(Reading time: 19 - 38 minutes)

றைக்குள் நுழைந்ததும், தன் கைகளை அழுத்திப் பிடித்திருந்த யமுனாவின் கைகளை உதறியப்படி, அவளை முறைத்தாள் நர்மதா…

“எந்த தைரியத்துல நான் கல்யாணத்துக்கு ஒத்துக்குவேன்னு, நீ அங்க சொல்லிட்டு வந்த யமுனா..??”

“அம்மா, அப்பா இவ்வளவு பேசறாங்க, நீ இப்படி அழுத்தமா நின்னுக்கிட்டு இருக்க… நீ இப்படி கிடையாதே நர்மதா…??”

“அவங்களுக்கு தான் விஷயம் தெரியாம இப்படி ஒரு முடிவை எடுத்திருக்காங்க… என்னை கட்டாயப்படுத்துறாங்க… உனக்குமா என்னோட நிலைமை புரியல… என்னை நீயும் கட்டாயப்படுத்திறியா..??”

“காலையில உன்னோட முகத்தைப் பார்த்தப்போ, இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா… நானே இந்த கல்யாணத்தை நிறுத்தியிருப்பேன் தெரியுமா.?? நேத்து நைட் இந்த கல்யாணம் வேணாம்னு நீ தானே அழுத… இப்போ கடவுளா உனக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்காரு… அதை நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற…”

“நீ தான் புரிஞ்சுக்கல யமுனா… இந்த கல்யாணம் நின்னதுக்காக நானும் சந்தோஷம் தான் பட்றேன்…. ஆனா ரிஷப் ஐ என்னால கல்யாணம் செஞ்சுக்க முடியாது… அதை நைட்டே உன்கிட்ட சொன்னதா ஞாபகம்…

ரிஷப் பத்தி எல்லாம் சொல்லியும், அவனை கல்யாணம் பண்ணிக்கன்னு எப்படி யமுனா உன்னால சொல்ல முடியுது… என் காதலை அவன் ஏத்துக்கலன்னாலும் பரவாயில்ல… ஆனா அந்த ரிஷப் என்னோட காதலை உதாசீனப்படுத்திட்டான்… நான் பணத்துக்காக அவனை காதலிச்சதா, கல்யாணம் பண்ண நினைச்சதா சொன்னான்… அப்போ பேசனது மட்டுமில்ல, இப்பவும் அவனோட அண்ணனை நான் கல்யாணம் பண்ண நினைச்சது, பணத்துக்காகன்னு சொன்னான்…. இப்படியெல்லாம் சொன்னவனை  நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்..??”

“நர்மதா… நீ ரிஷப் பத்தி சொன்னதும், நானும் கோபப்பட்டேன் தான்… ஆனா செல்வா தான் ரிஷப்னு தெரிஞ்சதும், எனக்கென்னமோ ரிஷப் பத்தி தப்பா நினைக்க தோனல… அன்னைக்கு ரிஷப் பேசினதுக்கு ஏதாவது காரணமோ, இல்லை சூழ்நிலையோ ஏற்பட்டிருக்கலாமோன்னு தோனுது…”

“சரி அப்போ பேசினதுக்கு நீ காரணத்தை கண்டுபிடிக்கலாம்… ஆனா இப்போ பேசினதுக்கு அர்த்தம் என்ன..?? எதுக்காக இப்போ அப்படி பேசனும்…?? அதுக்கு பதில் சொல்லு யமுனா..??”

“அதுக்கு அர்த்தம் அவரும் உன்னை காதலிச்சிருக்காரு நர்மதா… இப்போ அவர் உன்னை எந்த மாதிரி சூழ்நிலையில பார்த்திருக்காரு… அந்த சமயம் உன்கிட்ட இப்படியே பேசி, தன்னை தப்பானவராவே காமிச்சிருக்க நினைச்சிருக்கலாம் இல்ல…”

“இல்லை… அப்படியெல்லாம் இல்லை… அப்பவும், இப்பவும் அவன் என்னை தப்பா தான் நினைச்சிருக்கான்… அவன் என்னை காதலிக்கல்லாம் இல்லை…”

“இல்லை நர்மதா.. செல்வாக்கு உன் மேல காதல் இருந்திருக்கு… தன்னோட அண்ணன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணா அவர் உன்னை பார்த்ததால தான் செல்வா இப்படி நடந்திருக்காருன்னு  எனக்கு தோனுது…  அப்படி எதுவும் இல்லாமையா செல்வா உன்னை இப்போ கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டு இருப்பாரு… உன்னை தப்பா நினைச்சிருந்தா, கல்யாணம் நின்னதே நல்லதுன்னு உன்னை வேண்டாம்னு சொல்லியிருப்பார் இல்ல.. அதை விட்டுட்டு ஏன் உன்னை கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கனும்…??”

