(Reading time: 5 - 9 minutes)

மூங்கில் குழலானதே – 20 - புவனேஸ்வரி

Moongil kuzhalanathe

செயல்! மனிதனின் மறுமொழிதான் செயல். தான் யார் என்பதை நிர்ணயிக்கும் நீதிபதியே செயல். மனிதன் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் அவனை மட்டும் தனி மனிதனாக ஆட்பரிப்பதில்லை.

உதாரணத்திற்கு, நீங்கள் தினமும் சந்திக்கும் ஒரு வழிப்போக்கனை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள். கைகுலுக்கி பேசிக் கொள்ளாமல்போனாலுமே நமது பார்வையானது எதிரில் வருபவரை எடையிடாமல் இருப்பதில்லை.

அந்த வகையில் நாம் எதையெல்லாம் கவனிக்கிறோம்? எதையெல்லாம் விமர்சிக்கிறோம். ஆடையில் தொடங்கி நடை பாவம்வரை ஒவ்வொரு செயலும் எதையாவது உணர்த்த்தான் செய்கிறது.

தான் தனிமனிதன் செயலும் அதற்கான காரணங்களும் சுற்றியுள்ளவர்களை பாதிக்கிறது, இதனால்தானோ, வாழ்வின் ஒவ்வொரு முடிவையும் யோசித்து நிர்ணயிக்க வேண்டும் என்று சொல்கிறோமோ? சிந்திக்கிறேன் சகிதீபன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

 பெற்றோரின் “வளர்ப்பு” என்பது  உயர்ந்த கலையாகும். சிற்பத்தை செதுக்கிடும் சிற்பியைப் போலத்தான் பெற்றோரும்.! கருங்கல்லானது இடைஞ்சலாக சாலையில் இருப்பதும், இறையாக கோவிலில் இருப்பதும் அதை செதுக்கிட தெரிந்த சிற்பியின் கையில்தான் உள்ளது. பெற்றோரும் அப்படித்தான்!

“எந்த குழந்தையும் நல்ல குழந்தைத்தான் மண்ணில் பிறக்கையிலே ..அவர் நல்லவராவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே! பிள்ளை வளர்ப்பு கலை என்பது,ஒரே சாக்லெட்டை இரண்டாய் உடைத்து தன் பிள்ளைகளுக்கு ஊட்டிவிடும் சாமர்த்தியமல்ல. இரண்டாய் உடைத்த சாக்லெட்டின் முதல் துண்டை யாருக்கு முதலில் ஊட்டிவிடுவது என்ற சின்ன கேள்வியில்தான் பெற்றோரின் சாமர்த்தியமே இருக்கிறது.

இதை உணராத பெற்றோராகத்தான் இருந்தனர் சாரதாவும் வேணுகோபாலும். அபிநந்தன்- சகிதீபன் என்ற இரு புதல்வர்களுக்கு பின் அந்த வீட்டில் கொலுசொலியையும் வளையல் சத்தத்தையும் அதிகரிக்கும் நோக்கோடு பிறந்தனர் இரட்டையர்களான வைஷாலிகாவும், விஷ்வானிகாவும். அரசகுலத்தில் பூத்த இளவரசிகள் போலத்தான் இருவருமே வளர்ந்தனர்.

ஒரே கருவரையில் பயணித்திருந்தாலும், குணத்திலும் தோற்றத்திலும் இருவருக்குமே பெரிதொரு மாற்றம் இருந்தது. வைஷாலிகா, பூசினாற்போலஉடல் வாகில், துருதுருவென குறும்புத்தனத்தின் மொத்த உருவாய் இருந்தாள். எதையும் உடனே புரிந்துகொண்டு புதிய சிந்தனைகளை கிரகிக்கும் திறன் அவளுக்கு அதிகமாகத்தான் இருந்தந்தது.

விஷ்வானிகாவோ அவளுக்கு எதிர்மாறாக இருந்தாள். மெல்லிய உடல் தோற்றம், அதிர்ந்து பேசாத குரல் வளம், எதையும் சொன்னவுடன் அதன் அர்த்தத்தை  விளங்கிக் கொள்ள அவளுக்கு கொஞ்சம் நேரம் அவசியம்.

