அனிக்காவிற்கும் , விக்ரமிற்குமான நிச்சயத்திற்காக இன்னும் ஒரு வாரமே இருக்க அனிக்கா தன் அன்னையையும் , அண்ணியையும் பார்த்தாள். இருவருமே தத்தம் கணவருக்கு கட்டுப் பட்டவர்கள். அவர்களிடம் தனக்கான தீர்வுகள் இல்லையென திட்டவட்டமாய் புரிந்தது. அவள் அருமை கிறிஸ் அண்ணன் இன்று பேசியதைப் பார்த்தால் அவன் ரூபனுக்கு பெண் கொடுப்பதா வேண்டாமா? என்பதில் காட்டிய தெளிவில் ஒரு சதம் கூட தங்கைக்கு விக்ரமை பிடித்திருக்கிறதா? என்பதில் காட்டவில்லை. அவனும் அப்பாவின் சார்பாகவே இருப்பதாக தோன்றிற்று.
எனக்கென்று விருப்பு வெறுப்பு ஒன்றுமில்லையா? படிப்பு, பள்ளி, கல்லூரி, வேலை என்று எல்லாமே இவர்கள் தான் தீர்மானித்து இருக்கிறார்கள். யாரிடம் பேச வேண்டும், யாரிடம் பேசக் கூடாது, எவர் வீடு செல்ல வேண்டும்? எவர் வீடு செல்லக் கூடாது? இப்படி எல்லாவற்றையுமே அவர்கள் தீர்மானத்தின் படியே தன்னுடைய நலன் கருதி கூறியதாக எண்ணி தான் பின்பற்றவில்லையா?
இப்போது மனதிற்கு முற்றிலும் ஒவ்வாத ஒருவனை……….அவனைக் குறித்து எண்ணும் போதே கண்களில் காமம் நிரப்பி, இவளின் உடைகளுக்குள்ளான நிர்வாணம் தேடி, அங்குலம் அங்குலமாய் அவள் உடலை அளந்து தன்னை செக்ஸி எனச் சொன்ன அவனின் வார்த்தைகள் அமிலமாய் இறங்கின.
பிறந்ததிலிருந்தே பாதுகாப்பற்ற உணர்வை அறிந்திராதவள், தன்னுடைய அண்ணனின் கண்ணியம் மட்டுமல்ல, மாமா மகன்களாயினும் ஒரு போதும் கண்ணியம் தவறாத ஆண்களோடு பழகியே வளர்ந்தவள். தன்னை தங்கையாய் பாராட்டும் தீபனும், தன் தோழியை தவறாக யாரும் பார்க்கவும் விடாமல் அவளை முழுமையாய் பாதுகாக்கும் ஜீவனும், தன்னிடம் காதலைச் சொல்லி திருமணத்திற்கு கேட்டிருந்தாலும் ஒரு போதும் தன் தவறான பார்வையால் அவளை வெறும் உடலாய் , சதைப் பிண்டமாய் பார்த்திராத ரூபனும் மனதளவில் அவளுக்கு கொடுத்திருந்த பாதுகாப்பு உணர்வு அற்றுப் போய் வெகு நாளாகி விட்டனவே.
தனக்கென யாரும் ஆதரவாக இல்லை என்றதும் காலையில் தந்தையும், அண்ணனனும் விடைப் பெற்ற நேரம் முதலாக முக்கியமான பலவற்றை அவள் சிந்தித்து சில முடிவுகள் எடுத்தாள். அவளது முடிவுகள் சரியா தவறாவென அவளுக்கு தெரியாது. ஆனால், நாளை அவர்கள் வீட்டிற்க்கு அவளுக்கு மிகப் பிரியமான அத்தையும் அவர் குடும்பத்தினரும் வந்து அவமானப் படுவதை மட்டும் அவளால் பார்க்கவியலாது. அதற்காக தான் என்னவேண்டுமானாலும் செய்யலாமென தோன்றிற்று.
“அவசரம் அவசரம்” என்று அவளை சூழ்நிலை அவசரப் படுத்த, தனக்கு தேவையான அத்தனையையும் தயார் செய்தவள் தன்னுடைய அண்ணனின் அறைக்குச் சென்று உரிய விதமாக பேசி அண்ணியை தன்னோடு அழைத்துக் கொண்டு ரூபனின் பேக்டரியை நோக்கி புறப்பட்டாள் ………….
தொடரும்
{kunena_discuss:970}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.