(Reading time: 8 - 15 minutes)

ந்த சிலமாத இடைவெளியில் விஷ்வானிகாவின் நட்த்தையில் பெரிதும் மாற்றமிருந்தது. பேசுவதை முற்றிலும் குறைத்து கொண்டாள் அவள். எப்பொதும் ஒதுங்கித்தான் இருந்தாள். இந்த மாற்றம் அனைவருக்கும் புரிந்தாலும்,அவள் காலத்தின் போக்கில் சரியாகிவிடுவாள் என்றே நம்பினார்கள்.

ஆனால், அவளை சரி செய்ய காலம் ஒத்துழைக்கவில்லை சகிதான் ஒத்துழைத்தான்.

அன்றும் வானில் சிரித்துகொண்டிருந்தது வான்நிலவு. அந்த வீட்டு தோட்டத்தில் அமர்ந்துகொண்டே மகளுடன் மன்றாடிக் கொண்டிருந்தார் சாரதா.

“குட்டிமா”

“..”

“அம்மா சொன்னாகேட்கனும் கண்ணா..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“..”

“நீங்க சமத்து பொண்ணு இல்லையா?”

“..”

“நல்லா படிக்கனும் கண்ணா.. உங்க மார்க்ஸ் எல்லாம்ரொம்ப கம்மியாச்சு பாருங்க.. டீச்சர்ஸ் எல்லாரும் கம்ப்ளைண்டு பண்ணுறாங்கடா..”

“..”

“என் வினிம்மா படிப்புல சுட்டியாச்சே” என்று அவர்நயமாய் பேச வாயை திறக்கவே மாட்டேன் என்பதுபோல எங்கேயோ வெறித்து கொண்டிருந்தாள் விஷ்வானிகா. அனைவரும் அவளிடம் தழைந்து கெஞ்சுவதால்.இப்படி இருப்பதே அவளுக்கு வழக்கமாகி போனது. இனி அவள் மாறவேமாட்டாளா என்று சாரதா ஏங்கிடும்போது தான் அங்கு வந்தான் சகிதீபன்.

“இங்க என்னம்மா பண்ணுறிங்க? இவ கிட்ட நீங்க எவ்வளவு பேசினாலும் வேஸ்ட்டு..என் ப்ரண்டு வினோத் இருக்கான்ல? அவன் தங்கச்சி இவளோடு தான் படிக்கிறாளாம்.அவன் தங்கச்சி க்லாஸ்ல ப்ர்ஸ்ட்டுன்னு அவன் சொல்லி சொல்லி பெருமை படுறான். ஆனால் நான் சைலண்டா வந்துட்டேன்..”

“..”

“போச்சு.. இனி அவ்வளவுதான்..இவ இப்படியே பெயில் ஆகப்போறா.. என்னை எல்லாரும் கேலி பண்ண போறாங்க” என்று சகி கூறவும் வெடுக்கென எழுந்தாள் விஷ்வானிகா.

“அம்மா,நான் நெக்ஸ்ட் எக்சாம்ல பர்ஸ்டா வருவேன்” என்று சூளுரைத்தாள். சொன்னதோடு விடாமல், கண்ணும் கருத்துமாய் படிக்கவும் ஆரம்பித்தாள். பார்வை இழந்தவனுக்கு கிடைத்த ஊன்றுகோள் போல, விஷ்வானிகாவை சரிப்படுத்த, சகியின் அலட்சிய பேச்சே உதவியது.

“சைக்கிளா?இவளுக்கு எப்படிம்மா ஓட்ட தெரியும்?

ஸ்கூல் கேம்பிங்கா? இவளே சோம்பேறி!கண்டிப்பா கலந்துக்க மாட்டா!

சமையல் தானே? அதை சாப்பிடுறதுக்கு பட்டினி கெடக்கலாம்!

இஞ்சினியரிங்கா? அதுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்?

பூசனிக்காய் சைஸ்ல இருக்குறவ எதுக்கு யோகா க்லாஸ் போறாளாம்?”

இப்படிவிஷ்வானிகாவின் ஒவ்வொரு செயலையும் தூற்றி பேசுவதாக நடித்தான் சகிதீபன். தன்னை மாற்றிட்த்தான் அவன் இப்படி பேசுகிறான் என்பதை உணர்ந்திருக்கவில்லை வினி.மாறாக, தனது உடன்பிறந்தவலின் மரணத்தின் வலி தாங்காமல் சகி மாறிவிட்டான் என்றே எண்ணினாள் அவள்.

