(Reading time: 30 - 59 minutes)

ஹிந்தன் தனுசிடம் பேசியவிதமும் சொன்ன வார்த்தைகளும் ழையாவிற்கு மேலும் அவன் மேல் கோபத்தையே கொடுத்தது .எனவே அவள் கோபத்துடன் நான் என்ன உங்கள் அடிமையா ,இங்கேதான் இருக்கணும் இவர்களுடன் தான் பேசணும் என்று ஆர்டர் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் .நான் காரைவிட்டு இறங்க மாட்டேன் என்னை என் வீட்டில் கொண்டு போய் விடுங்கள் என்று வெடுவெடுவென்று பேசினாள்.

அவள் அவ்வாறு பேசியதும் , மஹிந்தன் நான் பொறுமையா உன்னிடம் சொல்கிறேன் எனக்கு நிறைய வேலை இருக்கிறது முரண்டு பிடிக்காமல் வா .என்று கூறி அவள் கைபிடித்து இழுத்தான் .

ழையா காரின் சீட்டை பிடித்துக் கொண்டு நான் இறங்க மாட்டேன் என்று பிடிவாதமாக் இருப்பதை பார்த்த மஹிந்தன் கொஞ்சம் முன்னால் தான், என் பனிஷ்மென்ட் எப்படி இருக்கும் என்று சொல்லியிருக்கிறேன் ,என்ன? திரும்பவும், உன் உதட்டிற்கு என் உதடால் தண்டணை கொடுக்க வேண்டுமா. என்று கூறிக் கொண்டு அவளை நோக்கி குனிந்தான்.

அவன் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்த ழையா தான் சீட்டை பிடித்திருந்த கைகளை எடுத்து வாயை மூடி பின்னால் நகர்ந்து செல்ல முயன்றதை உதட்டில் தவழும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டே அலேக்காக அவளை தூக்கி காரைவிட்டு இறக்கிவிட்டவன் எப்படி என்று அவன் சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொண்டு அவளை பார்த்து கண் சிமிட்டினான் , மஹிந்தன் .

அவன் அவ்வாறு செய்ததற்கு சகிக்கலை என்று வார்த்தையால் கடித்து துப்பியவள் அவள் இருக்கும் இடத்தை சுற்றிப் பார்த்தாள் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீ தான் என் சந்தோஷம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவள் சுற்றிப் பார்ப்பதைப் பார்த்த மஹிந்தன் வீடு எப்படி இருக்கு ழையா உனக்கு பிடிச்சிருக்கா ? என்று கேட்டான் .

அவள், “ஆமாம் உங்களுக்கு வசந்தமாளிகை சிவாஜி என்று நினைப்போ?” நான் ஒன்றும் உங்கள் மாளிகையின் அழகைய் ரசிக்கவில்லை நான் சுற்றிப் பார்ப்பதே வேறு ஒரு கண்ணோட்டத்தில் .என்று கூறினாள் .

அவள் அவ்வாறு கூறியதும் மஹிந்தனுக்கு முகத்தில் புன்னகை அரும்பியது அவன் மனதிற்குள் இப்பத்தான் இவள் பார்முக்கு வந்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு, வெளியில் அவளிடம் வீட்டின் லோக்கேசனை பார்க்காமல் வேறு என்ன பார்க்கிறாய் எப்படி இங்கு இருந்து எஸ்கேப் ஆகலாம் என்றா? என்று கேட்டான்.

மஹிந்தன் அவ்வாறு கேட்டதும் கவிழையாவின் வாய் அதற்குப் பதில் கூறவில்லை என்றாலும் அவள் முழியே ஆம் அப்படித்தான் என்று பதில் கூறியது .

அவளுடைய முகத்தை பார்த்தவன் உன் வாய் என்னிடம் பேசாவிட்டாலும் உன் கண் எனக்கு பதில் சொல்லிவிட்டது .என்று கூறியவன். “நோ வே டு எஸ்கேப்” என்று கூறினான் .

