(Reading time: 19 - 38 minutes)

னக்கு எந்த சிரமும் இல்ல, வா போலாம்!” என்றான். ஏனோ அவன் ஒருமையில் அவளை அழைத்ததும் அவள் முகம் மலர்ந்து புன்னகைத்தாள். வேரெதுவும் பேசாது அவன் பின்னால் நடந்தாள். தர்ஷினி திரும்பி காவ்யாவைப்பார்க்கும் போது அவள் பெருவிரலை உயர்தி வெற்றியின் குறியைக்காட்டினாள்.

சிவப்புநிற ஃபோர்டு காரின், முன்கதவை திறந்து நின்றான். அவள் ஏறியதும்,  முன்புறமாக சுற்றிவந்து காரில் ஏறினான். தர்ஷினியை ஒருமுறை பார்த்துவிட்டு காரைக் கிளப்பினான். கண்ணாடி வழியே வெளியேப் பார்த்துக்கொண்டிருந்தவளின் உள்ளம் அவனிடம் பேச துடித்தது.

“பெசன்ட் நகர்ல, எங்க இருக்க?” கேள்வியோடு அவளைப்பார்த்தான்

“எம்.ஜீ ரோடு பேக் சைடு, ஹவுசிங்க் போர்டு காலணி”  முகவரியை சொல்லும் வண்ணம் அவன் முகத்தை ஏறிட்டாள்.  காலையில் பட்ட காயத்திற்கு சிறியதாக ஒரு ப்ளாஸ்டர் ஒட்டியிருந்தான். இடது கையை ஸிடியரிங்கில் ஊன்றியிருந்தான்.

அவன் மிகவும் களைத்திருப்பதாக அவள் உள்ளம் சொல்லியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேவதி சிவாவின் "வரத்தினால் பெற்ற சாபம்" - சமூக பார்வைக் கொண்ட தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“ஸாரி..காலையில வேணும்னு பண்ணல, நீங்க நிக்கிறது தெரியாம விடலப்போட்டு.. ஐயம் ரியலி ஸாரி…!”

அவள் முடிக்கும் முன் அவன் கண்கள் அவளை ஏறிட்டதில் அவளது வார்த்தைகள் பாதியில் நின்றுபோனது.. அவனுக்கும் தான்.

சில நொடி மவுனத்திற்கு பின், தர்ஷினி மீண்டும் கேட்டாள்,

“ரொம்ப வலிக்குதா?” உண்மையான வருத்தத்தோடு அவள் கேட்டாள், ஆமாம் என்று அவன் சொன்னாள் அதற்கு அவளிடம் பதில் இல்லை.. நிலவொளியில் மின்னிய முகத்தை கையில் ஏந்தும் எண்ணம் ஒரு கணம் அவன் மனதை நனைத்தது, உணர்வுகளை வெளிக்காட்டாது அவன் பதில் உரைத்தான், “அட, பரவாயில்ல விடு, எத்தனையோ காயங்கள், மனசில இருக்கு அந்த காயத்தவிட இது ஒன்னும் பெரிசில்ல..” இந்த வார்த்தையைக் கூறும்போது அவனது முகம் வேதனையைக் காட்டியது.. தர்ஷினிக்கு சொல்லமுடியாத வருத்தம். ஏதொ ஒரு உணர்வு நெஞ்சை பிசைந்தது. வீட்டின் அருகே அவளை இறக்கிவிட்டான், அவள் கதவைத்திறந்து உள்ளே செல்லும் வரை கார் அருகே நின்றவன்,  அவள் சென்றதும் காரைக் கிளப்பினான். அவன் கிளம்பும்வரை கதவருகே நின்றவளின் கண்களில் கண்ணீர் துளிகள் மின்னியது. அந்தக் கண்ணீர் எதுக்கென்று அப்போது அவளால்  உணரமுடியவில்லை. உயிருள்ள பதுமையின் உடலை இறக்கிவிட்டு.. உள்ளத்தை களவாடியவனின் நிலையை நான் சொல்ல வேண்டுமா என்ன? பூரண சந்திரனின் ஒளி பூமியை நனைத்தது.. இணையத்துடிக்கும் இரு இதயங்களின் உணர்வுகள் அந்த மெல்லிய நிலவொளிப்போன்று மனதை நனைத்தது..

தொடரும்

Episode # 02

{kunena_discuss:1120}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.