(Reading time: 17 - 33 minutes)

ன்னா நீ தான என் கர்ள் ஃபிரண்ட்’ கண்ணடித்து சிரித்ததில் அவள் உறைந்தாள்.

நானா?

பின்னே நீ தான், வேற யாரு? நெக்ஸ்ட் மந்த் நம்ம எங்கேஜ்மெண்ட் & தென் மேரேஜ் என்றவனை நம்பாமல் பார்த்தாள்.

சரி சரி வா, நாம கொஞ்ச நேரம் வேளியே போய் கொஞ்சம் சுத்திட்டு வரலாம், மூவி ஆர் ஷாப்பிங்க் வாட்ஸ் யுவர் சாய்ஸ்’ என அவளை உரிமையாய் அழைத்தான்.

ஏற்கெனவே தொடர்ந்த அதிர்ச்சி செய்திகளால் மூளை சிந்திக்கும் திறனை இழந்திருந்தாலும் கூட , ரூபன் சொன்னது மனதிற்குள்ளாக ஒலித்தது.

கொஞ்ச நாளைக்கு நீ தனியே எங்கேயும் போகக் கூடாது? யார் கூடயும் வெளிய போறப்ப அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி யாரையாவது துணைக்கு கூட்டிட்டு போ”……… இன்னபிற விஷயங்கள் நினைவிற்கு வர,

இல்ல நான் உங்க கூட எங்கேயும் வரலை என அவனிடம் தெளிவாகவே பதிலளித்தாள் ,

அவனோடு பேசியவாறு தன் அறையின் கதவைத் தாண்டி அவள் வெளியே வந்திருக்க. தான் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை மிக பெருமிதமாக அவளது அறையின் டேபிளொன்றில் வைத்தவன்.

“இதெல்லாம் ஒவ்வொரு நாளா நீ எனக்கு உடுத்துக் காட்டுற…என்னச் சரியா? என்றவனாய் முகம் முழுக்க புன்னகையை ஒளிரச் செய்தவனாய் அவளுக்கு இணையாக படிகளில் இறங்கத் தொடங்கினான்.

 தாமஸ் படிகளினின்று இறங்கி கீழே வந்துக் கொண்டிருக்கும் மகளையும் விக்ரமையும் நோக்கினார், அவர் கண்ணுக்கு எல்லாம் நிறைவாகத் தோன்றியது.

 கீழே வந்த விக்ரம் பதவிசாக தாமஸ் முன்பு அமர்ந்துக் கொள்ள, சற்று முன்னே மதிய தூக்கத்தினின்று விழித்திருந்த சாரா ஹாலுக்கு வந்து நின்று என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தார். அவரருகே போய் அனிக்கா நின்றுக் கொண்டாள்.

 விக்ரம் தாமஸிடம்,

நான் அனிக்காவை வேளிய கூட்டிட்டு போக வந்தேன் மாமா, அவ என்னன்னா வர மாட்டேன்னு சொல்லிட்டா…… என்றான்.

ஏன் அனிம்மா அன்னிக்கு போய்ட்டு வந்த மாதிரி போக வேண்டியது தானே? மகளிடம் இலகுவாகவே வினவினார் தாமஸ்.

 இல்லப்பா நான் எங்கேயும் போகலை. என்று பதிலளித்த அனிக்காவிற்கு ஏற்ற விதமாக

 “இல்லத் தம்பி இப்ப வெளிய போறது எல்லாம் சரி வராது” என சாராவும் கூற,

 “அவக் கிடக்கிறா பட்டிக்காடு, அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் கிராமத்து பழக்க வழக்கம் தான். அதுக்கேத்த மாதிரியே பொண்ணையும் வளர்த்து வச்சிருக்கா, இன்னிக்கு இருக்கட்டும் இன்னொரு நாளைக்கு அனியை வெளிய கூட்டிட்டு போங்க” என்று வருங்கால மருமகனை சமாதானப் படுத்தும் நோக்கில் தன் மனைவியை தாழ்த்திப் பேசியவர் அதனால் சாராவின் முகத்தில் எழுந்த வேதனையை கணக்கில் கொள்ளவில்லை.

 சற்று நேரம் அமர்ந்து தாமஸுடன் அளவளாவி விட்டு, சாராவின் விருந்தோம்பல் மற்றும் உபசரிப்புக்களுக்குப் பின் விக்ரம் விடைப் பெற்றுச் சென்றான்.

தாமஸ் உடனே கோபத்தில் மகளிடம் வினவினார்.

“நான் தான் போக சொன்னேன்ல அப்படியும் நீ போகலைன்னு சொல்லுற அனிம்மா. அவங்க எப்படிபட்ட ஃபேமிலி, எவ்வளவு பெரிய ஆட்கள்னு தெரியுமா? நீ என்னன்னா இப்படி சட்டுன்னு கூட போக மாட்டேன்னு சொல்லிட்ட” என்றவரிடம்

“இல்லப்பா அவங்க நெக்ஸ்ட் மந்த் எங்கேஜ்மெண்ட் அப்படில்லாம் சொல்லிட்டு இருந்தாங்க…அதான்” செக்ஸி யெனச் சொல்லி நெருடலை ஏற்படுத்தியதை தந்தை முன் சொல்ல கூச்சப் பட்டவளாய் அவனது பார்வையையும் , வார்த்தையையும் தணிக்கைச் செய்து விக்ரம் கூறிய மற்றவற்றைச் சொல்ல முனைந்தாள்.

ஆமா, விக்ரம் சரியாதான் சொல்லியிருக்கார். நெக்ஸ்ட் மந்த் உங்க ரெண்டு பேருக்கும் எங்கேஜ்மெண்ட் , சாரா நீ இதைப் பத்தி இன்னும் அனிக்கு சொல்லலியா? என்று மனைவியிடமே விஷயத்தை திருப்ப,

இல்ல நான் நீங்க சொல்லியிருப்பீங்கன்னு நினைச்சேன்” என முனகியவரிடம்

“அம்மா எனக்கு…… இந்த இவங்க கூட…………. மேரேஜ் வேண்டாம்மா” என எண்ணியதைச் சொல்லி விட சாராவுக்கு சட்டென்று தன்னுடைய இளமைக் காலம் ஞாபகத்திற்கு வந்தது.

 சொல்லுவத்ற்கு கிராம பிண்ணனி கொண்ட நபர்கள் தாம். ஆனால், அவர் அம்மாவும், அண்ணனும் சாராவுக்கு மனதிற்கு பிடித்த விதமாக வரன் வரும் மட்டும் எதிலும் கட்டாயப் படுத்தியது கிடையாது.

“வாழப் போறவ என் தங்கச்சிம்மா, அவளுக்கு பிடிச்சாத்தான் நாம மேற்கொண்டு பேசணும்” என்று தன் சார்பாக எப்போதும் நின்று பேசிய அண்ணன் ஞாபகம் வந்தது. தாமஸின் வரன் வந்து சாராவிற்கு விருப்பம் இருப்பதை உணர்ந்ததால் மட்டுமல்லவா ராஜ் இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். அதனால் மட்டும் தானே அவர்களது திருமண வாழ்க்கை இத்தனை காலமாக மகிழ்ச்சியோடு கடந்துச் சென்றிருக்கின்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.