(Reading time: 19 - 38 minutes)

ங்கப் பாரு நர்மதா… அப்பா அவசரப்பட்றதா உனக்கு தோனலாம்… ஆனா எல்லாம் ஒரு காரணத்தோட தான் அப்பா செய்றேன்ம்மா.. உன்னோட ஜாதகத்தை ஜோசியர் பார்த்துட்டு, சீக்கிரம் கல்யாணம் கூடி வரும், ஆனா கல்யாணத்துல குழப்பம் ஏற்படும்னு சொன்னாரும்மா…

நான் கூட ஏதாவது பெருசா நடக்குமோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்… உங்க அம்மாக்கிட்ட கூட எதுவும் சொல்லல… மனசுக்குள்ள அதுவே ஓடிக்கிட்டு இருந்துச்சு… எதுவும் கெட்டதா நடந்துடக் கூடாதேன்னு தோனுச்சு…

இப்போ இந்த கல்யாணம் நிக்கப் போகுதுன்னு தெரிஞ்சதும், ஜோசியர் சொன்ன மாதிரி நடக்குதுன்னே நான் ரொம்ப பயந்தேன்… ஆனா இப்போ நடக்கறத பார்த்தா, மாப்பிள்ளை மாறறது தான் அந்த குழப்பமோன்னு எனக்கு தோனுதும்மா…. இப்படி தான் உன் கல்யாணம் நடக்கனும்னு அந்த ஆண்டவன் முடிவு பண்ணியிருக்கான், அதான் இப்படி நடக்குது.. அதை நாம நல்லதாவே எடுத்துப்போமே..

ஆரம்பத்துல மாப்பிள்ளையை பார்க்காம நான் இந்த சம்பந்தத்துக்கு  ஒத்துக்கிட்டேன்ம்மா… மாப்பிள்ளையை நேர்ல பார்க்காதது ஒரு உறுத்தலாவே என் மனசுக்கு தோனுச்சு… அப்புறம் செல்வா தம்பிய பார்க்கவும் நல்ல மாதிரியா தெரிஞ்சதால தான், அவங்க அண்ணனும் நல்ல மாதிரியா இருப்பார்ன்னு நினைச்சேன்… இப்பவும் இந்த நேரத்துலாயவது தன் மனசுல இருக்கறத ஒத்துக்கிட்டு எல்லாம் சரிப் பண்ண நினைக்கிற துஷ்யந்தோட எண்ணம் புரியுது… இருந்தும் அதால உன் வாழ்க்கை பாதிக்கப்படுதேன்னு தான் கோபமே…

துஷ்யந்த் தம்பி மேலயும், அவங்க அம்மா மேலயும் கோபமே தவிர வெறுப்பு இல்ல… ஆரம்பத்துல இருந்து துஷ்யந்தை விட, நமக்கு செல்வா தம்பிய தான் நல்லா தெரியும்… அவருக்கு உன்னை கட்டிக் கொடுக்கறதுல எனக்கு திருப்தி தான்ம்மா.. முடிவெடுத்த நேரம் கொஞ்சமா இருந்தாலும், அப்பா நல்லா யோசிச்சு தான்ம்மா இந்த முடிவுக்கு சம்மதிக்கிறேன்… ஒத்துக்கோம்மா..” என்றார்…

அவர் அவ்வளவு சொல்லியும் அவள் அமைதிக் காக்க, அவளை பெற்றவர்களோ… அவள் சம்மதத்திற்காக காத்திருந்தனர்… அந்த நேரம்,

“அப்பா நர்மதாவுக்கு நீங்க நல்லது தான் செய்வீங்க…. அவளுக்கு அது நல்லாவே தெரியும்… அவ கண்டிப்பா இதுக்கு ஒத்துப்பா, நீங்க நடக்க வேண்டிய வேலையைப் பாருங்க… நான் இவளுக்கு அலங்காரம் பண்ணி கூட்டிட்டு வரேன்..” என்று யமுனா கூறினாள்…

இன்னும் கூட மகள் அமைதியாக இருக்கவே, இருவரும் அவளையே பார்த்திருந்தனர்… அப்போதும் அவள் அமைதியாகவே இருந்தாள்…

“அப்பா நான் தான் சொல்றேன் இல்ல… என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.. அவளை என்னால ஒத்துக்க வைக்க முடியும்.. அதனால மத்த வேலைகளைப் பாருங்க…” என்றவள், நர்மதாவின் கையைப் பிடித்தப்படி, அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அவளை அழைத்துச் சென்றாள்.

