(Reading time: 30 - 59 minutes)

வன் கட்டிலில் விழுந்த மறுநொடி குதித்து கட்டிலைவிட்டு இறங்கிய ழையா அவனை முறைத்துப் பார்த்தாள் .

அவள் முறைப்பதைப் பார்த்த மஹிந்தன் ரொம்பத்தான் பண்ற நீ என்றவன், உன்னிடம் ரொமான்ஸ் பண்ணுகிற மூடில் இப்பொழுது நானில்லை நீயும் ரெப்ரஸ் பண்ணிக்கொள் பேபி உனக்கு சேன்ச் பண்ண டிரஸ் இல்லைதானே என்றவன், வேணுமென்றால் என்னுடையதை நீ யூஸ் பண்ணிக் கொள்ளலாம் எனக்கு எந்த அப்ஜெச்சனும் இல்லை என்று கூறிக் கொண்டு தன்னுடைய மொபைலை எடுத்து கொண்டே அவளைப் பார்த்தான் அவளின் முகச்சுளிப்பை பார்த்து புன்னகைத்துக்கொண்டே தன் தங்கை மாதுரிக்கு போன் செய்தான் .

ஒரு ரிங்கிலேயே போனை எடுத்த அவளின் தங்கை அண்ணா நீ எங்க இருக்கிறாய், அம்மாவும் அப்பாவும் நீ வீட்டிற்கு வரவில்லை என்று சொன்னார்கள். அவர்களுக்கு நீ கல்யாணம் முடித்தவிசயம் தெரிந்து உன்மேல் வருத்தமாக இருக்கிறார்கள் . நீ அண்ணியுடன் நம் வீட்டிர்க்கு போய் அவர்களை சமாதானப் படுத்தாமல் எங்கு போயிருக்கிறாய் என்று கேட்டாள்.

கவிழையா அருகில் இருப்பதை பார்த்துவிட்டு தன் தங்கையிடம் மதுரா ஏற்கனவே உன் அண்ணியை அவள் அனுமதியில்லாமல் நான் கல்யாணம் செய்து என்னுடன் கூட்டிவந்ததர்க்கு என் மேல் கோபமாக் இருக்கிறாள், இந்த நிலையில் நான் நம் வீட்டிற்குகூப்பிட்டுப் போனால் நம் அம்மாவும் அப்பாவும் ஏதாவது அவளை பற்றி தவறாகப் பேசிவிட்டால் அவ்வளவுதான் என் கல்யாணக் கதை முடிந்தது .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அதனால் உன் அண்ணியை நான் இப்பொழுது அவளுக்காக வாங்கியிருக்கிற புதூவீட்டிற்கு அவளை கொண்டுவந்திருக்கிறேன் என்றான் .

அவன் பேசப்பேச மதுராவிற்கு டென்சனில் வாயில் வார்த்தை வர மறுத்தது . பின் தன்னை கட்டுக்கொள் கொண்டுவந்தவள், அப்போ உன்னை அண்ணி காதலித்து கல்யாணம் முடிக்கவில்லையா ? நீ என்ன லூசா? எப்படி அண்ணா ஒருவரை கட்டாயப்படுத்தி குடும்பம் நடத்தமுடியும். கொஞ்சம் பொறுமையாக அண்ணியின் மனதிற்குள் நீ நுழைந்து பின் கல்யாணம் செய்திருக்கலாம் .ஆனாலும் உன்னைக்கூட கல்யாணம் செய்ய ஒருத்தி மறுப்பாள் என்பதனை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்றாள் .

அவள் பேசுவதை உள்வாங்கியவன் நீ சொல்வதுபோல் உன் அண்ணி காதலுக்கு பச்சைக்கொடி காண்பிக்கும் ரகம் இல்லை. அப்பாஅம்மா பார்க்கும் மாப்பிள்ளையை கடவுளாக துதிபடும் ரகம் . அவளின் மனதிற்குள் நான் நுழைய, முதலில் நான் சமாதானப் படுத்தவேண்டியது அவளில் அம்மா அப்பாவைத்தான் என்றவன் அந்த வேலையை செய்யத்தான் நான் உன்னை கூப்பிட்டேன் என்றான் .

அவன் அவ்வாறு கூறவும், ‘’நான் என்ன அண்ணா செய்ய வேண்டும்’’ என்று கேட்டாள் .

உடனே மஹிந்தன், நீ என்ன சொல்வாயோ ஏது சொல்வாயோ எனக்குத் தெரியாது .நீ இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பி ரெடியாக இரு, கதிர் வந்து உன்னை ழையாவின் அப்பாவிடம் கூட்டிப்போவான் நீ அவர்களிடம் போய் இன்னும் இரு நாளில் நீ நம் அம்மா அப்பாவுடன் வந்து எங்களின் கல்யாணத்திற்கு ரிசப்ஷன் வைப்பதர்க்கான் தேதி முடிவு பண்ண பேசவருவார்கள் என்று கூறி விட்டு அதற்கு அவர்களை சம்மதிக்கவை. நாளை நாங்கள் இருவரும் சேர்ந்து பத்திரிக்கைக்கு எங்களின் பேட்டியை கொடுக்க போட்டுக்கொள்ள உன் அண்ணிக்கு உடையை வாங்கிக் கொண்டு நீ டிரஸ் டிசைன் பண்ணும் உன் காஸ்ட்யூமரையும் கூப்பிட்டுக் கொண்டு கதிருடன் இங்கு வா என்று கூறினான் .

பார்வதி தன் வீட்டின் வாயிலிலேயே தன் மகளை எதிர் பார்த்து பார்திருந்ததால் வாசலில் கதிர் காரை நிருத்தவும் தன் மகள் தான் வந்துவிட்டால் என்று வேகமாக் வாசலுக்கு வந்தாள்.

காரிலிருந்து தன் மகள் இறங்காமல் கதிர் இறங்கி தன்னை நோக்கி வருவதைப் பார்த்து தம்பி நீங்கள் மட்டும் காரில் இருந்து இறங்குகிறீர்கள் என் மகள் எங்கே? என்று கேட்டாள் .

அதற்கு கதிர் பதில் சொல்லுவதற்கு முன் அவனுக்கு வந்த டென்சனை மறைத்துக்கொண்டு வெளியில் பார்வதியைப் பார்த்து வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் மேடம் வீட்டில் பத்திரமாக் இருக்கிறார்கள் என்று கூறினான் .

அவனது பதிலில் குழம்பிப்போன பார்வதி அவள் இன்னும் வீட்டிற்கு வரவில்லையே தம்பி என்றாள்.

கார் சத்தம் கேட்டவுடன் கவி வந்துவிட்டால் என்று கூறிக்கொண்டு வாசலுக்குப் போன பார்வதி யாருடனோ பேசிக்கொண்டு இருப்பதைப் கேட்ட ஈஸவரன், என்ன என்று பார்ப்பதற்காக வாசலுக்கு வந்தார் .

அந்த நேரம் விரைந்து வீட்டு வாசலுக்கு வந்த வருண் .அப்பா இவர் கதிர் என்றவன் வீட்டுக்கு உள்ளே போய் பேசலாமா சார் என்று கதிரைப் பார்த்து கூறினான் .

வருண் தன்னைப் பார்த்து வாருங்கள் என்று சொன்னதும் கதிருக்கு அப்பாடா! என்று இருந்தது.

வீட்டிற்குள் வந்ததும் கதிர் தன்னிடம் இருந்த மஹிந்தன் கவிழையா கல்யாணப் பதிவு செய்த சான்றிதழை ஈஸ்வரனிடம் கொடுத்தான் .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.