(Reading time: 15 - 30 minutes)

த்து..த்து.. ச்ச ரொம்ப மோசம் நந்தினி!” என்றாள் கேலியாய் உச்சுகொட்டியபடி.

“யாரு மோசம் நீயா? ஆமாம் மேக் அப் உனக்கு செட் ஆகவே இல்லை!”

“ஹா ஹா என்ன பண்ணுறதும்மா..நான் காலேஜ்கு படிக்க மட்டும்தான் வரேன்.. சில பேரு மாதிரி பசங்களை என் பின்னாடி சுத்த வைக்க வரலையே!”

“ஆமாம் நான் சுத்த வைக்கத்தான் வரேன்.. அது என் இஷ்டம்.. உனக்கென்ன வந்துச்சு?இயலாமையில் கோபம் ஏதாச்சும் வருதா?”

“இயலாமை என்பது எல்லாருக்கும் இருக்குற விஷயம் தான் நந்தினி..ஏன் உன்னால் இயலாதுன்னு சுட்டிக்காட்ட கூட ஏதாச்சும் ஒன்னு இருக்கும்.. இருக்கிறதே!”

“அப்படி என்னத்தை கண்டுட்ட என்னால் இயலாதுன்னு?சும்ம உளறாத.. நந்தினி ஆசைப்பட்டா எதுவும் நடக்கும்!” மீண்டும் மிடுக்காய் பதிலளித்தாள் நந்தினி.

“உன்னால முடியாததும் இருக்கு நந்தினி”

“ அப்படியா ? என்ன முடியாது? “

“அபிநந்தன்!”

“…”

“உன்னால அபிகிட்ட பேச முடியுமா?பழக முடியுமா? அட்லீஸ்ட் ஃப்ரண்டாக ஆச்சும் ஆக முடியுமா?” என்று வைஷ்ணவி வினவவும் இவளும்கண்டுகொண்டு விட்டாளா என்ற அதிர்ச்சி, தோற்றுப்போன ஒரு பாவம், ஏன் என்னால் முடியாத என்ற ரோஷம் என பல முகங்களை நொடியில் காட்டினாள் நந்தினி.

“என்னாச்சு நந்தினி? வெறும் காத்துதான் வருதா?”

“உன்னால மத்த பசங்களை ஏமாத்த முடியும்.. ஆனா அபியை எதுவும் பண்ண முடியாது!”

“..”

“சோ புரிஞ்சுக்கோ!ரொம்ப திமிரா ஆடாதே” என்றுவிட்டு வைஷ்ணவி நகர அவளது கையை இறுக்கி பிடித்து நிறுத்தி தடுத்தாள் நந்தினி.

“என்ன பெட்?”

“வாட்?”

“அபிக்கு ப்ரண்டு என்ன? அவன் என்னையே சுத்தி வருவான்.. சுத்தி வர வைப்பேன்..பெட் கட்டுறியா?” என்றாள் நந்தினி வன்மமானகுரலில்.

“ஏய்.. நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன்..இதுக்கு போயி பெட்டா?”

“பயப்படுறியா வைஷூ?”

“கண்டிப்பா இல்லை! இது ஃபைனல் யியர்.. படிக்கிற வேலையை மட்டும் பாக்கலாம்னு நினைக்கிறேன்.. நான்\தான் தப்பா பேசிட்டேன்னு வெச்சுக்கோ..இந்த பேச்சை விடு!” என்றாள் அவள்.

“நீ செய்னு சொனால் நான் செய்யனும்..வேணாம்னா விட்டுரணுமா? இது என்னோட கேம்! அந்த அபிக்கும் ஒரு பாடம் கற்பிக்கனும்..”

“நந்தினி!!! சும்மா இரு!”

“ஏன் பயப்படுற? உங்க அபி மேல நம்பிக்கை இல்லையா?”என்று நந்தினிசீண்டவும் வைஷ்ணவியின் பொறுமையுமே உடைந்து போனது.

“நிறையவே நம்பிக்கை இருக்கு! அவன் உன்னை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்,.. சொல்லு என்ன பெட்?”

“ஒரு லட்சம்!”

“வாட்??”

“ஏன் அந்த சின்ன காசை கூட கொடுக்க உனக்கு வசதி இல்லையா?”

“வார்த்தையை அளந்து பேசு நந்தினி.. வசதியில் நான் உனக்கு சளைச்சவள் இல்லைத்தான்.. ஆனா அதே நேரம் முட்டாள்தனமான விஷயங்களுக்கு நான் செலவு பண்ண மாட்டேன்!” என்று அவள் சொல்லவும் சிரித்தே விட்டாள் நந்தினி.

“சோ தோத்துருவன்னு இப்போவே முடிவு பண்ணிட்ட.. அப்படித்தானே?”

“சரி .. உன் பெட் கு நான் சம்மதிக்கிறேன்.. உனக்கு இரண்டு மாசம்தான் டைம்.. முடிஞ்சதை பாத்துக்கோ!” என்ற வைஷ்ணவி கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை! இந்த விளையாட்டில் பலியாகப்போவது அபிநந்தனின் மனமென்று!

ன்றைய நினைவில் கண் கலங்கி போயிருந்தான் அபிநந்தன். நடந்தவற்றை சொல்லுவது அவனுக்கு வெகு  சிரமமாய் இருந்தாலும் இன்றே இதற்கு முற்றுபுள்ளின் வைக்க வேண்டும் என்று எண்ணி அவன் பேசிட, அவனது கரத்தை ஆதரவாய் பற்றிக் கொண்டாள் நந்திதா.

அவளது ஸ்பரிசமே அவனுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டுவிட்டு பேசினான் அபி.

“ புரிஞ்சுக்க முடியலடா. என் மனசையும் காதலையும் ஒருத்தி ஒரு லட்சத்திற்கு பணையும் வெச்சாளே அது ஏன்னு புரிஞ்சுக்க முடியல. அவ மேல உண்டான வெறுப்புத்தான் காதல்னு என்னை தேடி வந்த உன்னையும் தள்ளி வெச்சது. அது ஏன்னு புரிஞ்சுக்க முடியல!” என்றவன் நடந்ததை கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.