(Reading time: 13 - 25 minutes)

"வங்க எப்படி தீவிரவாதிங்க கையில மாட்டி இருப்பாங்க?அப்படின்னா அவங்களுக்கு தீவிரவாதிகள் இருக்குற இடம் தெரியுமா?" என்று தன் மனதில் தோன்றிய வினாவை முன் வைத்தார் கர்னல்.

வாட்சனின் இதழில் குரூர புன்னகை உருவானது. "அவங்க ஆசை தூண்டப்பட்டிருக்கு. அதுக்கு விலையா தங்களுடைய உயிரையே கொடுத்திருக்காங்க"

"புரியலையே"

"அவங்களுக்கு தேவையான செய்தி ஓரிடத்துல இருக்குனு அவங்கள நம்ப வச்சு சிக்க வச்சிருக்கணும்"

"அப்படி இருந்தா கூட முட்டாள்தனமாவா நம்புவாங்க"

"இங்க தான் சார் எனக்கும் அந்த சந்தேகம் வருது. இதுல இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒண்ணு, சொல்லுறவன் அவங்க நம்புற போல சொல்லிருக்கணும். அப்படி இல்லன்னா சொன்னவன் மேல அவங்களுக்கு எந்த சந்தேகமும் வந்திருக்க முடியாது"

கர்னல் ஜார்ஜின் முகம் அதிர்ச்சியானது.

"நாம தீவிரவாதிகளை தேடி பலனில்லை சார். அவங்களுடைய கைக்கூலிகளை பிடிக்கணும்"

"இப்போ அதை விட முக்கியமான விஷயம் இருக்கு வாட்சன். நம்ம சுற்று வட்டாரத்துல இருக்க அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும். அதுவும் இப்போ இருந்தே . அமெரிக்ககாரங்க எந்த எந்த ஹோட்டல்ல தங்கி இருக்காங்கனு கண்டுபிடிச்சு நம்ம முகாமுக்கு கொண்டு வாங்க. சீக்கிரம்"

"சரி சார்" என்று கர்னலின் உத்தரவை செயல்படுத்த புறப்பட்டார் வாட்சன்.

து ஒன்றும் அவ்வளவு பிரமாதமான ஹோட்டல் என்று சொல்லிவிட முடியாது. அந்த ஹோட்டலில் உள்ள தங்கும் அறைகளும் சுமாரான வசதிகளை கொண்டவையாகவே இருந்தன. ஆனாலும், அந்த ஹோட்டலில் அறை எடுத்து தங்க கெவினுக்கு பெரும்பாடாய் போனது. .

'நீங்கள் அமெரிக்ககாரர். உங்களை தங்க வைத்தால் எங்களுக்கு பிரச்சனை வரலாம்' என ஹோட்டல் நடத்துபவன் கூறியதை எண்ணிப் பார்த்தான் கெவின். இருப்பினும் பெரிய தொகையை செலவழித்து ஒருவாரமாக தங்கிக் கொண்டிருக்கிறான்.

வந்த வேலையை விட்டுவிட்டு நேரத்தை கடத்துகிறோமா என்று கெவின் எண்ணினான். ஈராக்கில் நிலவும் சூழ்நிலையையும் தீவிரவாதிகளின் ரகசிய இருப்பிடங்களைப் பற்றியும் டாக்குமெண்ட்ரி பிலிம் எடுக்க ஆசைப்பட்டு வந்தவன், இன்னும் பூஜ்ஜியத்திலேயே நின்று கொண்டிருப்பது வேதனையைத் தந்தது.

ஈராக்கில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதது கெவினுக்கு இன்னல்களைத் தந்தது. எங்காவது செல்வது என்றாலும் ஆங்கிலம் தெரியாதவர்களிடம் எப்படி பேசுவது என்று தத்தளித்துக்கொண்டிருந்த வேளையில் தான் இம்ரான் அறிமுகமானான் 

அவனுக்கு வயது இருபத்தைந்தைக்  கடந்திருக்காது. குட்டையான உருவமும், சுருட்டை முடியும் கொண்டிருந்த அவன் ஆங்கிலத்தை முழுமையாக பேசாவிட்டாலும் எண்பது சதவீதம் புரியும்படி பேசினான்.

வெளிநாட்டினர் வந்தால் அவர்களுக்கு ஊர் சுற்றிக் காட்டி அதில் வருமானம் பார்ப்பவன் இம்ரான். அவனுடன் சேர்ந்து முக்கியமான இடங்களுக்கு சென்று புகைப்படங்களை எடுத்திருந்தான் கெவின். கெவினால் இம்ரானுக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

கெவின் இம்ரானிடம் தீவிரவாதிகளைப் பற்றி விசாரித்ததில் இருந்து இம்ரான் கெவினை சந்திப்பதைத் தவிர்த்தான். இருந்தும், அவனை விடாமல் தேடிப்பிடித்த கெவின், நிறைய பணத்தை கொடுப்பதாய் இம்ரானின் மனதில் ஆசையை உருவாக்கினான்.

"நீங்கள் கேட்கும் உதவியை நான் செய்தால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அதனால், தீவிரவாதிகள் இருக்கும் இடத்திற்கு வேலைக்கு சென்று வரும் ஒரு சிறுவனை அறிமுகப்படுத்துகிறேன்" என கூறி ஹக்கீமை அறிமுகப்படுத்திவைத்தான் இம்ரான்.

"தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை காட்டுகிறேன்" என்று கூறிச் சென்று இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் ஹக்கீம் வராதது கெவினிற்கு ஏமாற்றத்தைத் தந்தது.

திடீரென ஹோட்டல் காரியதரிசி கெவினின் அறைக்கு வந்து, " தங்களுக்கு போன் வந்திருக்கிறது" என்று சொன்னதும், 'நிச்சயம் அது இம்ரானாகத்தான் இருக்க வேண்டும்' என்று எண்ணியபடியே வேகமாக  சென்று ரிசெப்ஷனில் இருக்கும் போனை எடுத்து காதில் வைத்தான் கெவின்.

கெவின் நினைத்தபடியே இம்ரான் தான் அழைத்திருந்தான். "ஹக்கீம் இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வருவான். அவன் உங்களை முக்கியமான இடத்திற்கு அழைத்து செல்வான்" என கூறி இணைப்பைத் துண்டித்தான் இம்ரான்.

அவன் சொன்னது போலவே அரை மணி நேரம் கழித்து ஹக்கீம் அவ்விடத்திற்கு வந்தான். எதுவும் பேசாமல் தன்னுடன் நடந்து வருமாறு சைகையில் கூறி விட்டு ஹக்கீம் முன்னால் செல்ல சற்று இடைவெளிவிட்டு கெவின் கேமராவும்  பையுமாக பின்னால் வந்தான்.

வேகமாக நடந்த ஹக்கீம், ரிசெப்ஷனில் அமெரிக்க ராணுவத்தினர் ஹோட்டல் மேலாளரிடம் எதையோ விசாரித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். சுதாரித்துக்கொண்ட ஹக்கீம் கண்ணிமைக்கும் நேரத்தில்,  தன்னை மறைத்துக்கொண்டு என்ன நடக்கிறதென்று வேடிக்கை பார்த்தான். ஹக்கீம் ஒளிந்துகொண்டதை அறியாத கெவின் ரிசெப்ஷனை நோக்கி நடந்தான்.. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.