“இந்த கல்யாணத்துக்கு ரிஷப் எதுக்கு ஒத்துக்கிட்டான்னு தெரியல.. ஆனா கண்டிப்பா என்னை காதலிச்சான்னு சொல்றதை என்னால் ஒத்துக்க முடியாது யமுனா… என்னால ரிஷப் ஐ கல்யாணமும் செஞ்சுக்க முடியாது… அவனை பத்தி நினைச்சாலே, அவன் பேசினதெல்லாம் தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது… அப்புறம் எப்படி யமுனா, இந்த கல்யாணத்தை என்னால ஏத்துக்க முடியும்..??”

“ரிஷப் பேசினது உன்னை இந்த அளவுக்கு பாதிச்சிருக்குன்னா, ரிஷப் ஐ நீ அந்த அளவுக்கு நேசிக்கிறன்னு அர்த்தம் நர்மதா.. 6 வருஷம் ஆகியும், அது உன்னோட மனசை விட்டுப் போகலைன்னா, நீ இன்னும் ரிஷப் ஐ மறக்கல..

இங்கப்பாரு… இப்போ இந்த கல்யாணத்தை நீ வேண்டாம்னு சொல்லிட்டு போய்டுவ, அதுக்கப்புறம் என்ன செய்வ… 1 வருஷமோ இல்ல ரெண்டு வருஷமோ கழிச்சு உங்க அப்பா, அம்மா உனக்கு இன்னொரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்க நினைப்பாங்க.. அதுக்கு நீ ஒத்துப்பியா..?? உன்னால ஒத்துக்க முடியுமா..??

அப்படி நீ ஒத்துப்பன்னா, இப்போ நீ துஷ்யந்தையே மனசார ஏத்துக்கிட்டு இருந்திருப்ப, ரிஷப் ஐ நீ இன்னும் மறக்கல… அதான் இந்த கல்யாணத்தை உன்னால மனசார ஏத்துக்க முடியல… நீ ரிஷப் ஐ பார்க்காமலேயே இருந்திருந்தா கூட பரவாயில்ல… ஆனா இப்போ அவரை பார்த்ததுக்கு அப்புறம், உன்னால இன்னொருத்தரை கல்யாணம் செஞ்சுக்க முடியாது நர்மதா… எனக்கு கல்யாணமே வேண்டாம்னு உன்னோட அம்மா, அப்பாக்கிட்ட சொல்லவும் முடியாது… சொன்னா என்ன காரணம்னு கேப்பாங்க… ஏற்கனவே கல்யாணம் நின்னதால தான் நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்றன்னு நினைச்சுப்பாங்க… நம்மால தான் நம்ம பொண்ணு வாழ்க்கை இப்படி ஆயிடுச்சுன்னு வருத்தப்படுவாங்க.. அப்படி அவங்களுக்கு காலம் முழுக்க வருத்தத்தை கொடுக்கப் போறீயா..??”

“நீ  சொல்ற மாதிரி ரிஷப் மேல நான் வச்சிருந்த காதலை என்னால மறக்க முடியல தான்… நான் ஒத்துக்கிறேன்… அதுக்காக ரிஷப் பேசினதையெல்லாம் மறந்துட சொல்றியா..?? அப்படி ஒன்னே நடக்கலன்னு நினைச்சு அவரை கல்யாணம் செஞ்சுக்க சொல்றியா..??”

“இல்ல நர்மதா.. நான் தான் சொன்னேன் இல்ல… ரிஷப் பேசினதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம்… ஒருவேளை உங்க கல்யாணம் நடந்தா,அப்போ அவர் அதுக்கான விளக்கத்தை கொடுக்கலாம் இல்ல… இல்லன்னாலும் மனைவிங்கிற உரிமையோடு அவர் சட்டையைப் பிடிச்சு கேள்வி கேக்கலாம்… இப்பவும் உன்னை அவர்  தப்பா சொல்ல முடியாது… ஏன்னா அவர் தான் உன்னை கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டு இருக்காரு… அவர் அப்படி பேசினதுக்கு உனக்கு அவர் விளக்கம் கொடுத்தே ஆகனும்…

இங்கப்பாரு நர்மதா… உனக்கும் ரிஷப்க்கும் தான் கடவுள் முடிச்சுப் போட்ருக்காரு… இல்லன்னா துஷ்யந்துக்கும், உனக்கும் ஏன் கல்யாண ஏற்பாடு நடக்கனும்…?? துஷ்யந்த் கடைசி நிமிஷத்துல ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லனும்…?? அவர் வாயாலேயே ரிஷப்க்கும் உனக்கும் கல்யாணம் செய்யலாம்னு ஏன் சொல்லனும்…?? இதுலயே புரியலையா.. ரிஷப் தான் உனக்கானவர்னு கடவுள் தீர்மானிச்சிருக்காரு.. அதை புரிஞ்சுக்க.. சந்தோஷமா இந்த கல்யாணத்தை ஏத்துக்க… அம்மா, அப்பாக்கும் இது தான் சந்தோஷத்தை கொடுக்கும்… ப்ளீஸ்..” என்றதும், நர்மதாவும் சரி என்று தலையசைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.