(Reading time: 19 - 38 minutes)

புரோகிதர் மந்திரங்கள் உச்சரிக்க, அவர் சொன்னதயெல்லாம் செல்வா செய்துக் கொண்டிருந்தாலும், அவன் பார்வையோ நர்மதா அறையிருந்த திசை பக்கமே இருந்தது… அவளுக்கு இந்த திருமணத்தில் சம்மதம் என்று அவள் வாய்மொழியால் கேட்காமலேயே மணமேடை வரை வந்தது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது… நர்மதாவின் பெற்றோர், அருகே சிரித்த முகத்தோடு நின்றிருக்க, இந்நேரம் அவள் சம்மதம் சொல்லியிருப்பாள் என்று தெரிந்தாலும், ஏனோ அவன் மனம் தவித்துக் கொண்டிருந்தது..

மணமகள் கோலத்தில் யமுனா அவளை அழைத்து வர, அந்த தோற்றத்தில் அவளை பார்த்ததும் தான் அந்த தவிப்பு அடங்கியது… ஆனால் இவனை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை… அவள் முகமோ இன்னும் இந்த திருமணத்தை முழு மனதோடு அவள் ஏற்கவில்லை என்பதை தெள்ள தெளிவாக காட்டியது… இவனுக்குமே இப்படி இந்த திருமணம் நடைபெறுவதில் விருப்பமில்லை தான்…. சூழ்நிலை காரணமாகவே இப்போது இந்த திருமணத்தை அவன் ஒத்துக் கொண்டான்… இன்று இல்லையென்றாலும், கண்டிப்பாக ஒருநாள் இது சந்தோஷமான திருமணமாக மாறும் என்ற நம்பிக்கையோடு நர்மதாவின் கழுத்தில் அவன் தாலியைக் கட்டினான்.

நர்மதாவின் பெற்றோர், யமுனா, துஷ்யந்த், இளங்கோ, வாணி எல்லோருக்குமே இந்த திருமணம் நிறைவைக் கொடுத்தது… தன் மூத்த மகன் திருமணம் நடக்கவில்லை என்ற வருத்தம் கோமதிக்கு இருந்தாலும், தன் இளைய மகனுக்கு நடக்கும் திருமணத்தை, அதுவும் தனக்குப் பிடித்த நர்மதாவே தனக்கு மருமகளாக வந்ததில் கோமதி மனநிறைவோடு அவர்களை ஆசிர்வதித்தார்.

ஆனால் விஜியால் இந்த திருமணத்தை நினைத்து முழுதாக சந்தோஷப்பட முடியவில்லை… தன் வளர்ப்பு மகன், தன் செல்ல மகனின் திருமணம் நடைப்பெற்றாலும், துஷ்யந்தின் திருமணம் நின்றதே அவர் மனதை வேதனைப் படுத்தியது…

“துஷ்யந்தின் திருமணம் நடக்காது.. என்று ஜோசியர் சொன்னது அப்படியே நடந்து விட்டதே என்ற விஷயமே அவரை வதைத்துக் கொண்டிருந்தது… அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்று தான் இந்த திருமணப் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து அவர் கடவுளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார்.. சின்ன சின்ன விஷயத்திற்கு கூட அவர் பயந்துக் கொண்டிருந்தார்… ஆனால் கடைசியில் அந்த ஜோசியர் சொன்னதே நிகழ்ந்தது…

துஷ்யந்த் இந்த திருமணம் வேண்டாமென்று பேச ஆரம்பித்ததிலிருந்தே அவர் மனதில் புயல் வீசியது… அதுவே அவரை மௌனமாகவும் இருக்க வைத்தது… இப்போது செல்வா திருமணத்தை நினைத்துக் கூட அவரால் மகிழ முடியவில்லை…

“ஜோசியர் சொன்னதுப் போல இந்த கல்யாணம் நின்னுடுச்சே, அப்போ அவர் சொன்னதுப் போல இனி துஷ்யந்த்க்கு கல்யாணமே நடக்காதா..?? இப்போ கல்யாணம் நின்னாலும், அப்புறம் அவனுக்கு கண்டிப்பா கல்யாணம் நடக்கும்னு அண்ணி நம்பிக்கிட்டு இருப்பாங்க… அவங்கக்கிட்ட எப்படி சொல்லுவேன்… துஷ்யந்துக்கு இனி கல்யாண ப்ராப்தமே இல்லை… அவனுக்கு இனி கல்யாணமே நடக்காது.. அவன் கடைசி வரைக்கும் இப்படி தனியாகவே தான் இருக்கப் போறான்னு நான் எப்படி சொல்லுவேன்..” என்று மனதிற்குள்ளேயே புலம்பினார். அதுவே அவரை இந்த திருமண சந்தோஷத்தில் கலந்துக் கொள்ள முடியாமல் செய்தது.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 15

Episode # 17

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.