அவர்கள் பேச்சில் தலையிடாமல் துஷ்யந்த் ஒதுங்கியிருக்க, அவன் அருகில் வந்த குமாரசாமி..

“தம்பி… கண்டிப்பா நர்மதா இதுக்கு சம்மதிப்பா… நாம ஆக வேண்டிய காரியத்தைப் பார்க்கலாம்..” என்று சொல்லிவிட்டு, முதலில் இந்த திருமணம் நடக்கப் போவதாக அறைக்கு வெளியே நின்றிருந்தவர்களிடம் கூறினார்..

நர்மதா துஷ்யந்திடம் கோபமாக பேச ஆரம்பித்ததில் இருந்து இப்போது நடந்த அனைத்தையும் ஒருவித அதிர்ச்சியோடு  பார்த்தப்படி செல்வா உறைந்துப் போய் நின்றிருந்தான்..

“செல்வா… என்ன அப்படியே நிக்கற… போ போய் ரெடியாகு… ஐயர் முதல்ல உன்னை தான் கூப்பிடுவாரு.. போ..” என்று துஷ்யந்த் அவனை அவசரப்படுத்தினான்…

“அண்ணா நர்மதா இன்னும் ஒத்துக்கலையே..” என்று அவன் தயங்க..

“அதான் நர்மதா ஒத்துப்பான்னு அவளோட அப்பா சொல்றாருல்ல.. யமுனாவும் நம்பிக்கையா சொல்லிட்டுப் போயிருக்கா.. கண்டிப்பா நர்மதா ஒத்துப்பா.. போ போய் ரெடியாகு..” என்று செல்வாவை அனுப்பி வைத்தான்..

செல்வா சென்றதும் கோமதி துஷ்யந்திடம் வந்தார்.. “நீ பொய்யான நம்பிக்கையை கொடுக்க மாட்டேன்னு நினைச்சேன் ராஜா.. ஆனா கடைசியில இப்படி செஞ்சுட்டியே..” என்று அவனை குற்றம் சாட்டினார்..

“அம்மா.. நான் இவ்வளவு தூரம் வந்ததே, உங்களுக்காக மட்டும் தான்ம்மா.. என்னோட மனசுல இன்னொரு பொண்ணுக்கு கண்டிப்பா இடமில்லம்மா.. உங்க நம்பிக்கையை காப்பாத்த நினைச்சா, நர்மதாவை ஏமாத்தினதா ஆயிடும்.. கேட்டீங்கல்ல நர்மதா அப்பா பேசினத… நீங்க சொன்ன மாதிரி இந்த இடத்துல வேற ஒருத்தர் இருந்திருந்தா.. அவங்க வேற மாதிரி நடந்திருப்பாங்க..

இங்கப் பாருங்கம்மா.. உங்களுக்கு பிடிச்ச மாதிரி நர்மதா தான் இந்த வீட்டுக்கு மருமகளா வரப் போறா.. ஆனா நம்ம செல்வாவோட மனைவியா.. உங்க ரெண்டாவது மருமகளா… நீங்க அதை மனசார ஏத்துக்கனும்மா… அப்போ தான் செல்வாவும் சந்தோஷமா இந்த கல்யாணத்தை ஏத்துப்பான்… இன்னைக்கு உங்க ரெண்டாவது பையனோட கல்யாணம்… அதை நினைச்சு சந்தோஷப்படுங்க…

இங்கப் பாருங்க...போய் செல்வாவுக்கு தேவையானதை எடுத்துக் கொடுங்க.. அவன் தனியா போயிருக்கான் பாருங்க..” என்றவன், அருகில் இருந்த விஜியிடமும்…

“அத்தை… உங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன்… போய் செல்வா கூட இருங்க… அப்போ தான் அவனுக்கும் சந்தோஷமா இருக்கும்….” என்று இருவரையும் அனுப்பி வைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.