(Reading time: 10 - 20 minutes)

னிக்கா இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. அவனைப் பார்க்க வேண்டும் என்று மனதின் உந்துதலில் அவள் வந்திருந்தாள். அவனைப் பார்த்ததும் அவள் மனதும் நிறைந்து விட்டது. அவன் முகத்திலிருந்த கோபம் கூட அழகாய் தெரிந்தது. அவள் அறிந்தவரையில் அவன் சாதாரணமாக எதிலும் கோபம் கொள்ளுபவன் அல்ல. அவன் கோபத்திலும் ஒரு நியாயம் இருக்கும் அந்த கோபத்திலும் ஒரு அழகு தெரியும். அந்த அழகை அவள் ரசித்துக் கொண்டிருந்தாள். இப்படி சட்டென்று தன்னை அவன் அணைத்துக் கொள்ளுவான் என்று நினைக்கவே இல்லை.

விக்ரம் தன்னை மறுபடியும் தன்னுடைய அறையிலேயே சந்தித்த போது அனுமதி பெறாமலே தன்னுடைய தோள்களில் ஊர்ந்த அவன் கரங்கள், அத்துமீறத்துணிந்த செயல் அவள் அவன் கரங்களை தட்டி விட்டவுடன் அவன் சீறிய சீற்றம். அப்போது அவனுடைய தொடுகை தனக்கு எவ்வளவாய் அருவருப்புத் தந்தது. ஆனால், இப்போது ஏன் எனக்கு அப்படி அருவருப்பாக தோன்றவில்லை? அதிலும் தன்னை அணைத்திருப்பது தன்னுடைய பார்வையிலும் கண்ணியம் காக்கின்ற ரூபனா? என தனக்குள் எழுந்த ஆச்சரியத்தின் வெளிப்பாடாக அவன் முகத்தைப் பார்க்க எத்தனித்தாலும் முடியாதபடி அவன் கரங்கள் அவளை வளைத்திருந்தன. அந்த அணைப்பில் அவளுக்கு அத்தனையாய் இளைப்பாறுதல் கிடைத்தது, அந்த நிம்மதியின் அளவு எவ்வளவு என்று அவளால் கணக்கிடவே முடியவில்லை.

 தன் உயிரும் உடலும் அதன் சொந்தமான இடத்திற்கு வந்தது போல அவளுக்கு தோன்றியது. அவன் இறுக்க, அவள் அவனுள்ளே விரும்பியே புதைந்துப் போனாள். தன்னையும் அறியாமல் அவள் உடல் அவன் பிடியில் நெகிழ்ந்ததை உணர்ந்தாள்.

 சட்டென்று அவளை ரூபன் விடுவிக்க தடுமாறியவள் சமாளித்துக் கொண்டு நின்றாள். அவனை ஏறிட்டும் பார்க்க கூச்சம் தடுக்க அப்படியே நின்றுக் கொண்டிருந்தாள்.

ரூபனோ அவள் மனதை அறிந்துக் கொண்டவனாய் பெருமிதமாய் உணர்ந்தவன் இனியும் காதலை உறுதிப் படுத்தும் கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடிக்க கூடாது என்று எண்ணியவனாய்,

 அனி, நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிப்போமா? என்றான் தன்மையாகவே,

இல்ல வேணாம் மறுத்தாள் அனிக்கா.

ஏன்? கூர்மையாய் வெளிவந்தது ரூபனின் கேள்வி. சற்று முன் என் அணைப்பில் இசைந்து நின்றாய் தானே, இப்போது என்னை மணந்துக் கொள்ள உனக்கு என்ன பிரச்சினை? என்னும் நீண்ட கேள்வியை அந்த ஒற்றை வார்த்தை “ஏன்?” என்பதில் அவன் வெளிப்படுத்தி இருந்தான். அவன் கண்கள் அனிக்காவை அங்குலம் அங்குலமாய் அளந்துக் கொண்டிருந்தது, அவள் என்னதான் யோசித்து வைத்திருக்கிறாள்? என்று அறிய துடித்தது.

 அதெல்லாம் வேண்டாம் அத்தான். நம்ம ரெண்டு பேர்ஃபேமிலிக்கும் அது பெருமை தேடி தராது. நிறைய பிரச்சினை வரும்.

அனிக்கா அவன் பார்வையை பார்த்தும் பாராமலும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதைக் கவனித்து அவன் கண்கள் இடுங்கின.

 அப்படின்னா நாளைக்கு தான் அண்ணா, அண்ணி, அம்மாவோட உங்க வீட்டுக்கு வர்றாங்கள்ல அவங்க வர்றப்ப உன் சம்மதம் சொல்லு..

அத்தையை வரவேண்டான்னு சொல்லுங்க அத்தான் , எங்க வீட்ல இப்ப எதுவுமே சரியா இல்ல. அத்தையை இன்சல்ட் பண்னிடுவாங்களோன்னு எனக்கு பயமா இருக்கு. அவங்களை வர வேண்டான்னு சொல்லிடுவீங்களா? ப்ளீஸ்.

ரூபன் கண்களையும், தரையையும் மாற்றி மாற்றிப் பார்த்து ஒரு வழியாக இதை அவள் சொல்லி முடித்திருந்தாள்.

 அவள் பதிலைக் கேட்டு உக்கிரமாய் முறைத்துக் கொண்டிருந்த ரூபனை அவளால் நிமிர்ந்துப் பார்க்கவே முடியவில்லை. ஆனாலும், அவள் மறுபடியும் தொடர்ந்தாள்.

 நம்மளைக் கொண்டு நம்ம ஃபேமிலிக்கு சந்தோஷம் வரணும் இல்லன்னா அட்லீஸ்ட் கஷ்டமாவது கொடுக்காம இருக்கணும்னு எப்பவும் நினைப்பேன் அத்தான். இப்ப இருக்க சூழ்நிலையில நம்ம மேரேஜ் நடந்துச்சுன்னா நம்ம ரெண்டு ஃபேமிலிக்கிடையே சண்டைச் சச்சரவு தான் வரும், சமாதானம் வராது.

நாம பெத்த பிள்ளை நம்மை தலைக் குனிய வச்சுட்டாளேன்னு நம்ம அம்மாவோ இல்லை அப்பாவோ ஒரு செகண்ட் யோசிச்சாலும் நம்ம லைஃப் வேஸ்ட்னு தோணுது. இப்படி சிச்சுவேஷன்ல நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கும்னு எனக்கு தோணலை. இப்ப இல்லை எப்பவுமே நடக்காதுன்னும் தோணுது.

அதுக்கு? இன்னும் சூடேறிப் போயிருந்தது ரூபனின் குரல்.

நீங்க எனக்காக காத்திருக்க வேணாம், வேற யாரையாவது கல்யாணம் பணணிக்கோங்க அத்தான்.

ஓ அப்படியா? வெறுப்பில் ரூபன் பதிலிறுத்ததோடு அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, தான் சொல்ல வந்ததை சொல்லி விட்டதாக எண்ணியவள் கேபினின் கதவைத் திறக்க யத்தனிக்க, வெளியே அமர்ந்திருந்த பிரபா அனிக்கா வெளியே வரப் போவதை உணர்ந்து தன் இருக்கையினின்று எழுந்தாள்.

கதவைத் திறந்து வெளியே செல்ல எத்தனித்தவளை ரூபன் கேள்வி தடுத்து நிறுத்தியது. சரி எனக்கொரு கேள்வி இருக்கு அதுக்கு பதிலைச் சொல்லிட்டுப் போ….

சரி என்றவள் திறந்த கதவை விட்டு அவனை நோக்கி திரும்பினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.