(Reading time: 19 - 38 minutes)

ச்சீ,  யாருமே இல்லாதக் கடையில, யாருக்குடி டீ ஆத்துர?” - காவ்யா

“உண்மையாவே வேலைதான் பாக்குறேன்!” – தர்ஷினி

“ரீலீஸ் முடிஞ்சு மூனு நாள் ஆச்சு, ஒருத்தனுக்கும் வேலை இல்ல, மேடம் மட்டும் அப்படி விழுந்து விழுந்து,  என்ன வேலைப்பாக்குறீங்களாம்?” – காவ்யா

“நீ என்ன பாக்குறீயோ அதையே தான் நானும் பாக்குறேன்!” – தர்ஷினி

“வாவ், மச்சி, நான் கண்ட கசமுசாலாம் பார்த்தேன், உனக்கு லிங்க் ஷேர் பண்ணாவா?”

“ஏய்! அடி வாங்கப்போற, பர்த்டே அதுவுமா, கொஞ்சம் அடக்கி வாசி, நான் ஒன்னும் கண்ட கசமுசாலம் பார்க்கல! பட் வேலையும் பார்க்கல, ம்ம் சொல்லு எதுக்கு பிங்க் பன்னின?”

“ஈவ்னிங்க் பார்ட்டி இருக்கு மறந்துட்டியா? கிளம்பு அந்த அவசரக்குடுக்கை மேனேஜர் பிங்க் பன்னி ஏதாச்சும் வொர்க் அசைன் பன்றதுக்குள்ள எஸ்கேப் ஆயிடலாம்!”

தர்ஷினியின் மனம் ஒரு நிலையில் இல்லை. ஏனொ அவள் முதன் முறையாக காவ்யாவின் வேண்டுகோளை நிராகரித்தாள். “காவீ, வீட்டில கொஞ்சம் வேலை இருக்கு, நீ கிளம்பு, நான் பார்ட்டி ஸ்டார்ட் ஆனதும் வர்றேன்”. காவ்யா மருக்கவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீ தான் என் சந்தோஷம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

வீட்டின் கதவைத்திறந்துக்கொண்டு நுழையும்போது மாணிக்கம் மகளைப்பார்த்து புன்னகைத்தார். விரைந்து அடுக்களைக்குள் சென்றவர் அடுத்த பத்து நிமிடங்களில் காப்பி கோப்பை தர்ஷினியின் கைகளில் கொடித்தார். “தேங்க்ஸ் பா, நீங்க எங்கேயோ கிளம்பனும்னு சொன்னீங்கல்ல”

“ஆமாம்மா,  ஒரு பிரபல துணிக்கடையில கணக்கர் வேலையிருக்கு, பகுதி நேரம் தான், வீட்டிலேயே சும்மா இருக்கிறதுக்கு போயிட்டு வரலாம்னு பாக்குறேன்!”

“அப்பா,  நீங்க இப்ப வேலைக்குப் போற அளவுக்கு தேவையென்ன வந்தது?” தர்ஷினியின் முகம் வாடியது. “இப்ப இருக்கிர சேமிப்பும் என் சம்பளமும் தாராளமா, நமக்கு போதும்பா, உங்க பென்ஷன் இருக்கு, சொந்தவீடிருக்கு வேற என்ன வேணும்?:”

“தர்ஷினிமா, பணத்தேவைக்காக நான் போகலடா! சும்மா வீட்டிலேயே உட்காந்திருந்த நோய் தான் வரும், அதோட உன் கல்யாணத்தோட என் செமிப்பை வைத்து இந்த வீட்டை கொஞ்சம் பெரிசு பண்ணிகட்டிட்டேனா, அப்புறம் உன் கல்யாணத்துக்கு வரதட்சணையா இதை கொடுத்திடலாம், இன்னும் கொஞ்சம் சேமிப்பு இருந்தா நாளைக்கு நீ வேலைக்கு அலையாம வீட்டில ஜம்முன்னு உட்காந்து ராஜாத்தியா இருக்கலாம்!”

