(Reading time: 9 - 18 minutes)

ஹும்கும் தனி ஒரு மச்சினிச்சிக்கு உணவில்லையெனில் சரவணபவனையே கொளுத்திடுவோம்னு வசனம் பேசுவீங்கநினைச்சேன்..நீங்க என்னடான்னா.. என்னை மிடல்ல வெச்சுகிட்ட காதல் வசனம் பேசுறீங்க..”

“ஹா ஹா வாலு”

“ இந்த அக்கா வேற கண்ணாலேயே கஷல் பாடுறா,..நீங்க உங்க காவிய காதலுக்கு கொஞ்சம் சப்டைட்டில் போடுங்க.. நான் பிரசாதம் ஏதாச்சும் கிடைக்குமானு பார்த்துட்டு வரேன்”என்ற சுபாஷினி அவன் அனுமதிக்கு காத்திருக்காமல் ஓடியே போனாள்.

“வி ..ஹா..ஷி..னி..” ஆழ்ந்த குரலில் அவளை அழைத்தான் வெற்றி. வழக்கம் போலவே அவன் தன்னுயிருக்குள் ஊடுருவுவது போல ஓர் உணர்வு அவளுக்கு..

“வேண்டாம்!” உடனே மறுப்பாய் அவள் தலையசைத்தாள்.

“ஹேய் என்னடீ?”என்றான் அவன் லேசாய் அதட்டியபடி.

“வெற்றி..”

“ம்ம் சொல்லுடீ”

“வெற்றி..”

“கேட்குறெனில்ல..என் பேருவெற்றினு எனக்கு தெரியாதா ? நீ  சொல்ல வந்த்தை சொல்லு!”

“வெற்றி.. உங்க வாழ்க்கை துணை நல்லவளாக இருக்கணும்..”

“சரி…”

“உங்களை நேசிக்கனும்”

“ரைட்டு”

“உங்க சம்பந்தபட்ட எதையுமே ஏற்கும் நிலையில் இருக்கனும்..”

“..”

“ஆனா, நான் அப்படி இல்லை.. அந்த நிலையை விட்டு தவறிட்டேன்..”என்றாள் விஹாஷினி.

பதிலில்லை அவனிடம்..அவனுக்குமே ஓரளவு தெரிந்த விஷயம்தானே அது! மௌனமாய் அவன் எங்கோ வெறிக்க, தான் செய்த தவறை சொல்லியிருந்தாள் விஹாஷினி.

அவன் “ஏய்” என்று அதட்டினாலே அவள் கண்களில் நீ கோர்த்துவிடும். அப்படிப்பட்டவள், இன்று தைரியமாய் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு தண்டனையும் வேண்டி நிற்கிறாள்.

உண்மையில் வெற்றி நினைத்த்தே வேறு.. அவன் ஒரு திட்ட்த்துடன் தான் விஹாஷினியின் ஊருக்கு சென்றிருந்தான். அவள் தந்தையிடம் சம்மதம் வாங்கிவிட்டு

“போதுமாடீ? உனக்கு நான் தானே வேண்டும் .?நான் கிடைச்சிட்டேன்.. தயவு செஞ்சு என் நட்பை என்கிட்ட இருந்து பிரிக்காதே!” என்று சொல்லத்தான் நினைத்திருந்தான் அவன். அவளை சொல்லாலடிக்க நினைத்தான்.

ஆனால் அவள் வதனத்தை பார்த்ததும் எல்லாம் மாறி போனதுதான் உண்மை ! காதலுக்கு மன்னிக்கவும் தெரியும்! என்பதை செயலால் நிரூபித்தான் வெற்றி!

சூரியன் மீது அப்படி என்னத்தான் காதலோ? பூமகள், அவனை சுற்றி ஓடிக்கொண்டே இருக்கிறாள். அவள் ஓட்டத்திற்கேற்ப காலமும் நகர்ந்தது.

ன்று படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் பொறுமையாகவே எழுந்தாள் அர்ப்பணா..காலை காஃபியை அவள் ரசித்து பருகிய நேரமே அவளை தேடி வந்தான் அவன்.

வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்கவும், அவள் யாரென்று எட்டி பார்க்க, அங்கு நின்றவனை பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியாகினாள் அவள்.

அதே நாள்! பொது பேருந்தில் நெரிசலில் ஏறி நிற்கவும் வழியில்லாமல் திணறிகொண்டிருந்தான் வெற்றி. என்னத்தான் அவனுக்கு கல்லூரியில் வேலை கிடைத்து அதில் அவன் சேர்ந்துவிட்டாலும்,அவனுக்குள் இருக்கும்  இயக்குனரின் திறன் குறையவே இல்லை! அவனது தேடலும் அடங்கவில்லை. அவனது தேடலின் பதிலாய், பேருந்தில் அமர்ந்திருந்தாள் அந்த பெண்.அவளைப் பார்த்த்துமே அவனுக்குள் அதிர்ச்சி, ஆச்சர்யம்,தவிப்பு , கண்ணீரென ஆயிரம் உணர்வுகள். எதை வெளிக்காட்டுவது என்று அவன் யோசிக்கும்போதே அவனது இதழ்கள் அவள் பெயரை உச்சரித்தன.

“சுதர்சனா!” அவன் ஓசையில்லாமல் உரைத்திட, அதை தன்னை எட்டியது போல அவளுக்குள் ஒரு நடுக்கம்! யார் அவள்? நெக்ஸ்ட் வீக் சொல்றேன் மா..

-வீணை இசைந்திடும்-

Episode # 17

Episode # 19

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.