(Reading time: 12 - 24 minutes)

"நான் வர மாட்டேன்டா!"-இருவரின் யுத்தத்தி்கு மத்தியில் மாயாவை காண்பத்காய் வந்தாள் மித்ரா.

"என்னாச்சு?என்ன சண்டை?"

"அது..."-என்று விளக்கி கூறினான் ருத்ரா.

"ஓ..இவ்வளவு தானா?அக்காக்கிட்ட நான் பேசுறேன்!"-என்று உள்ளே சென்றாள் அவள்.

"போ!போ!நல்லா கொடுப்பா வாங்கிட்டு வா!"-என்று வழியனுப்பி வைத்தான் அர்ஜூன்.

உள்ளே...கண்கள் மூடி சாய்ந்திருந்தாள் மாயா.

அவளைக் கண்டதும் எங்கிருந்தோ அச்சம் தொற்றிக் கொண்டது.

"அ..அக்கா!"-மெல்லிய குரல் கேட்டதும் கண்விழித்ததும் மித்ராவை கண்டதும் மெல்லியதாய் இதழ் மலர்ந்தாள்.

"இப்போ பரவாயில்லையா உங்களுக்கு?"

"பரவாயில்லைம்மா!உட்காரு!"-ஒரு ஆசனத்தை காண்பித்தாள் மாயா.முதல் முறை நிகழும் உரையாடல் இனிதே தொடங்கியதில் ஒரு ஆனந்தம் மித்ராவுக்கு!!

"டாக்டர் உங்களை நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆக சொல்லிட்டாங்க!"

"..............."

"அது...வந்து..."

"எதாவது சொல்லணுமா?"

"ம்...ம்ஹூம்...ஆமாக்கா!"

"என்ன சொல்லணும்?"

"அது...உங்களுக்கு உடம்பு சரியாகுற வரை நீங்க என் வீட்டில வந்து தங்கிக்கோங்களேன்!"-பட்டென கேட்டாள் அவள்.மாயாவின் பார்வை கூர்மையானது!!

"இல்லைம்மா!பரவாயில்லை...நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்!"

"இல்லைக்கா!நீங்க எப்போதும் ஆபிஸ்ல தான் அதிக நேரம் இருப்பீங்களாம்!அவர் சொன்னாரு!இப்போ வீட்டில இருக்க ஒரு மாதிரி இருக்கும்ல!"

"பரவாயில்லைம்மா!தேவசேனாலாம் இருக்காங்க!கவலைப்படாதே!"

"ஓ...புரியுது!நீங்க மாமா இருக்காருன்னு வர மறுக்கிறீங்க?"-பாவமாய் கேட்டாள் அவள்.

"உங்களுக்கு மாமாவை பிடிக்காததால தானே நீங்க வரலை?"

"ருத்ரா என் உயிரை காப்பாற்றி இருக்கார்.அந்த நன்றியை நான் மறக்க மாட்டேன்!அவர் மேலே தனிப்பட்ட பகை எல்லாம் எதுவும் எனக்கில்லை.என் கோபம் எல்லாம் முதல்முறையா நாங்க சந்தக்கும் போது காயத்ரிக்காக அவர் என்னை எதிர்த்தது தான்!மற்றப்படி வேற ஒண்ணும் எங்களுக்குள்ள பகையில்லை."

"அப்போ நீங்க வரலாமே!எங்க பாட்டிக் கூட உங்களை பார்க்கணும்னு சொன்னாங்க!நீங்க இந்த வௌநாட்டுக்கு எல்லாம் ஒரு மாதம்,இரண்டு மாதம்னு வேலை விஷயமா போவிங்கல்ல!அது மாதிரி நினைத்து வாங்கக்கா!"-அவள் விடுவதாய் இல்லை.மாயா சில நொடிகள் மௌனம் காத்தாள்.

"யோசித்து சொல்றேன்மா!"

"அப்போ நீங்க வரீங்களா?"-என்றவள் மாயாவை இறுக அணைத்துக் கொண்டாள்.தங்கையின் ஸ்தானத்தில் கிட்டிய நேசம்,மாயாவின் மனதினில் முதல்முறையாக அன்பு என்னும் ஊற்றினை பெருக வைத்தது.

"நான் யோசித்து சொல்றேன்னு தான் சொன்னேன்!"

"அப்போ நீங்க வருவீங்கன்னு தான் அர்த்தம்!நான் பாட்டிக்கிட்ட போய் நீ வருவதற்கான ஏற்பாடுகளை பண்ண சொல்றேன்!"-என்றவள் காற்றாய் வெளியேறினாள்.

வெளியே பேய் அறைந்தாற் போல அவளை பார்த்தனர் நண்பர்கள் இருவரும்!!

"அக்காக்கிட்ட பேசிட்டேன்!"

"எப்படி உன்கிட்ட அவ சாதாரணமா பேசுனா?"-ஆச்சரியமாய் கேட்டான் அர்ஜூன்.

"அதெல்லாம் சொல்ல மாட்டேன்!மாமா,அக்கா வீட்டுக்கு வராங்க!சந்தோஷமா?"-அவன் நம்ப முடியாமல் தலையசைத்தான்.

"நான் போய் பாட்டியை ரூம் ரெடி பண்ண சொல்லணும்!"-என்று வேகமாய் நகர்ந்தாள் மித்ரா.

ருத்ராவின் மனதில் புதுவித உற்சாகம் துள்ளியது.அவள் நுழைய போகிறாள்!அவனது இல்லத்தில் மட்டுமல்ல!அவன் வாழ்விலும் தான்!!!

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.