(Reading time: 30 - 59 minutes)

ன்னது சார் இது என்று கேட்டுக்கொண்டே வாங்கியவர் அதை பார்க்கும் போது கதிர் கூறினான் கவி மேடமும் எங்கள் பாஸ் மஹிந்தனும் கல்யாணம் முடிந்ததை பதிவு செய்த சான்றிதழின் நகல் சார் என்று கூறினான் .

அவன் சொன்னதை அதிர்ச்சியுடன் கேட்டவர் அந்த சான்றிதழில் உள்ள பெயர்களை பார்த்தும் அவரால் அதை நம்பவோ ஏற்கவோ முடியாமல் . என் மகள் இப்போ எங்கே? நீங்கள் கடத்தி வைத்திருக்கிறீர்களா? .என் மகள் சம்மதத்துடன் ஒன்றும் இவ்வாறு நடந்திருக்காது என்று கதிரின் சட்டையை பிடித்து உலுக்கி கேட்டார் .

பார்வதியும் முதலில் அதிர்ந்தாலும் ஈஸவரன் டென்சனானதும் அவருக்கு திரும்பவும் உடலுக்கு முடியாமல் போய்விடுமோ? என்று பயந்தார் . தன் மகளை பற்றி கவலை படுவதா இல்லை, அதனால் தன் கணவனுக்கு திரும்ப உடல் பாதித்துவிடுமோ என்று பயப்படுவதா என்று புலம்பியபடி நின்றார்.

அவரை சமாதானப் படுத்தும் நோக்குடன் வருண் அப்பா நான் அக்காவுடன் இப்பொழுதுதான் போனில் பேசினேன் அவள் நலமாக இருக்கிறாள் . நீங்கள் சற்று அமைதியாக உட்கார்ந்து நடந்ததைப் பற்றி விசாரியுங்கள் என்று கூறினான் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

பார்வதி ஓர் செப்பில் தண்ணீரை கொண்டுவந்து முதலில் நீங்கள் இந்த தண்ணீரை குடித்துவிட்டு கொஞ்சம் பொறுமையாக என்ன ஏது என்று விசாரிக்கலாம். நம் கவி நலமாகத்தான் இருக்கிறாள் என்று வருண் கூறுகிறான். அதனால் நிதானமாக் உங்களின் உடல் நிலையையும் மனதில் கொண்டு கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொள்ளுங்கள் என்றாள் .

எப்படி பார்வதி என்னால் அமைதியாக இருக்க முடியும் , எப்படி சந்தோசமாக வீட்டில் கலகலப்பாக வளைய வந்த என் மகள் எப்பொழுது இவர்களிடம் வேலைக்குப் போனாலோ, அன்றிலிருந்தே அவளின் கலகலப்பே தொலைத்து போய்விட்டது. இதற்கெல்லாம் காரணமான் அந்த மஹிந்தனை என் மகளின் மாப்பிள்ளையாக என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்றார் .

உடனே பார்வதி, கொஞ்சம் அமைதியாக நான் சொல்வதை கேளுங்கள் இப்பொழுது நாம் அவசரப்படக் கூடாது .இப் பிரச்சனையில் இருப்பது பெண் பிள்ளை. இதை நாம் கவனமாகத்தான் கையாள வேண்டும் அவசரப்பட்டு நாம் எதுவும் செய்தால் பின் நம் மகளின் வாழ்க்கையே பிரச்சனையாகிவிடும். முதலில் நம் கவியிடம் நாம் பேசவேண்டும் அவளின் நிலை தெரிந்தபின் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று பார்ப்போம் என்றாள்.

கதிர் சொன்னான், சார் நான் போய் இப்பொழுது எங்கள் பாஸின் தங்கை மதுராவை இங்கு கூட்டிக்கொண்டு வருகிறேன் அவர்கள் உங்களுடன் பேசவேண்டும் என்று என்னை கூப்பிட வரச் சொன்னார்கள் .என்று கூறியவன் வருனிடம் தன்னுடன் வெளியில் வரும்படி கூறியவன் “வருனுடன் வீட்டிற்கு வெளியில் வந்தான்”. தன்னுடைய மொபைல்லில் இருந்து மஹிந்தனுக்கு தொடர்புகொண்டான்.

சொல் கதிர். ழையாவின் அப்பாவீட்டில் என்ன சொன்னார்கள் என்று கேட்டான் மஹிந்தன்.

அவர்கள் மேடமுடன் பேசவேண்டும் என்று சொன்னார்கள் நான் வருனுடன் அவர்கள் வீட்டு வாசலில் இருக்கிறேன் என்று கூறினான் .

நீ மொபைலை வருனிடம் கொடு கதிர் என்று கூறினான் மஹிந்தன் .

மொபைலை கையில் வாங்கி தன் காதில் வைத்ததும் வருனிடம் .மஹிந்தன் பேசினான் , வருண் நான் உன் அக்காவிடம் போனை கொடுக்கிறேன் உன் அப்பாவிடம் அவர் உடல் நிலையை மனதில் வைத்து உன் அக்காவை அவரிடம் பேசச்சொல் வருண், என்று கூறி ழையா உன் தம்பி உன்னிடம் பேசவேண்டுமாம் பேசு என்று கூறி தன் மொபைலை கவியிடம் கொடுத்தான் மஹிந்தன்.

தன் தம்பி பேசுகிறான் என்று தெரிந்ததும் ஆவலுடன் வாங்கி வரு என்று பேச்சை ஆரம்பித்ததும் .

வருண் ,அக்கா நான் கேட்பதற்கு நீ உன் மனதில் உள்ளதை மறைக்காமல் கூறவேண்டும் என்று நேரடியாக அவளின் நலம் பற்றி விசாரிக்காமல் கராராகத் தன் பேச்சை ஆராம்பித்தான் வருண் .

அவனின் குரலில் ஓர் அழுத்தம் இருப்பதை உணர்ந்த கவிழையா என்ன கேட்கப் போகிறாய் வருண் என்று கேட்டாள் .

அதற்கு வருண், அக்கா மிஸ்டர் மஹிந்தனை விட்டு உன்னை நான் திரும்ப மீட்டு கூட்டிவந்தால் நீ, அப்பா உனக்குப் பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளையை உடனே கல்யாணம் செய்துகொல்வதற்க்குச் சம்மதிப்பாயா? இதற்க்கு நீ இப்பொழுது உண்மையான பதில் கூறவேண்டும் என்று கூறினான் .

அதற்கு முதலில் பதில் கூற சற்று திணறிய கவிழையா . நான் உடனே யாரையும் கல்யாணம் செய்துகொள்ள சம்மதிக்க மாட்டேன் என்றாள். அதற்காக இந்த மஹிந்தனுடன் என்னை குடும்பம் நடத்தச் சொல்லி என்னை இங்கிருந்து கூட்டிச் செல்லாமல் விட்டுவிடுவீர்களா? வருண் என்று கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.