“அப்பா,  என்ன கல்யாணம் பன்றவர் எனக்காக என்னை கல்யாணம் பன்னனுமே தவிர உங்க சேமிப்பு, வீடு நகை நட்டுன்னு கணக்கு பார்த்து வரக்கூடாது, மேலும் வேலைக்கு போறது என்னோட சுயவிருப்பம், அதை தடை சொல்ல யாருக்கும் உரிமையில்லை! அதுமட்டுமில்ல நான் கல்யாணம் பன்னி போரவீடு எனக்கு மட்டுமில்ல உங்களுக்கும் அது தான் மாமியார் வீடு! உங்கள தனியாவிட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்!”

மாணிக்கம் புன்னகைத்தார், “சரிமா, நீ மாப்பிள்ளை வீட்டுக்கு போகும்போது, நானும் பெட்டி படுக்கையோட வந்திடுறேன், இப்ப என் மகளைப் போல சுய மரியாதையோடு வீட்டில வெட்டியா இருக்கப்பிடிக்காது ஒரு சின்ன வேலைக்கு போறேன். கிளம்பட்டுமா? “

தர்ஷினி தலையசைத்தாள், மாணிக்கம் கிளம்பிபோனதும், விழிகள் மூடி மெத்தையில் சாய்ந்தாள், இதுவரை மாணிக்கம் தர்ஷினியின் கல்யாண பேச்சையெடுக்கும் போதெல்லாம் அவரை விட்டு பிரியும் பயம் மட்டுமே மனதை தாக்கும், ஆனால் இன்று அலைஅலையாய் எண்ணங்கள் அவளை சாய்த்தது. அத்தனை எண்ண அலைகளும் ஒருவனையே சுற்றியது! விருட்டென்று எழுந்து ஒரு வெள்ளைத் தாளில் அவன் முகத்தை வரைந்தாள். தர்ஷினிக்கு ஓவியம் கைவந்தக் கலை, வரைந்து முடித்தபின் தர்ஷினியின் கண்கள் மின்னியது, “என்ன களையான முகம்!” முதன்முறையாக மெல்லிய கனவுகள் அவள் மனதை ஆட்கொள்ள அவள் விழிகள் மூடிக்கொண்டாள். அலைபேசி சினுங்கியது. காவ்யாவாகத்தான் இருக்கும் அவள் உள்ளம் சொல்லியது. மிகவும் சரி அவளே தான், அலைபேசியை காதில் வைத்தாள்.

“மச்சீ,  பார்ட்டிக்கு வரலையா?”  - காவ்யா

என்ன சொல்வது என்று யோசித்தவாரே, “லேசா தலைவலி, கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்” – தர்ஷினி

சரி சரி சீக்கிரம் வா,  உனக்கு ஒரு ஸ்ர்ப்ரைஸ் வெயிட்டிங்க்!”

“என்னது டீ!”

“காலையில ஒருத்தன தேங்கா வால அடிச்சீயே.. அவன் பார்ட்டிக்கு வந்திருக்கான்… மச்சீ!” பரவால பொழச்சுட்டான் நல்லாத்தான் இருக்கான்…!”

இதைக்கேட்டதும் தர்ஷினி துள்ளிக்குதித்து எழுந்தாள், “ஹாவ் அன் அவர்ல அங்க இருப்பேண்டீ!” அழைப்பை துண்டித்துவிட்டு கிளம்பினாள்.  காவ்யாவிற்கு புரிந்துவிட்டது, அவள் தனக்குள் புன்னகைத்துக்கொண்டாள்.  மஞ்சளும் ஆரஞ்சும் பினைந்த சந்தேரிக்காட்டன் சுடிதாரை அணிந்தாள்,  தலையை விரித்து கிளிப்புக்குள் அடக்கி, பின்னால் விரிய விட்டாள். உள்ளம் தானாக அவனை தேடியது, பார்க்கும் ஆவல் உவக்க,  வீட்டை விட்டுக் கிளம்பினாள் அவள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.