(Reading time: 12 - 24 minutes)

அவனது ஆணவம்,அகங்காரம் அனைத்தையும் காதல் உடைத்து சென்றுவிட,அவனை வென்ற களிப்போ அல்லது அவன் காதல் முன் தோற்ற உறுத்தலோ இறைவனை மௌனம் கொள்ள வைத்தது.பூஜை அறையின் வாயிலில் இருந்து ருத்ராவின் மாற்றத்தினை இமைக்காமல் பார்த்தார் லட்சுமி.

அன்று அவன் சவால் விடுத்தான்.இன்று நிகழ்ந்தது என்ன??மீண்டும் ஒருமுறை காதல் எதையும் சாதிக்க வல்லது என்ற விதி மெய்யானது.

"அபாய கட்டத்தை தாண்டிட்டாங்க!ஆனா,ரத்தம் அதிகமா வெளியேறி இருக்கு!ரத்தம் ஏற்றினா எல்லாம் சரியாகிவிடும்!"-அங்கிருந்த அனைவரின் முகத்திலும் ஆனந்தம் தாண்டவமாடியது.ஒருவரின் முகத்தில் மட்டும் வஞ்சம்!!

"நர்ஸ் பிளட் வந்துடுச்சா?"

"எஸ் டாக்டர்!"

"உடனே ஏற்றி விடுங்க!"-அந்த செவிலி ஓரடி எடுத்து வைப்பதற்குள் "ஒரு நிமிடம்" என்று தடுத்தான் ருத்ரா.

"அவ என்ன பிளட் குரூப்?"

"ரேர் குரூப் சார்!'ஓ' நெகடிவ்!"

"நானும் அதே குரூப் தான்!ரத்தம் நான் தரேன்!தனியா ஏற்ற வேணாம்!"-அதைக் கேட்ட ரகுராமின் மனதில் திக்கென்றது.

"இல்லை சார்!நாங்க வரவழைத்துட்டோம்!"

"சொன்னது புரியலையா?"-கோபமாக அவன் கேட்கவும் ஆடி போனார் அம்மருத்துவர்.ரகுராமின் மீது தோல்விக்கான பார்வையை வீசியவர்,"எஸ் சார்!"என்றார் ருத்ராவை பார்த்து!!

"குட்!"

"நர்ஸ்!இவரை கூட்டிட்டு போங்க!"

"ஓ.கே!டாக்டர்!"-அவனை உள்ளே அழைத்து சென்றாள் அச்செவிலி.

"சிஸ்டர்!"

"ம்..."

"ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்!"

"பரவாயில்லை சார்!மாயா மேடமோட டிரஸ்ட் மூலமா வர ஸ்காலர்ஷிப் மூலமாக தான் என் பையன் டாக்டருக்கு படிக்கிறான்!இதைக் கூட செய்யலைன்னா,அல்ஹா என்னை மன்னிக்கவே மாட்டார்!"-அவன் நன்றியை பணிவோடு மறுத்தார் அவர்.

"மாயாவை பார்க்கலாமா?"

"தாராளமா சார்!நான் அதுக்குள்ள எல்லாம் ரெடி பண்ணிடுறேன்!நீங்க பார்த்துட்டு வாங்க!"-புன்னகையுடன் நகர்ந்தார் அவர்.மனதில் ஏதோ ஒரு அச்சம்,ஒரு வித நேசம்,காதல்,உரிமை ஒன்றாக கலக்க ஒவ்வொரு அடியாய் முன்னேறினான் ருத்ரா.எந்த வித போராட்ட வலிகளும் இன்றி அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் மாயா.மெல்ல அவளை நோக்கி குனிந்தவன் அவளது நெற்றியில் தன் இதழை ஒற்றி எடுத்தான்.

"உன்னை கொல்ல ரத்தத்துல விஷம் ஏற்ற பார்த்தானே!உண்மையிலே உனக்கு இருக்க வீரம் யாருக்கும் இல்லை அதான் துரோகத்தால வீழ்த்த நினைக்கிறான்.உன் அப்பாவுக்கு அன்னிக்கு பாதுகாப்பு கொடுக்க ஆளில்லை.உனக்கு நான் இருக்கேன்டி!உனக்கு பிடிக்குதோ,இல்லையோ உன்னை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்!நீ என் கூட தான் இருக்கணும்.உன் விருப்பப்படி உனக்கு எப்படி தோணுதோ அப்படி வாழு!என்னை வாழ்க்கை முழுசும் வெறுத்தாலும் பரவாயில்லை.ஒரு நண்பனா உன்னை விலகி இருக்கிறதுக்கு பதிலா,ஒரு எதிரா உன் கூடவே இருக்கேன்!சீக்கிரமா வந்துடு மாயா!நம்ம வீடு உனக்காக காத்துட்டு இருக்கு செல்லம்!"-அவள் நெற்றியோடு தன் நெற்றியை மோதினான் ருத்ரா.

"உண்மையிலே உன் சிவன் ரொம்ப சக்தி வாய்ந்தவர் தான்!மறுபடியும் அவரை நீ வணங்க ஆரம்பிக்கும் போது என் சார்பா நன்றி சொல்லிவிடு!"-புன்னகையுடன் கூறினான் அவன்.

"சார் வாங்க!"-செவிலியரின் அழைப்பு செவியில் விழ,

"வரேன் சிஸ்டர்!"என்றப்படி மனமின்றி அவளை பிரிந்து சென்றான் ருத்ரா.

சில மணிநேரம் குருதி அளித்து வெளியே வந்தவனை சூழ்ந்தனர் அனைவரும்!

"டேய்!அவ எழுந்தாளா?"

"தூங்குறாடா!நிம்மதியா தூங்குறா!"-ஒருவித ஆனந்தத்தோடு கூறினான் ருத்ரா.அவன் பதிலை கேட்டவுடன் மனம் முழுதும் நிம்மதி பரவியது காயத்ரிக்கு!!வேறு எதுவும் பேசாமல் நகர்ந்தவன் சில அடிகளில் நின்றிருந்த ரகுராமின் அருகே நின்றான்.

"சூழ்ச்சியை கரைத்து குடித்திருங்க போல!"-அவர் புரியாமல் பார்த்தார்.

"தப்பு சார்!உண்மை சூரிய வெளிச்சம் மாதிரி,உலகத்துல இருக்கிறவங்க இருட்டுல தவிக்கிறதை அதனால சகிக்க முடியாது!நீங்க அஸ்தமித்ததுன்னு நினைத்தது.மறுநாளே ஆரவாரத்தோட உதிக்கும் சார்!மாயாவை சுற்றி இருந்த துரோகம் உங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது.ஆனா,அவளுடைய விசுவாசம் அவளுக்கு கவசமாய் மாறுச்சு!இத்தனை நாள் அவளை சுற்றிய துரோகத்தை தானே பார்த்தீங்க,அவளுடைய பாதுகாப்பை பார்த்ததில்லையே!பார்ப்பீங்க!"-என்றவன் முன்னேறி நடந்தான்.ரகுராமின் முகம் வெளிறி போயிருந்தது.உண்மை சொடுக்கிட்டால் பொய்யானது மெய் பாதம் தாங்க தனது சிரத்தினை அளிக்க தான் வேண்டுமல்லவா???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.