(Reading time: 11 - 22 minutes)

"னக்கு என்னமோ ஜோசப் மேலே தப்பு இல்லைன்னு தான் தோணுதும்மா!நீ எதுக்கும் ஒருமுறை..."

"வேணாம் தாத்தா!நான் சோர்ந்துப் போயிட்டேன்!"-அவளிடமிருந்து கசப்பான நகை வெளியானது.

"மறுபடியும் எந்த சமாதானத்தை ஏற்க எனக்கு தைரியம் இல்லை.எனக்கு வேணாம் தாத்தா!நான் இங்கே இருக்கிறதுல உங்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லையே!"-அவளது கேள்வி வைத்தியநாதனை அதிர வைத்தது.

"ஹனி!என்ன பேசுற நீ?எ..ஏன் இப்படி உளர்ற?பைத்தியமா நீ?"

"அப்போ என்னை சமாதானம் செய்ய முயற்சி பண்ணாதீங்க!நான் இப்படியே கடைசி வரைக்கும் இருந்துடுறேன்!நான் வாழ ஒருத்தனோட துணை எனக்கு தேவையில்லை!"

"எங்களுக்கு அப்பறம் யாரும்மா உனக்கு இருக்கா?"

"அந்த ஆண்டவன் இருக்கான் தாத்தா!அவனை விட சிறந்த பாதுகாப்பை வேற யாரும் எனக்கு கொடுக்க முடியாது!ஜோசப் பக்கம் நியாயம் இருக்கோ,இல்லையோ!எப்போ என்னை இழிவா அவன் பேசினானோ,இந்த ஜென்மத்துல என்னால அவனை மன்னிக்க முடியாது!"

"................"

"இதையெல்லாம் சந்திக்க கூடாதுன்னு தான் அன்னிக்கு அந்த ஆண்டவன் என் உயிரை எடுத்தான்னு நினைக்கிறேன்!நான் இறந்துட்டா,அவனுக்கு பொழுது போகாதே அதான் இவ எந்த அளவு பிரச்சனையை தாங்குவா பார்ப்போம்னு மறுபடியும் என்னை அனுப்பிட்டான்!"

"ஏன்டா!ஏன் இப்படி பேசுற?"-நிர்பயா தன் விழிகளை துடைத்துக் கொண்டாள்.

"இதுதான் கடைசி தாத்தா!இனி என்னை அழ வைக்க,எந்த ஒரு அஸ்திரமும் அந்த ஆண்டவனிடம் இல்லை!நான் ஜெயித்துவிட்டேன்!கடைசி வரைக்கும்,நான் பின் வாங்கலை!என் போராட்டம் ஜெயித்துவிட்டது!"-வேதனைகள் மறைந்த பெருமிதம் அவள் குரலில் தொனித்தது.

"இனி எந்த சக்தியாலும் நிர்பயாவை எதிர்த்து நிற்க யோசிக்க கூட முடியாது!"

"............."

"ஆபிஸூக்கு கிளம்புறேன்!நிறைய வேலை இருக்கு!"-என்றவள் உத்தரவிற்கு காத்திராமல் நகர்ந்தாள்.

அவளது இந்த மாற்றம்,வைத்தியநாதனை அதிர வைத்தது.இது எதிர்பாரா திருப்பமே!!

ன்று மாலை....

நவப்படிகளில் ஒய்யாரமாய் வைக்கப்பட்டிருந்தது கொலு!!முதல் படியில் ஓரறிவு ஜீவன்களில் தொடங்கி,ஒவ்வொரு அறிவாய் முன்னேறி,ஏழாம் படியில் சித்தர்களின் பொம்மைகளும்,எட்டாம் படியில் தேவர்களின் பொம்மைகளும்,இறுதி படியில் தெய்வீக பொம்மைகளும் வீற்றிருந்தன...

அற்புதமாய் வடிவமைக்கப்பட்டிருந்த கொலு அது!!

அக்கம் பக்கத்திலிருந்த பல சுமங்கலிகளும்,கன்னிகைகளும் அந்த அற்புதத்தை காண அங்கு கூடி இருந்தனர்.

"ப்ச்...கொலுவாம் கொலு!தேவையா இதெல்லாம்?"-இதை சகிக்க இயலாத ஒரு நல்லுள்ளம் பொருமியது!!

"அம்மா!அத்தை இப்போ எதுக்கு இப்படி சீன் போடுறாங்க!"

"அவளுக்கு துளிர் விட்டு போயிடுச்சு!இது மட்டும் அண்ணனுக்கு தெரிந்தது..!"-அவர் கூறிக்கொண்டே போக,தனது அறையிலிருந்து கீழிறங்கி வந்தார் சங்கர்.என்றுமில்லாத திருநாளாய் விஷேசங்களில் உடுத்தும் நமது பாரம்பரிய உடையை தரித்திருந்தார்.அவரது முகத்தில் என்றுமில்லாத அமைதி குடிக் கொண்டிருந்தது.

"என்னம்மா?மாமா வந்தா பிரளயம் நடக்கும்னு சொன்ன?அவரே பூஜையில கலந்துக்கிறார்?"

"சும்மா இருடி!"-லட்சுமியின் பார்வையில் ஒருவித குழப்பம்!!

வழிபாடு ஆரம்பமானது!!

ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த கீர்த்தனைகளை,ஸ்லோகங்களை,ஸ்துதிகளை எல்லாம் பாடினர்.வயது முதிர்ந்தோர்,இதிகாசங்களை எடுத்துரைத்தனர்.வழிப்பாட்டின் இறுதியில்,துர்க்கை அவளுக்கு ஆரத்தி எடுக்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.

"இந்த வீட்டு பொண்ணு இருக்காளா?"-என்றார் ஒரு பெண்.

பல்லவியின் முகம் வாடிப்போனது,அவள் தான் இனி திரும்ப போவதில்லையே!!

அவரது முக பாவனையை குறித்துக் கொண்டார் சங்கரன்.

எங்கு தன்னை அழைக்க போகிறார்கள் என்ற அச்சத்தில் பின்வாங்கிக் கொண்டாள் ஸ்வேதா.

"நீ தான் எடும்மா!இந்த வீட்டு மருமகள் தானே நீ?தம்பதி சகிதமாய் எடுத்தா இன்னும் விஷேசம்!"-மௌனமாய் இருந்த பல்லவியை உசுப்பினார் ஒரு மூதாட்டி!!

எங்கிருந்து தம்பதி சகிதமாய் எடுப்பது?என்று மனதில் எண்ணியப்படி ஆரத்தித்தட்டை அவர் எடுக்க,அவரது கரங்களுக்கு பலம் சேர்க்கும்படி அவரோடு இணைந்தது சங்கரனின் கரம்!!ஒன்றும் புரியாத விசாலாட்சி,அச்சமயம் வாயைப் பிளந்துவிட்டார்.அங்கிருந்த சிலருக்கு இது அதிர்ச்சி அளிக்கவே செய்தது.அதிர்ந்துப் போன பல்லவி சங்கரனை நோக்க,அவரோ ஒரு மெல்லியப்புன்னகையை அவரை நோக்கி விடுத்தார்.இத்தனை வருடத்தில் இதுபோன்ற புன்னகையை அவர் காண்பதென்பது அரிதாகவே இருந்தது!!சூழல் உணர்ந்தவர்,சிரம் தாழ்ந்தப்படி கௌரிக்கு ஆரத்தி எடுத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.