(Reading time: 19 - 38 minutes)

வாம்மா” – கையிலிருந்த காப்பி கோப்பையை அவளிடம் நீட்டி புன்னகைத்தாள்.

“ஆன்ட்டி, காவ்யா?”

“அவ, இன்னும் எழுந்திரிக்கலை,  நீ உக்காருமா, அவ அப்பா இரண்டு அதட்டல் போட்டா, தானா வருவா!” என்றவாரே, அடுக்களைக்குள் நுழைந்தாள்.

இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும், கீழிருந்து மாடியை நோக்கி, “காவ்யா! காவ்யா” என்று வீடே அதிருமாரு கத்தினார், சம்பந்தம். அந்த அதட்டலுக்கு தர்ஷினியின் உடல் கூட தன்னை அறியாது நடுங்கியது, ஆனால்  அந்த வீட்டில் தினமும் நடக்கும் கூத்துதான் அது என்பதை அவள் நன்று அறிவாள்.

போர்வைக்குள் இன்னும் சுருண்டு உறங்கிக்கொண்டிருந்த காவ்யாவின் காதுகளை சம்பந்ததின் குரல் உலுக்கி எழுப்பியது. அவ்வளவுதான் திரைப்படங்க்களில் வரும் விரைவு சுழ்ற்சி ( ஃபாஸ்ட் மோஷன் சீன் ) போன்று அரண்டு மிரண்டு எழுந்து பார்த்தாள் அவள்.

“காவ்யா, இன்னுமா தூங்குற, பர்த்டே அதுவுமா! பாரு தர்ஷினி வந்தாச்சு, சீக்கிரம் கிளம்பு!” அவர் அதட்டலான வார்த்தைகள் காதில் விழ அவள் விறுவிறுவென கிளம்பினாள். அழகான நீல வண்ண காக்ரா சோழியில் திளைத்து, அடுக்கடுக்காக வெட்டப்பட்ட கூந்தலில் ஒரு பகுதியை கிளிப்பிற்குள் அடக்கி, மெல்லிய ஒப்பனையுடன், தேவதையாக படிகளில் இறங்கி வந்தவளை ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள் தர்ஷினி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "நின்னை சரணடைந்தேன்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“ஹேப்பி பர்ட்டே டீ!” அவள் கண்ணத்தைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டாள்.

சம்பந்தம் ஹாலில் தன் அலுவலக வேலைகளில் மூழ்கியிருக்க,  தர்ஷினியை பார்த்து கண்களில் “நாம் கிளம்புவோம்!”  என்பதுபோல்  ஜாடைக்காட்டிக்கொண்டே ஒரு கையில் தர்ஷினியை பற்றிக்கொண்டு வெளியே வந்தாள். “பை டாடீ, மம்மீ!” என்று கத்திவிட்டு  தர்ஷினியுடன் ஸ்கூட்டியில் சிட்டாக பறந்துவிட்டாள். இருவரும் கொஞ்ச தூரம் வந்ததும்…

“ஏய்! எங்கடி போற” – காவ்யா

“கோவிலுக்கு!” – தர்ஷினி

“ம்ச்! வீட்டிலதான் மம்மீ கோவிலுக்கு போ, சாமி கும்பிடு, விளக்கு ஏத்துன்னு, டார்ச்சர் பண்றாங்க பத்தாதுக்கு நீ வேரயா! பர்த்டே அதுவுமா, ஏண்டி படுத்துற!” என்று முகம் சுளித்தவளை தன் டூவிலர் கண்ணாடியில் பார்த்து புன்னகைத்தாள் தர்ஷினி. இருவரும் டூவிலரை நிறுத்திவிட்டு அந்த பெரிய ஆலயத்திற்குள் நுழைந்தனர். மூலவரை வணங்கிவிட்டு சுற்றி வந்து ஒரு சிறிய விநாயகர் ஆலயம் முன் நின்றனர். தன் கைப்பையைத்துளாவி ஒரு தேங்காயை தர்ஷினி எடுக்க,  புன்னகையுடன் காவ்யா, “ம்.. நான் ரெடி, சீக்கிரம் போடு காலையில சாப்பிடவேற இல்ல!” என்றவாரே தேங்காயை புரக்க ரெடியானாள் காவ்யா!

