(Reading time: 30 - 59 minutes)

ஹிந்தன் கொஞ்சம் அடங்கு வருண் நாளை காலையில் வரும் பேப்பரில் ழையா என் மனைவி என்றும் எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடக்க இருந்த கல்யாணம் நின்றுவிட்டது என்ற செய்தியும் வரும். மேலும் எங்களுக்கு நடந்த திருமணத்திற்கு உன் அப்பாவின் சாட்சி கையெழுத்துதான் முதலில் உள்ளது .

மேலும் நீ புத்திசாலி என்று நினைத்தேன் ஆனால் உனக்கு இந்த மஹிந்தனின் பலமும் அந்தஸ்த்து தெரிந்த பின்பும் உன் அக்காவை நான் கல்யாணம் செய்திருப்பதைப் பார்த்து உனக்கு சந்தோசம் தானே வந்திருக்கணும்? சரி.அதைவிடு

இப்பொழுது நீ வேகமாக சென்று உன் அப்பாவிடம் போய் நான் நல்லவன் வல்லவன் உன் அக்காவிற்கு ஏற்ற புருஷன் என்றும் இப்பொழுது உன் அக்கா இந்தியாவில் கோடீஸ்வரன் மற்றும் “தெ கிரேட் பிசினஸ் மேன்” மஹிந்தனின் மனைவி என்ற பெரிய இடத்தில் உள்ளதன் அருமை பெருமைகளை எடுத்துக் கூறி அவரை ரிலாக்ஸ் செய்யனும், இல்லாவிட்டால் உன் அப்பாவிற்கு உடல் முடியாமல் போய்விடும் என்று கூறினான் .

மஹிந்தனின் பேச்சில் சற்று அதிர்ந்தவன் பின்பு தன் தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மிஸ்டர் மஹிந்தன் உங்களின் அராஜகத்திற்கு ஒருநாள் முடிவு பிறக்கும் என்றவன் ஆனால் நான் இப்பொழுது உள்ள என் அப்பாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரைப் பார்க்கப் போகிறேன். ஆனால் நான் உங்களுக்கு பயந்து ஒன்றும் என் அப்பாவை சமாதானப் படுத்தப் போவதில்லை என்று வருத்தத்துடன் கூறினான் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேவதி சிவாவின் "வரத்தினால் பெற்ற சாபம்" - சமூக பார்வைக் கொண்ட தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

வருணின் பேச்சு தன்னுடைய அதிரடிப் பேச்சினால் சற்று நிதானத்திற்கு வந்ததை அறிந்த மஹிந்தன் தானும் சற்று பொறுமையாக் பேச ஆரம்பித்தான் .

வருண் நான் கொஞ்சம் ஹார்ஸாக பேசிவிட்டேன் .நான் என்னசெய்ய இப்படி அதிரடியாகப் பேசியதால்த்தான் நீ கொஞ்சம் அடக்கி என்னிடம் பேசுகிறாய் என்றவன், ‘’நீ என்னை மிஸ்டர் மஹிந்தன் என்று கூப்பிடவேண்டாம்’’ மாமா என்று கூப்பிடு என்றவன் .

நான் இப்பொழுது சொல்வது சத்தியமான உண்மை வருண் . நான் ழையாவை மனதார விரும்பி கல்யாணம் முடித்துள்ளேன் .நான் உன் அக்காவை என்னிடம் கொண்டுவர செய்த செயல்கள் வேண்டுமென்றால் தவறானதாக இருக்கலாம் ஆனால் நான் ழையாவிற்கு சரியான கணவன் என்பதை போகப்போக புரிந்து கொள்வாய் என்றவன், நான் உன் அக்காவிடம் போனை கொடுக்கிறேன் உன் அப்பா நலமாக இருக்கிறார் என்று கூறு ,வீட்டிற்குப் போய் உன் அப்பாவை பேசச் சொல்கிறேன் என்று அவளிடம் கூறு, என்று கறார் குரலில் கூறிக்கொண்டு சென்று போனை ழையாவிடம் நீட்டி உன் தம்பி பேசுகிறான் என்று சொல்லில் கொடுத்தான் .

