(Reading time: 19 - 38 minutes)

16. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

ப்படியும் மகனை சம்மதிக்க வைத்துவிடலாம், என்று அவர் பேசியதற்கு, துஷ்யந்த் இப்படி ஒரு முடிவை கூறுவான்.. என்று கோமதி சற்றும் எதிர்பார்க்கவில்லை… அதிர்ச்சியோடு மகனைப் பார்க்க, செல்வாவும் அண்ணனின் இந்த முடிவைக் கேட்டு அதிர்ச்சியோடு நின்றான்….

நர்மதா, யமுனா, நர்மதாவின் பெற்றோர் எல்லோருக்குமே இந்த செய்தி அதிர்ச்சியை தான் அளித்தது..

“என்ன ராஜா சொல்ற…” வாயில் வார்த்தைகள் தந்தியடிக்க, திக்கி திணறியப்படி  கேட்டார் கோமதி..

“அம்மா… நீங்க சொன்னதும் தான்ம்மா எனக்கு இந்த யோசனை தோனுது… நான் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு… அதை எப்படி சரிப் பண்ணன்னு தெரியாம குற்ற உணர்வோட இருந்தேன்… இப்போ நான் சொன்ன மாதிரி செஞ்சா நல்லா இருக்கும்..” என்றவன்… உடனே குமாராசாமியின் அருகே சென்றான்…

“சார்… இங்கப் பாருங்க, என்னோட தம்பிக்கு நர்மதாவை கல்யாணம் செஞ்சுக் கொடுக்க, உங்களுக்கு சம்மதமா..?? என்கூட சேர்ந்து அவனும் எங்க பிஸ்னஸை கவனிச்சுக்கிறான்…. எங்க சொத்துல அவனுக்கும் சரிப் பங்கு இருக்கு… சொல்லுங்க.. உங்களுக்கு சம்மதமா..??”

“இங்கப் பாருங்க தம்பி… உங்க வசதி, அந்தஸ்தை பார்த்து, என் பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுக்க நினைக்கல.. நீங்க எங்களை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க… நீங்க நல்ல குடும்பமா இருக்கீங்கன்னு தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோம்… அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க…”

“சாரி சார்.. நீங்க அவனுக்கு நர்மதாவை கல்யாணம் செஞ்சுக் கொடுக்கனுமேன்னு தான், நான் அப்படி சொல்லிட்டேன்…. சார், என்னை விட.. செல்வா எல்லாவிதத்திலேயும் நல்லவன்.. அவன் உங்கப் பொண்ணுக்கும் பொருத்தமானவனா இருப்பான்… இப்போ சொல்லுங்க இதுல உங்களுக்கு சம்மதமா..??”

“என்கிட்ட சம்மதம் கேட்கிறது இருக்கட்டும்… முதல்ல உங்க தம்பிக்கிட்ட சம்மதம் கேளுங்க… உங்க மனசுல வேற ஒருப் பொண்ணை, நீங்க நினைச்சுக்கிட்டு இருக்கறது போல, செல்வா தம்பி மனசிலேயும் ஏதாச்சும் இருக்கலாம்ல… அதனால முதல்ல அவரோட முடிவைக் கேளுங்க..” என்று குமாரசாமி கூறினார்.

அவர் சொல்வதும் நியாயம் என்றுப்படவே, துஷ்யந்த் செல்வாவின் அருகில் சென்றான்… “செல்வா.. உனக்கு இந்த முடிவுல சம்மதமா..?? இங்கப் பாரு செல்வா.. உன்னை எந்த விதத்திலேயும் நாங்க கட்டாயப்படுத்த மாட்டோம்… உனக்கு இதுல விருப்பம் இல்லன்னாலும் அதை வெளிப்படையா சொல்லலாம்… உனக்கு நர்மதாவை கல்யாணம் செஞ்சுக்க விருப்பமா..??” என்றுக் கேட்டான்…

தன் அண்ணன் தன்னிடம் முடிவைக் கேட்டதும், செல்வாவின் பார்வை நர்மதாவை சென்றடைந்தது… அவளோ, அவன் என்ன சொல்லப் போகிறான் என்ற எதிர்பார்ப்போடு அவனை பார்த்தப்படி நின்றிருந்தாள்…

“அண்ணா… நர்மதாவுக்கு ஓகேன்னா, எனக்கும் சம்மதம்..” என்று தன் முடிவைக் கூறினான்… அவனது ஆறு வருடக் கனவு நிறைவேறப் போகும் வாய்ப்பை அவன் தவற விட விரும்பவில்லை…

