(Reading time: 15 - 30 minutes)

நீயின்றி நானில்லை! இந்நிலையை போல அழகியலும் உலகில் இல்லை ஆபத்தும் உலகில் இல்லை.. எனக்கு என்ற அடையாளத்தை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, நமக்கு என்ற நிலையை அடைவது சுகம்தான்! ஆனால் அதில் பொய்யும் கபடமும் சேர்ந்தால்?

அந்த காட்டுபகுதியில் அபிநந்தன், நந்தினி,வைஷ்ணவி மற்றும் சில மாணவர்களும் கூடாரம் அமைத்தனர். கல்லூரியின் கடைசி நாட்களை ஒன்றாக கழிப்பதற்காக சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தார்கள். கிடைத்த நொடிகளில் எல்லாம் நந்தினியை ஆசையாய் பார்வையாலேயே பருகி கொண்டிருந்தான் அபி.

அவனுக்கு காதலிப்பதும்,காதலிக்க படுவதும் புதிதாக இருந்தது. பூரிப்பாக இருந்தது. எனக்கானவளை நான் கண்டு பிடித்துவிட்டேன்!” என்று சந்தோஷப்பட்டான் அவன். அதைவிட அதிமுக்கியமான ஒன்று, அவன் அவளை கண்மூடித்தனமாக நம்பினான்.

அந்த நம்பிக்கை உடையும் நாளும் வந்தது.

“ வைஷூ”

“சொல்லு நந்தினி”

“நீ கொடுத்த ரெண்டு மாசம் இன்னைக்கு முடியுது!”

“என்ன சொல்லுற? ஒன்னும் புரியல!” என்ற வைஷ்ணவிக்கு அன்றைய சவால் மறந்தே போயிருந்தது. நந்தினியின் குணமாற்றம் உண்மையென அவளும் நம்பியிருக்க, அந்த நம்பிக்கையை சுக்குநூறாக்கி சிரித்தாள் நந்தினி.

“நம்ம பெட் மறந்து போச்சா?”

“நந்தினி!!!!!!என்னடீ சொல்லுற? அபி உன்னை உண்மையா காதலிக்கிறான்..நீயும் தானே??”

“என்ன நானும் தானே? ஹா ஹா நான் முட்டாள்னு நினைச்சியா?”

“ஏய்.. இது தப்புடீ!”

“உண்மையான முட்டாள் யாருன்னு உனக்கு காட்டுறேன்!” என்று சிரித்தவள் அடுத்த நொடி அபியைத் தேடி போனாள். அவள் முகத்தில் சோகம் அப்பியிருந்தது.

“குட்டிமா..என்னாச்சுடா?”

“..”

“ஏண்டா சோகமா இருக்க?”

“..”

“சொல்லு நந்தும்மா?” அக்கறையாய் அவன் கேட்க, அவள் விழிகளில் கண்ணீர்..

“கெட்ட கனவு வருது அபி..நாம பிரிஞ்சிடுவோமா?”

“ச்ச..என்னடா நீ?கனவு அது இதுன்னு,., நான் உன் அபி உன்னை விட்டு போவேனா?”

“அப்போ நான் சொல்லுறத செய்வியா?”

“என்ன வேணும் சொல்லு செய்யுறேன்..”

“கல்யாணம் பண்ணிக்கோ அபி,, இப்போவே” என்றவள் தன் உள்ளங்கையில் மறைத்து வைத்த சங்கிலியை நீட்டினாள். தாலி வடிவத்தில் இருந்த\து அது. அதிர்ந்தே விட்டான்  அபிநந்தன்.

“என்னடா நீ?அந்த அளவுக்கா பயந்து போயிட்ட நீ? “

“..”

“ஆனா இதெல்லாம் தப்பு குட்டிமா..  நமக்குன்னு குடும்பம் இருக்கு,, அவங்க நம்மளசேர்த்து வைப்பாங்க”

“இல்ல..மாட்டாங்க..என்னை உனகிட்ட இருந்து பிரிச்சிடுவாங்க அபி..”

“டேய்.. அப்படியெல்லாம் இல்லடாம்மா..என் வீட்டில் நான் பேசுவேன்.. நமக்குநிறைய நேரம் இருக்கு குட்டிமா!”என்று அவன் சமாதானமாய் சொல்லவும், தாலியை கீழே போட்டுவிட்டு மூலையில் அமர்ந்து கொண்டாள் நந்தினி.

“சில நேரம் விதியை யாராலும் ஜெயிக்க முடியாதுன்னு சொல்லுறது இதுதான் போல.. எனக்கு கனவு வந்தால் அது பலிக்கும்..அதான் பயப்படுறேன்..விதியை மாத்தி நாம சேரனும்னு போராடுறேன்..ஆனா உனக்கு என் தவிப்பு புரியல அபி..”

“..”

“இது வரைக்கும் கல்யாணம் அது இதுன்னு நான் வரம்பு மீறி பேசி இருக்கேனா? ஆன இன்னைக்கு பேசுறேன்! அது ஏன்னு உனக்கு புரியலைல?”

“..”

“இட்ஸ் ஓகேப்பா..லவ் மட்டும் பண்ணுவோம்.. பிரியுற நேரம் வரும்போது ஹேண்ட்ஷேக் செஞ்சுட்டு போயிடுலாம்” என்று அவள் மனமுடைந்து போக, அந்த நொடி நந்தினியை தவிர எதுவும் பெரிதல்ல என்று தோன்றியது அவனுக்கு!

எந்த அளவிற்கு தன் மீது காதல் இருந்திருந்தால், இப்படி கேட்பாள்?என்று மனம் அவளுக்காக பேச, அவள் கொண்டு வந்த தாலியை அவளுக்கு அணிவித்திருந்தான் அபிநந்தன். நந்தினியின்ம் முகம் அப்படியொரு தேஜஸ் திடீர் மாற்றம்..இத்தனை நாட்களாய் மறைந்திருந்த மிடுக்கும் வெளிவர, அது அவளின் பூரிப்பு என்று தவறாய் கணித்தான் அபி.

“அபி”

“என்னம்மா?”

“என்கூட வாயேன்!” என்று அவள் அவனது கையைப் பிடித்துகொண்டு ஓட, அவன் மனமோ சிறகடித்து பறந்தது. நண்பர்கள் அனைவரும் சூழ்ந்திருக்க, வைஷ்ணவியின் முன் நின்று கைகொட்டி சிரித்தாள் நந்தினி. யாருக்கும், எதுவும் புரியவில்லை! அபிநந்தன் உட்பட!

“போதுமா? ஜெயிச்சுட்டேன்” என்று தாலியை சுட்டிக் காட்டியவள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.