சகியும் அவளை தடுக்கவில்லை.தன்னிலை விளக்கம் கொடுக்கவில்லை.. அவனுக்கு வேண்டியதெல்லாம் விஷ்வானிகாவின் மாற்றம்தான். அதற்காக அவளை விட்டு விலகி சென்றாலும் பரவாயில்லை என்று அன்று முடிவெடுத்தவன், இன்றுவரை மனதில் கரை கடந்த அன்பினை மறைத்தே வாழ்கிறான்.

ஒரு புன்னகை பூவே

சிறு பூக்களின் தீவே!”

கடந்த காலங்களில் பயணித்துக் கொண்டிருந்த சகிதீபனை இழுத்துக்கொண்டு வந்தது அந்த அழைப்பு. கையில்ஃபோனை எடுத்தவன் முகத்தில் புன்னகை அப்பிக் கொண்டது.

அதே புன்னகையுடன், அவன் ஃபோனை எடுக்க, எதிர்முனையில் புயலொன்று பேசியது.

“டேய் கருப்பா!”

“ ஹேய் மைதாமாவு..என்னடீ என் ஞாபகம் எல்லாம் இருக்கா உனக்கு?” ஒன்றும் அறியாதவன் போல கேட்டு வைத்தான் சகிதீபன். நண்பனின் நக்கலில் எரிச்சலுற்றாள் தான்யா.

“எரும மாடு..உன் ஃபோனை தூக்கி கூவத்துல வீசு.. நான் எத்தனை தடவை ஃபோன் பண்ணினேன் தெரியுமா?”

“ஹேய் சாரி மா..வீட்டில்கொஞ்சம் பிரச்சனை,, அதை சரி பண்ண டைம் தேவபட்டுச்சு..”

“என் சகி இருக்குற இடத்துல சந்தோஷம் மட்டும்தானே இருக்கும்? “என சிரிப்புடன் கேட்டாள் தான்யா.

“ஆ..சீக்கிரமா தமிழ் கத்துக்கனும்னு சீரியல் பார்க்க ஆரம்பிச்சுட்டியா நீ? ஃபீலிங்க்ஸ் கொஞ்சம் ஓவரா இருக்கும்மா!” என்றான் சகி.

“அது இருக்கட்டும் சகி. நான் நம்ம விஷயத்தை பத்தி அம்மாக்கிட்ட சொல்லிட்டேன்..”

“என்ன?”

“ஆமா, அம்மாவுக்கு இதுல சம்மதமாம்.. உன் கிட்ட கல்யாணவிஷயமாக பேசனுமாம்!” என்று தான்யா இடியை இறக்கவும், ஒரு நொடி ஸ்தம்பித்து போயிருந்தான் சகிதீபன்.

ஹாய் ப்ரண்ட்ஸ்..ஒரு காலத்துல ஓயாமல் நிறைய பேஜ் கொடுக்கும் புவிக்கு என்ன ஆச்சுன்னு நிறைய பேரு கேக்குற மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது. உங்க எல்லாருக்கிட்டயும்நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.. புது வேலையும் அதனால் மாறிய அன்றாட நிரலும் கொஞ்சம் மூச்சுமுட்டுது.. ரெண்டு கடிகாரம் கட்டிக்கிட்டாலும், நேரம் என்னவோ கம்மியாகத்தான் இருக்கு..ஹீ ஹீ.. இருந்தாலும் முடிஞ்ச அளவு கதையை கொடுக்க முயற்சி பண்ணுறேன்..

எடுத்தோம் கவிழ்த்தோம்! ஏனோ தானோன்னு கடமைக்காக அதிகம் எழுத மனசு வரலைங்க..அதனாலத்தான் ஸ்பார்க் வராதப்போ கொஞ்சமா எழுதி அனுப்பிட்டு இருக்கேன்.. சீக்கிரமே இந்த தடைகள் எல்லாத்தையும் உடைச்சிட்டு, உங்களுடைய அட்டகாசமான கமெண்ட்ஸை பெருவதற்காகவே அதிவேகமாய் எழுதுவேன்னு நம்புறேன்..கொஞ்சம் பொறுத்துக்கோங்க நண்பர்களே.. என்னுடைய நிலை அறிந்து ஊக்குவிக்கும் சில்சீக்கு ரொம்பவே நன்றி.. லவ் யூ சில்சீ.

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 20

Episode # 22

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.