எனக்கு இவ்வளவு அட்வைஸ் செஞ்ச.......... சரி, மேடம் நீங்க என்ன செய்ய போறீங்க? காட்டமாய் வெளி வந்தன அவன் வார்த்தைகள்.
அவனுக்கு அவள் பதில் தெரிந்துக் கொண்டே ஆக வேண்டியிருந்தது.தன்னை திருமணம் செய்துக் கொள்ள மாட்டாளாம், தான் வேறு யாரையும் மணந்துக் கொள்ள வேண்டுமாம்? அப்படியென்றால் அவள் தன்னுடைய அணைப்பில் நெகிழ்ந்ததை எவ்வாறு எடுத்துக் கொள்வது?
முரண்பாடான அவள் செய்கையில் ஒன்றையும் கணிக்க முடியாமல் திகைத்தவன் மனதில் சந்தேகம் என்னும் கொடிய மிருகம் ஆட்சி செய்துக் கொண்டிருந்தது. அம்மா அப்பா தலைக் குனியக் கூடாதென்றவள் அவர்களுக்காக விக்ரமை திருமணம் செய்வதாக முடிவெடுத்து விட்டதாகவே எண்ணிக் கொண்டான். அதனை அவள் வாயாலே உறுதிப் படுத்த எண்ணினான். அப்படி அவள் கூறிய நொடியில் அவள் என்னிடம் அறை வாங்கப் போவது உறுதி என்றெண்ணியவன் தன்னை அடக்கியவனாக கைகளை கட்டுப்படுத்தி இறுக்கிப் பொத்தினான்..
அவள் அருகே வந்தவன், அவள் முகவாயை தன் விரலால் உயர்த்தினான்.
பதில் சொல்லு….என்ன செய்யப் போற? பிடிவாதமாய் தன் கேள்விக்கு பதில் வேண்டினான்.
என்னப் பதில் சொல்வதென்று சொல்லத் தெரியாமல் மிரண்டப் பார்வை பார்த்து நின்றவளிடம் இரக்கமே இல்லாமல் பதில் வேண்டியவளாய் நின்றான்.
அனிக்காவை பொறுத்தமட்டில் அவள் யோசித்து வந்தவை அனைத்தும் அவள் சொல்லியாகிவிட்டது. இப்படி ஒரு கேள்வி வருமென்றோ, அதற்கு என்னப் பதில் சொல்ல வேண்டுமென்றோ அவள் முன்னதாகவே தயாரித்து வரவில்லை. ஏற்கெனவே மனதை அழுத்திக் கொண்டிருந்த பல உணர்வு அழுத்தங்கள் சூடாய் கண்ணீராய் அவள் கண்களினின்று வடியத் தொடங்கிற்று. கலங்கியவளாக அவனை நோக்கி என்னை கேட்காதேயேன் என்பது போல பரிதாபமாய் பார்த்தாள்.
“பதில் சொல்லுங்கறேன்ல” ஏறத்தாழ உறுமினான் அவன்.
தன்னை வேறு யாரையாவது திருமணம் செய்துக் கொள்ளச் சொன்னவளின் அறிவுரையில் ஏற்கெனவே வெகுண்டெழுந்திருந்தான். ஆத்திரத்தில் அவள் கழுத்தை நெறித்து விடுவோமோ? என்னும் அச்சத்தில் தன் கைகளை வெகு பிரயத்தனப்பட்டு இறுக்கிக் கொண்டு இருந்தான்.
கண்களில் கலக்கமும் கண்ணீரும் வழிந்து நின்ற அவன் தோற்றம் அவனை அசைக்கவேயில்லை.
அவனுடைய ஆங்கார ரூபத்தைக் கண்டு பயந்தவள் தன்னையறியாமல் தன் மனதை உரைக்க, அதைக் கேட்டவன் ஆத்திரம் தாங்காமல் கையோங்கி அவளை அடித்து விட்டிருந்தான், அடுத்த அறை அவள் கன்னத்தில் விழும் முன்னே அவள் மயங்கிச் சரிந்தாள். அது வரையில் வெறித்தனமான கோபத்தில் இருந்தவனுக்கு தன் செயலின் தவறு உரைக்க,
“அனிக்காமா ஸாரிடா” அலறியவனாய் அவள் கீழே விழும் முன் அவளைத் தாங்கிக் கொண்டான்.
பிரபாவின் விழிகள் அனிக்காவின் பதிலையும் அதன் பின் நிகழ்ந்த அனைத்தையும் பார்த்து அதிர்ச்சியோடு உறைந்தன.
தொடரும்
{kunena_discuss:970}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.