(Reading time: 11 - 22 minutes)

வலை தோய்ந்த முகத்தோடு தன் தாயின் புகைப்படத்தை அவன் பார்த்தான்.சற்று முன் நிர்பயாவை குழப்பிவிட்டு சென்ற தென்றல் நினைவிருக்கிறதா??அது அந்த அறைக்குள்ளும் பாரப்பட்சமின்றி நுழைந்து,அங்கிருந்த பத்திரங்களை எல்லாம் சிதறடித்து,முழுதும் கரையும் நிலையில் அதன் அருகில் இருந்த மெழுகுவர்த்தியின் சுடரில் போட்டு கண் இமைக்கும் நேரத்தில் பொசுக்கியது.ஓரிரு நொடிகள் அவனுக்கு ஏதும் புரியவில்லை.அது புரிந்து அவன் சுதாரிப்பதற்குள்,ஒரு பத்து பக்கங்களுக்கு மேல் அக்னிக்கு தன் உயிரை அளித்தது பத்திரம்!!மனம் துணுக்குற்றது!!

ஒருவர் நலன் மீது மற்றவர் அக்கறை கொள்ளும் சமயம்,எவ்வளவு தான் மற்றவர் மீது பகை பாராட்டினாலும் அப்பகை அங்கு எடுப்படாது!இறைவனானவன்,குறித்த இருவர் இணைய தான் வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால்,அவரது முடிவை எப்பேர்ப்பட்ட சங்கல்பத்தாலும் மாற்றி அமைக்க இயலாது.

அந்தக்குறித்த இருவர் தான் வாழ்வில் ஒருவருக்காக மற்றொருவர் படைக்கப்பட்டவராவர்!படைக்கப்பட்ட அவ்விரு புண்ணிய ஆத்மாக்கள்,எச்சூழலிலும் தன் இணையை தியாகிக்க இயலாது.இது காதலின் வாக்கு!!

ஆனால் இன்று??பார்த்தவுடன் காதல் என்ற பெயரில் ஏதோ ஒன்று மலர்கிறது!சில காலம் நகர்கிறது!பின்பு மடிகிறது!இதுதான் காதலா??பார்த்ததும் காதல் என்ற கோட்பாட்டில் தவறில்லை!அது சாத்தியப்படும் ஒன்றே!ஆனால்,அது சரியான நபரோடு அமைதல் என்பது அவசியம்!!

எத்துணை இதிகாசங்கள் மலர்ந்தாலும் இதுபோன்ற சிலர் மனம் மாறுவதாகவும் இல்லை.இதுதான் நிகழ வேண்டும் என்ற இறைவனின் முடிவை மாற்ற எண்ணம் கொள்ளாதீர்கள்!அவனது முடிவு என்றும் தீங்கு விளைவிப்பதாக இருக்காது.அது காதல் தத்துவமாக இருந்தாலும் சரி,கல்வி தத்துவமாகஅமைந்தாலும் சரி,வாழ்க்கை தத்துவம் என்றாலும் சரி,அவனது பவித்ர மனம் தவறு இழைக்காது!அப்படி தவறிழைக்குமாயின்,அவன் இறைவனாக மாட்டான்!!சிந்தித்துப் பாருங்கள்!!

தொடரும்

Episode # 21

Episode # 23

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.