ஏதோ ஒரு வகையில் வைஷாலியின் குறும்பும் அபிநயங்களை பொழியும் முகமும் மற்றவர்களை அதிகமாய் ஈர்த்தது.

“வைஷூ மாதிரி சிரி!”

“வைஷூ மாதிரி படிப்பு வராதா?”

“நீங்க ட்வின்ஸ் தானே? ஆனா வேறவேறயா இருக்கீங்களே?” என்பது போன்ற கேள்விகள் தன்னை துரத்தவும், ஒரு கட்ட்த்திற்கு மேல் எதற்கும்பதில் அளிக்காமல் ஒதுங்கிட கற்றுக்கொண்டாள்.

சகியும், தன்னுடன் படிக்கும் வருணும்தான் அவளுக்கு உலகமே. அவளது பெற்றோர் கூட,அவளது மனமெனும் சிம்மாசனத்திலிடம் பிடிக்காமல்போயினர்.

வைஷாலிகாவை பொறுத்தவரை அவளுக்கு விஷ்வா மீது தனி பிரிய்ம்தான் ! விஷ்வாவிற்கும் அதேதான்! பிறரின் எதிர்ப்பார்ப்பும் ஒப்பிடுதலும்,விஷ்வானிகாவின் அன்பினை உடைத்திடவில்லை.

எல்லாம் சரியாய் சென்று கொண்டிருந்த ஒரு நாள் தான் அந்த கோர சம்பவம் நடந்தது.

(ஊட்டி)

“அப்பா போட்டிங் போலாம்பா.. போட்டிங் போலாம்பா”என்று பிள்ளைகள் நச்சரிக்க, அவர்களை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சுற்றுலா தளத்திற்கு வந்திருந்தார் வேணு.

நால்வரும் நாலாபுறமும் ஆர்ப்பரிக்க அவர்களை சமாளிப்பது கஷ்டமாக இருந்தது. அவர்களுக்கான போட் தயாராகும் முன்னரே வைஷாலிகா அடம் பிடிக்க,மகளாய் சமாளிக்க முடியாமல்,அருகில் இருந்த பரிசலில் வைஷாலிகாவையும் விஷ்வானிகாவையும் அமர வைத்தார் வேணு.

பரிசல்கம்பத்தோடு கட்டியிருப்பதினால் எதுவும் ஆபத்து இல்லை என்று அவர் நினைத்திட இமைக்கும் நொடியின் அதெல்லம் நடந்தேறியது.

“விஷ்வா”

“என்ன வைஷூ”

“ அங்க பாரு அவங்களாம் தண்ணியில சுத்துறாங்க.. நாமளும் சுத்தலாம்”என்றாள் வைஷாலிகா. ஏழு வயது நிரம்பிய சிறுமிகளுக்கு அதன் ஆபத்து புரியாமல் போனது.

“ஆனா, நம்ம போட் கட்டியிருக்கு வைஷூ”என்று அப்பாவியாய் அந்த கயிற்றி சுட்டிக் காட்ட,இமைக்கும் நொடியில் அதை அவிழ்த்திருந்தாள் வைஷாலிகா. இதுதான் விதி என்பதா? ஏழே வயது நிரம்பிய சிறும்பி அவிழ்த்துவிடும் அளவிற்கு அந்த கயிரு பலவீனமாய் இல்லை.ஆனால் விதி பலவீனமாக்த்தான் இருந்தது.

திடீரென தாங்கள் அமர்ந்திருந்த பரிசல் நகரவும் விஷ்வா அச்சத்தில் அலறினாள்.வைஷாலிகாவோ கைகொட்டி சிரித்தாள்.விதியும்தான்! எதிர்ப்பாரதா நொடியில் அவர்களது பரிசல் தடுமாற ஆரம்பிக்க,

“வைஷூ”என்ற அலறலுடன் நிகழ்காலத்திற்கு வந்தனர் விஷ்வானிகாவும் சகிதீபனும், விஷ்வா மருத்துவமனையில் வருணின் ஆதரவான அணைப்பில் சமாதானமாகிட, சகிதீபனோ ஜன்னல்களைத் தாண்டி தன்னை ஈர்த்திடும் வெண்ணிலை கண்ணீருடன் நோக்கினான். இனி கதையானது அவனது பார்வையிலிருந்து தொடரும்!

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 19

Episode # 21

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.