(Reading time: 15 - 30 minutes)

ணத்தை எடு!” என்றாள். வைஷ்ணவியின் முகம் வெளிறிபோனது, “தவறு இழைத்துவிட்டேனே” என்று அவள் விழிக்க,

“என்ன் நந்து இது?”என்று அபி நடுக்கமாய் கேட்க,  அவன் அணிவித்த சங்கிலியை அசால்ட்டாக கழற்றினாள்.

“இதுவா ஃபேக் தாலி.. பித்தளை.. உனக்கு கோல்டு எது ஃபேக்கு எதுன்னு கூட தெரியாதா? என்மேல அவ்வளோ நம்பிக்கையா? இல்ல அவ்வளோ மயக்கமா?” என்று அவள்கேட்க அபிக்கு எல்லாம் புரிவது போல இருந்தது.

“தலை ஏதாவது சுத்துதா அபி? கோபம் வருதா? ரெண்டும் வர கூடாது! என்கிட்ட நீ தோத்து போயிட்ட..ஏமாந்து போயிட்ட… ஞாயப்படி உனக்கு அவமானமாகத்தான் இருக்கணும்!” என்றவள் வைஷ்ணவியுடனான தன் சவாலை கூறினாள்.

கூசியது அவனுக்கு.. என்னத்தான் அவனோடு இருந்த நண்பர்களை அவளை தூற்றி பேசி ஆறுதலாக அபியைக் கட்டிக் கொண்டாலும், அவனுக்கு உயிர அறுக்கப்பட்டது போல ஒரு உணர்வு. அவள் மீது எழுந்த காதல்,பாசம், பிணைப்பு உரிமை எல்லாம் அவனைப் பார்த்து உமிழ்ந்தது. அவனிடம் வைஷ்ணவி மன்னிப்பு கோரிட,

“உனக்கு பணம்தான் வேண்டும்னா என்கிட்ட சொல்லியிருக்கலாமே வைஷூ..அவ என்னை காதல்ன்னு ஏமாத்தினா..நீ நட்புன்னு ஏமாத்திட்ட.. பொண்ணுங்கள நம்பவேகூடாதுனு பசங்க சொல்றதை நிரூபிச்சுட்ட ..ச்ச!

 என்றான் அபி நந்தன்!

அதுதான் அவன் தன் நண்பர்களுடன் இருந்த கடைசி தினம். அதன்பின் தனது அறையில் சரண்புகுந்தவன் மீளவே இல்லை!நந்தினி, வைஷ்ணவி, பெட்டிங், பொய், ஏமாற்றம், அவமானம்,தோல்வி எல்லாம் அவனை உடைத்துவிட்டது!

பியின் கடந்தகாலம் அறியாதவள் இல்லை நந்திதா!இதையெல்லாம் அவனுக்கு சொன்னதே சாரதா தான்! அபியின் அன்னைக்கும் சகிக்கும் மட்டுமே நடந்தது தெரியும்.மற்ற அனைவரும் அவனை யாரோ ஒரு பெண் ஏமாற்றிவிட்டாள் என்று மட்டுமே அறிந்திருந்தனர்.

அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள் நந்திதா.

“அழுதிடுங்க மாமா..  இன்னையோடு இது முடியட்டும்!” என்று அவள் சொல்ல அவனை அணைத்தபடி அழுதான் அபி. அவன் மனம் தெளியும் வரை அவள் பேசவே இல்லை!

“ உனக்கு என் மேல கோபம் இல்லையா?” தவிப்பாய் கேட்டான் அவன்.

“எனக்கு இதெல்லாம் எப்பவோ தெரியும் !”

“என்ன?”

“அத்தை சொன்னாங்க..! ஆனா இதை நீங்களே சொல்லனும் நினைச்சேன்..அதான் பிரிஞ்சு போறென்னு நடிச்சேன்!”

“நடிச்சியா? “ விழி அகலகேட்டான் அவன்.

“பின்ன? இதெல்லாம் என் புருஷன்மேல நான் வெச்சிருக்கும் காதலை உடைக்குமா?”

“..”

“உங்களுக்கு அவ மேல வந்ததுகாதலே இல்லை! நீங்க கட்டினது தாலியே இல்லை! அப்பறம் அது எப்படி முதல் காதல் ஆகும்? முதல் கல்யாணம் ஆகும்? “

“அப்பறம் ஏன்டீ இதபத்தி முன்னவே பேசல?”

“பேசியிருந்தா என்ன ஆகி இருக்கும்? என்னை தியாகி மாதிரி பார்ப்பீங்க! நான் சொல்லுறது உங்க மண்டையில ஏறாது! உங்க மனசுல நான் எப்பவோ வந்துட்டேன்.. அன்னைக்கு நீங்க என்னை கோபத்தில் தொட்டிருந்தாலும், அதுல காதலை நான் உணராமல் இல்லை.. உங்க காதலை நான் புரிஞ்சுகிட்ட அளவு நீங்க புரிஞ்சுக்கல.. உங்களுக்கும் புரியணும்..அதான் பிரியிறேன்னு சொல்லி புரிய வைச்சேன்..!”

“ஹேய் செல்லம்மா..நிதூ..நிஜம்மாவா சொல்லுற? நான் அப்போவே உன்னை காதலிச்சேனா?நம்ம பாப்பா..நம்ம பாப்பா என்னை வெறுக்காதுல?” என்று அவன் உணர்ச்சிவசப்படவும், அவன் இதழ்களில் இதழால் பதில் எழுத ஆரம்பித்தாள் நந்திதா.

“இருந்தாலும் இதெல்லாம் அநியாயம் மாமா..பொதுவா ஹீரோ தான் இப்படி ஹீரோயின் வாயை மூட வைக்கனும்… ஆனா இங்க எல்லா  வேலையும் நானே தனி ஆளாய் பாக்குறேன்!” என்று அவள் கூறவும்,

“ஹேய் என்னன்னு கூப்பிட்ட? நான் உனக்கு மாமாவா?”என்றான் அபிநந்தன். தலையில் அடித்துக்கொண்டாளவள்.

“இங்க ஒருத்தி ரொமாண்டிக்கா ஒரு வசனம் பேசுறேன் .. அதில் எதை கவனிக்கனுமோ அதை கவனிக்காம.. மாமாவா கோமாவான்னு டவுட் கேட்குறீங்களே குட்டிபையா!!” என்று அவள் கொஞ்சவும், சொக்கி போயிருந்த அபிநந்தன் அவள் சொன்ன “எல்லா வேலைகளையும்” பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தான்.

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 23

Episode # 25

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.