக கொண்டாடுவார். காவ்யா பச்சைவண்ண டிசைனர் பட்டு புடவையில் மிளிர்ந்து கொண்டிருந்தாள். ஆங்காங்கே நின்று கொண்டு கொண்டும் அமர்ந்து கொண்டும் கைகளில் உணவு தட்டை ஏந்தியபடி சம்பந்ததின் நண்பர்கள் உரையாடிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது அவர் காவ்யாவை அழைத்து தன் நண்பர்களில் அவள் அறியாதவற்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். காவ்யாவிற்கு  எரிச்சலாகயிருந்தது உண்மையில் அவள் மனம் அப்போது தர்ஷினியை தேடியது. காவ்யாவிற்கு இந்த ஏகபோக பந்தா கொஞ்சம் கூட பிடிக்காது.  கண்டிப்பான தன் தந்தையிடம் அதை காட்டிக்கொள்ள விரும்பாது புன்னகையுடன் சமாளித்துக் கொண்டே தர்ஷினியை தேடினாள். காவ்யாவின்  வீட்டிற்குள் பூங்கொத்துடன் வந்து நின்றாள் தர்ஷினி. உள்ளம் முழுக்க நிறைந்த முகம் அவளை உறுத்த கண்களால்  அவனைத் தேடியபடி அலைபாய்ந்துக் கொண்டு நின்றாள். கீழே நின்ற வேலையாள் ஒருவர், “தர்ஷினி  மேடம், பார்ட்டீ மேல நடக்குது, காவ்யாம்மா அங்க தான் இருக்காங்க”, என்றார். அவனைப் பார்த்து சினேகமாக புன்னகைத்துவிட்டு இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறினாள்! விழிகளை விரித்து கூட்டத்தை அலசி கொண்டிருந்தவளின் வலது தோளை தட்டி தர்ஷினி திரும்பும்போது இடதுபக்கம் வந்து நின்று புன்னகைத்தாள் காவ்யா. இருவரும் கையில் பழச்சாறு கோப்பையை கையில் வைத்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தனர். தர்ஷினியின் மனநிலையை ஒருவாரு உணர்ந்துகொண்ட காவ்யா விரல்கள் நீட்டி சிவபிரகாஷ் நின்ற திசையைக் காண்பித்தாள். அங்கு அவன் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு சம்பந்தத்திடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். நிலவொளியில் ஆறடி உயரத்தில், காற்று வெளியில் கேசம் கலைந்து நெற்றியில் படர லேசான தாடியுடன் கம்பீரமாக நின்றவனை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள் தர்ஷினி.

அவளது முகத்தின் முன்னே கைகளை ஆட்டி கேலி செய்தாள் காவ்யா.

‘ஹே, போதும் மச்சீ, ஜூசைக்குடி இங்கிருந்தே அவன சாப்பிட்டுவ போல..!”

“ச்சீ, அதெல்லாம் ஒன்னுமில்ல.. காலையில் பார்த்தவரா? இவரு?” முகம் மறந்ததுபோல் தன் நெற்றியில் ஒரு விரலை வைத்து யோசித்தாள் தர்ஷினி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“அவரா, போச்சுடா, அதுக்குள்ளேவா வேண்டாம் மச்சீ, எதுல வேணுனாலும் விழலாம் ஆன இந்த லவ்ல விழுந்தா அப்புறம் ஒரு சோகமயம் தான்!” அவள் கிண்டலாக கூற,

“ஏய்! சும்மா.. சைட் அடிச்சேன்! அவ்வளவுதான், நானாவது லவ்ல விழுறதாவது! “ என்று பதிலுக்கு உரைத்தாலும் அவள் உள் மனம் அதை உண்மையில் மறுத்தது. “காவ்யா!” இங்கே வா! என்று சம்பந்தம் அழைக்க,

இரு மச்சி, ஹிட்லர் கூப்பிடுறாரு, என்னன்னு கேட்டுட்டு அப்படியே உன் ஆள பத்தின இன்ஃபோ கலைக்ட் பன்னிட்டு வர்றேன்!