அவன் அவ்வாறு கூறியதும் கவிழையா அவனுடன் நடந்துகொண்டே உங்களின் இச்செயலால் எனது அப்பாவிற்கு திரும்ப எதுவும் உடம்பிற்கு முடியாமல் போய்விட்டால், நீங்கள் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் பயப்படாமல் உங்களை நான் தண்டிப்பேன் என்று கூறினாள் .

அவள் அவ்வாறு கூறியதும் இப்பொழுது எதுக்கு உனக்கும் எனக்கும் இடையில் உன் அப்பாவை வைக்கிறாய் .எனக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை நீ இப்படி என்னையும் என் அந்தஸ்த்தையும் பார்த்து துச்சமாக நினைப்பதுவும் உன்னை நான் விரும்புவதற்கு ஒரு காரணம் என்றவன், “ஓ கே பேபி” உனக்கு என்ன உன் அப்பாவின் உடல் நலமாக இருக்கவேண்டும் அப்படித்தானே என்றவன் .நீ யாரோ ஒரு மஹிந்தனின் வீட்டில் இருக்கிறாய் என்று உன் அப்பாவுக்குத் தெரிந்தால் தானே உன் அப்பா வருத்தப்பட்டு உடல் பாதிப்படைவார் .ஆனால் தன் மகள், அவனின் கணவன் மஹிந்தனின் வீட்டில் இருக்கிறாள் என்று தெரிந்தால் சந்தோசத்தில் அவர் உடல் நல்ல நிலைமைக்குத் திரும்பும் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் கவிழையா கோபத்துடன் உங்கள் அந்தஸ்த்தையும் பணத்தையும் பார்த்து ஒன்றும் என் அப்பா சந்தோசப்பட மாட்டார் உங்களுக்கு உங்களின் மேல் ஓவர் ஸெல்ப் கான்பிடன்ஸ், நீங்கள் என் கணவர் என்று தெரிந்தாலும் என் அப்பா வருத்தம் தான் படுவார் என்றாள் .

அவனுடன் பேசிக்கொண்டே அந்த மாளிகையின் வாசலுக்கு வந்த போது அந்த வீட்டின் தோட்டத்தில் பராமரிப்புக்காக ஓர் நடுத்தரவயது தம்பதிகள் குடியிருந்தனர் அந்த வீட்டில் இருந்த காயத்திரி கையில் ஆரத்தி சுற்றும் தட்டுடன் அய்யா அம்மாவோடு ஒரு நிமிடம் சேர்ந்து வாசலில் நில்லுங்களேன் நான் ஆரத்தி சுற்றிய பிறகு அம்மா வலது கால் வைத்து உள்ளே போகலாம் என்றாள் .

உடனே மஹிந்தன் கொஞ்சம் தள்ளி நடந்துவந்த ழையாவின் கையை எட்டிப்பிடித்து தன் அருகில் இழுத்து நிற்கவைத்து அவள் தோலின் மேல் தன் கையை சுற்றிப் போட்டான் .இப்பொழுது ஆரத்தி எடுங்கள் என்று புன்னகையுடன் காயத்திரியைப் பார்த்து சொன்னான் .

தன் முதலாளி தன்னை பார்த்து சிரித்துக்கொண்டே அவ்வாறு பேசியதை பார்த்த காயத்திரிக்கு ஆச்சரியமாக் இருந்தது .

ஏனெனில் கவிழையாவின் உருவப்படம் அந்த வீட்டின் ஹாலில் பெரிதாக டிசைன் செய்யப்பட்டு மாட்டுவதர்க்காக எடுத்து வந்து நடு ஹாலில் வைத்திருந்த போது அந்த போட்டோவின் மீது, அதில் அருகில் நின்று வேலையாட்களுக்கு பருக வழங்கப்பட்ட தேநீரை பருகிய ஓர் பணியாளன் காலி பேப்பர் கப்பை வைத்தான் ,.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.