செல்வா சம்மதம் சொன்னதும், துஷ்யந்த் சந்தோஷப்பட, நர்மதாவின் பெற்றோருக்கும், மனதில் ஒரு நிம்மதி வந்து சேர்ந்தது… ஆனால் அது சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை…

“Mr. துஷ்யந்த்… உங்க நிலையை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சதால, நான் உங்க முடிவை ஏத்துக்கிட்டேன்… ஆனா அதுக்காக நீங்க என்ன சொன்னாலும் ஏத்துக்கனும்னு கிடையாது… எனக்கு மாப்பிள்ளை பார்க்க நீங்க யாரு..?? நீங்க அநாவசியமா தேவையில்லாத விஷயங்களைப் பண்றீங்க..” என்று கோபப்பட்டாள்..

நர்மதா சொன்னதுப்போல், தான் செய்தது தவறோ என்று துஷ்யந்த் சிந்தித்தான்… அவன் நர்மதாவின் பெற்றோரின் நிலையையும்,  தன் அன்னையின் நிலையையும் நினைத்து தான்  இந்த முடிவை எடுத்தான்… ஆனால் நர்மதா, அவளுக்கு இதில் மறுப்பு இருக்குமென்று துளியும் எதிர்பார்க்கவில்லை… அவளுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல், அவன் தடுமாற… அதற்குள் மல்லிகாவோ,

“நர்மதா.. எல்லாம் சரியாகிட்டு வர இந்த நேரத்துல, ஏண்டி இப்படி பண்ற..” என்று அவளை அமைதியாக்க முயற்சி செய்தார்..

“அம்மா… என்ன சரியாகுது…?? கல்யாணம் நின்னுட்டா… உடனே உயிராப் போகப் போகுது… இப்படி உடனே அவசர அவசரமா இன்னொரு மாப்பிள்ளை தேடி கல்யாணம் பண்ணனும்னு என்னம்மா அவசியம்..??”

“உயிர் போய்ட்டாக் கூட பரவாயில்லையேம்மா.. உன்னோட வாழ்க்கைப் போய்டுச்சுன்னா.. இங்கப் பாரும்மா… ஆணோ, பொண்ணோ மண மேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னா… சுத்தி இருக்கவங்களுக்கு வாய்க்கு அவல் கிடைச்சா மாதிரி ஆயிடும்… அதுவும் அது பொண்ணா போனா, அவ நடத்தையும், கற்பும் தான் இங்க பெருசா பேசப்படும்… அப்புறம் அந்த பொண்ணோட கல்யாணமே கேள்விக் குறியாயிடும்… அப்படி உனக்கு ஆகக் கூடாதுன்னு நினைக்கிறேன்ம்மா..” என்று குமாரசாமியே தன் மகளுக்கு பதிலுரைத்த்தார்…

“அப்பா.. ஊர், உலகத்துக்குல பேசறாங்கன்னு, நாம நம்மள மாத்திக்கனுமாப்பா.. அவங்களுக்காக நான் என்னோட வாழ்க்கையை தீர்மானிக்கனுமா..??”

“அப்பா, அம்மா உனக்கு நல்லது செய்வோன்னு நினைச்சு தானம்மா இவ்வளவு தூரம் வந்த… இப்பவும் அப்படி நினைச்சு இதை ஏத்துகோம்மா..”

“என்னப்பா… நீங்க எனக்கு கெட்டது செய்வீங்கன்னு நான் சொல்லலையேப்பா.. ஒரு மாப்பிள்ளை கூட கல்யாணம்னு சொல்லி, இவ்வளவு தூரம் வந்து, இப்போ இன்னொரு மாப்பிள்ளைன்னு சொன்னா, அதை ஏத்துக்க எனக்கு அவகாசம் வேண்டாமா..??”

“எனக்கு புரியுதும்மா.. ஆனா துஷ்யந்த் தம்பி வேண்டாம்னு சொன்னப்போ, அது உன்னை பெருசா பாதிக்கலையே.. அதை ஈஸியா தான எடுத்துக்குட்ட… அப்புறம் செல்வா தம்பிய ஏத்துக்கறதுல உனக்கு என்னம்மா பிரச்சனை..??”

“அப்பா… அது.. அப்பா எதையுமே யோசிச்சு நிதானமா செய்வோம்ப்பா.. ப்ளீஸ்..” பதில் சொல்ல முடியாமல் திணறினாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.