வருணுக்கு மஹிந்தன் தன்னிடம் கறார் குரலில் கூறியது பிடிக்கவில்லை எனினும் அதனை வெளிக்காட்டாமல் தன் அக்காவிடம் பேச முயன்றான் .

தன் தம்பி தான் பேசுகிறான் என்று தெரிந்தவுடன் வருண் அப்பா எப்படிடா இருக்கிறார்? என் பாஸ் எப்படி என்னை கேட்காமல் என்னை கல்யாணம் பண்ணினாரோ அதேப்போல் என்னை கேட்காமலே அவர் வீட்டிற்கு என்னை கொண்டுவந்துவிட்டார்டா. எனக்கு அப்பா என்னை தேடுவார் என்று பயமாக இருக்கிறது வருண் என்று கூறினாள்.

அவள் பயப்படுவதை கேட்ட வருனுக்கு கஸ்டமாக இருந்தது எனினும் அதை வெளிக்காண்பிக்காது அப்பா நன்றாக உள்ளார் கவி ,நீ இருக்கும் வீட்டின் முகவரியை சொல்கிறாயா நான் வந்து உன்னை கூட்டிக்கொண்டு வருகிறேன் என்றான் .

அவன் அவ்வாறு கூறியதும் இது ஏதோ பீச் ஹவுஸ் போல் உள்ளதுடா எனக்கு எந்த இடம் என்று சொல்லத் தெரியவில்லை என்றாள் .

அவளிடம் இருந்த போனை பறித்த மஹிந்தன் வருண் நாளை நானே கார் அனுப்பி உன்னை இங்கு கூப்பிட்டு வருகிறேன் . இப்பொழுது எனக்கு நிறைய வேலை உள்ளது, சோ! நீ வீட்டிற்குப் போய் அங்குள்ள நிலைமையை சரிசெய் என்று கூறி தொடர்த்பைத் துண்டித்தான் .

மஹிந்தன் தான் பேசிக்கொண்டிருக்கும் போதே மொபைலைப் பறித்ததும் கவிழையாவிற்கு கட்டுப்படுத்த முடியாதவாறு கோபம் ஏற்பட்டது . எனவே அவள் தான் இருக்கும் இடத்தையும் அங்கு மற்ற வேலையாட்கள் அங்கங்கே வேலைப் பார்ப்பதையும் கவனத்தில் கொள்ளாமல் நான் பேசி முடிக்கும் முன் எப்படி நீங்கள் என்னிடம் இருந்து மொபைலை பிடுங்கலாம் .உங்கள் மொபைல் என்பதால்தானே என்னிடம் இருந்து பறித்தீர்கள் முதலில் என் போனை என்னிடம் கொடுங்கள் என்று சிலிரித்துக் கொண்டு சண்டைப் போடுவதுபோல் அவனைப் பார்த்து சத்தமாகப் பேசினாள் .

அதற்கு மஹிந்தன் கொடுக்க முடியாது போடீ ! என்று அசால்டாக கூறினான் .அவன் அவ்வாறு கூறியதும் அவளுக்கு வந்த கோபத்தில் தன் ஒரு கைவிரல்களை மடக்கி அவனின் சட்டை காலரை மறு கையினால் பற்றி அவனை குனியுமாறு இழுத்துவைத்துக் கொண்டு இப்பொழுது என் மொபைலை நீ கொடுக்கவில்லைஎன்றால் நான் கொட்டுற கொட்டில் டாம் அண்ட் ஜெரியில் வரும் டாமிற்கு மண்டை புடைப்பது போல் உன் மண்டையும் புடைத்துவிடும் என்று கண்களை உருட்டி கோபமாக கர்ஜித்தாள் .

மஹிந்தனுக்குதான் தன்னைச் சுற்றி அங்கங்கே வேலையாட்கள் இருக்கும் போது கவிழையா இப்படி செய்வது சற்று சங்கடமாக இருந்தது ஏனெனில் இதுவரை அவனிடம் யாரும் அவன் வீட்டார் உட்பட இவ்வாறு நடந்துகொண்டதில்லை அவனிடம் மரியாதையாக சற்று தள்ளிநின்றுதான் பேசுவார்கள் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.