“ச்சீ, நாம போட்ட விடலையை நாமே எடுக்கக்கூடாது, இந்த விடலையே உனக்காகத்தான், ஒழுங்கா சாமி கும்பிடு” என்று மிரட்டியவளை பார்த்து முகம் சுளித்துவிட்டு கைகள் கூப்பி  கண்ணை மூடி நின்றாள் காவ்யா.

சன்னதிபடியில் விடலைத் தேங்காயை தர்ஷினி வீச, அது நொறுங்கியது .. கூடவே, “ஆ!” என்ற அலரல் சப்தமும் கேட்டு இருவரும் நிமிர..தன் நெற்றியின் தசைகளை கிழித்த அந்த தேங்காயை சில்லை எடுத்துவிட்டு கைகளில் குருதிபரவ எதிரே நின்றவளை நிமிர்ந்து பார்த்தான் சிவபிரகாஷ். இறைவன் சன்னதியில் கண்கள் மூடி நின்றவனை சிதறடித்து விட்டது அந்தவிடலை. கண்முன் தெரியாமல் விட்டெறியப்பட்ட விடலையில் தன் நெற்றியின் திசைகளை கிழிந்து இரத்தம் கசிய அதீத கோபத்துடன் தர்ஷினியைப் பார்த்தான். நடந்த சம்பவத்தில் அதிர்ச்சியில் உரைந்து நின்ற இருவரில் முதலில் தர்ஷினியின் மீது அவன் பார்வை விழுந்தது.. அவள் பயத்தில் உரைந்து செய்வதறியாது நின்றாள்.

காவ்யா மெதுவாக சுதாகரித்துக்கொண்டு தர்ஷினியின் காதருகே வந்து, “மச்சீ, ஓடிடலாம்!” என்றாள். அவளை பார்த்து முறைத்த தர்ஷினி தன் கைப்பையைத்துளாவி ஒரு கைக்குட்டையை அவன் முன் நீட்டினாள். அவன் வேண்டாமென வலதுகையை உதறி தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்த கைக்குட்டையால் தன் நெற்றியை அழுத்திக்கொண்டு மீண்டுமொருமுறை தர்ஷினியைப் பார்த்தான். ஏனோ, அவன் கோபமெல்லாம் அவள் விட்டெறிந்த தேங்காயைப் போன்றி சிதறிபோனது. அன்று மலர்ந்த மலர் போன்ற மென்மையான முகத்தில் உண்மையான வருத்தம் மின்ன கதர் புடவையில் களையான முகத்துடன் தேவதையாக நின்றவளை அவனால் கடிந்து கொள்ள முடியவில்லை. தர்ஷினி, “ஸாரி” என்று சொல்ல வாயெடுத்தாள் ஆனால் நிமிர்ந்து அவளைப்பார்த்த அந்த கண்களையும், ஆண்மை ததும்பும் அவன் முகத்தையும்,  கோபமும் இன்னும் ஏதோ உணர்வுகளையும் பிரதிபலித்த அந்த கண்களை நேரே சந்தித்ததில் பேச்சிழந்துப்போனாள்.

“வாடி போலாம்!” என்று கைகளைப்பிடித்து இளுத்துப்போனாள் காவ்யா!. காவ்யா தான் வண்டியை ஓட்டினாள், அவளின் பின்னே அமைதியாக வந்த தர்ஷினியின் மனதில் ஒரு மென்மையான ஏக்கம் பரவியிருந்தது.. “யாரவன்?”  இதுவரை அந்த ஆலயத்தில் பார்க்காத முகம். காயப்படுத்திவிட்டு மன்னிப்பு கூட கேட்காது வந்தோமே,  அவள் உள்ளம் வாடியது. அவன் ஓளி சிந்தும் கண்களைக்காண அவள் உள்ளம் ஏங்கியது! அன்றைய நாள் அலுவலகம் இயந்திரகதியாய்ப்போனது இடையறாத பணிகளுக்கிடையேயும் மதுரமான அவன் முகம் அவளது மனதை நனைத்ததை தர்ஷினியால் தவிர்க்க முடியவில்லை. கணினித்திரையில் பார்வையைப் பதித்து சிந்தனையை எங்கோ வைத்திருந்தவளை மின் அரட்டையில் ( சாட் விண்டோ ) அழைத்தாள் காவ்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.