சம்பந்தம் சிவபிரகாஷிடம், “சிவா, மீட் மை டாட்டர் காவ்யா” “காவ்யா, ஹீ இஸ் அவர் நீயூ லீகல் அட்வைசர், சிவபிரகாஷ், ஹைக்கோர்ட் அட்வகேட். இவரோட அப்பாதான்  ஆதி பிரகாஷ் அங்கிள், நம்ம கன்சர்ன் சம்பந்தப்பட்ட எல்லா லீகல் அட்வைசிங்கும் இவங்க அப்பாக்கு அப்புறம் இவர் தான் மா பாத்துகிறார்.”

“ஹலோ” என்று நீட்டப்பட்ட அவள் கைகளை அரைநொடி குலுக்கிவிட்டு அவளைப்பார்த்தவனின் கண்கள் மின்னியது, அவனையறியாது அவன் உள்ளம் மற்றொருவளைத் தேடியது.  சம்பந்தம் நகர்ந்ததும் சிவாவின் கண்கள் அவன் காலையில் கண்ட மலர் முகத்தைதேடியது. அவனது உள்ளப்போக்கை உணர்ந்து அவன் தன்னையே கடிந்துக்கொண்டான்.

அவனுக்கு சற்று தொலைவில் நின்று அவன் காணா வண்ணம் அவனை பருகிக்கொண்டிருந்தவளுக்கு சொல்ல முடியாத இன்பமும் துன்பமும் ஒரே வேளையில் தாக்கியது. “இது எந்த மாதிரியான உணர்வு, அவனை பற்றி அறிந்துகொள்ள உள்ளம் ஏன் ஏங்குகிறது! அவளுக்கு புரியவில்லை ஆனால் அவனின் அருகாமையை உள்ளம் வேண்டியது. பார்ட்டீ முடிந்தது கூட்டம் கொஞ்சம் கலைய தர்ஷினி கிளம்ப எத்தனித்தாள். சம்பந்தத்திடம் காவ்யா, “டாடீ, தர்ஷினி கிளம்புறா, நான் அவள ட்ராப் பன்னிட்டு வரட்டுமா?” கெஞ்சல் குரலில் அவள் கேட்க, 

“சார், நான் வர்றேன்.. அல்ரெடி லேட் ஆயிடுச்சு!” என்று அருகில் வந்து நின்ற சிவாவிடம்,

“சிவா, ஒரு சின்ன ஹெல்ப், இவள் தர்ஷினி, நம்ம காவ்யாவோட ப்ரண்டு, என்னோட இன்னோரு பொண்ணு மாதிரிப்பா, நீ போகும்போது இவள பெசன்ட்நகர்ல ட்ராப் பன்னிரு!” சம்பந்தத்தின் உரிமையான வார்த்தைகளை மீறாத சிவா காவ்யாவின் பின்னால் நின்றவளை வைத்தகண் வாங்காது பார்த்தான். காவ்யாவிற்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது,  இருவரும் அவனை நிமிர்ந்து பார்க்க, தர்ஷினியின் இதயம் வேகமாகத்துடித்தது. ஒரே ஒருகணம் அது வேண்டாமென நினைத்தாள் அடுத்த நோடி அவனுடனான தனிமையை நினைத்து திளைத்தாள். சிவாவை கேட்கவே வேண்டாம், விழிகளை உயர்த்தி தர்ஷினியைப் பார்த்தவன், இமைக்கமறந்துபோனான். ஏதேதோ மனப்போராட்டங்களில் கனத்திருந்த அவன் மனது அவளைப்பார்த்ததும் இளவம்பஞ்சாகிப்போனது. அவன் யோசிக்கும் நேரத்தில்,

“இல்ல, அங்கிள், பரவாயில்ல, நான் என்னோட டூவிலர்லதான் வந்தேன்.. சாருக்கு எதுக்கு சிரமம்..?” என்று சிவாவைப்பார்த்தாள்.

“இல்லம்மா, லேட் நைட் ஆயிடுச்சு, சிவா, நம்ம ஃபேமிலிமேன், நல்லப்பையன் மா, அவருக்கூட கிளம்பு,  நான் அப்பாக்கிட்ட கால் பன்னி சொல்லிடுரேன்…” – சம்பந்தம்

“தர்ஷினி..” அவனுடைய அழைப்புக்கு நிமிர்ந்தவளைப் பார்த்து..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.