(Reading time: 12 - 24 minutes)

"மா!இதுக்கு மேலே முடியாது!"-அர்ஜூனின் தாயார் நீட்டிய பழச்சாற்றை மறுத்தாள் மாயா.

"இங்கேப் பாரு..!உடம்புல இருந்து எக்கச்சக்கமா ரத்தம் போயிருக்கு!ருத்ரா மட்டும் ரத்தம் கொடுக்கலைன்னா என்னாயிருக்கும்?"

"அப்போ இதெல்லாம் நீங்க அவனுக்கு தான் கொடுக்கணும்!"-வெறுப்புடன் கூறினாள் மாயா.

"உன் பிடிவாதத்தை விட மாட்டியே!சரி..கொஞ்சம் குடிம்மா!"

"வேணாம்மா!"-அவள் மறுத்துக் கொண்டே இருக்க,அங்கு நுழைந்தான் அர்ஜூன்.

"டேய்!பாருடா!"

"என்னவாம்?"

"ஜூஸ் குடிக்க மாட்றா!"

"ஜூஸ் குடிக்க மாட்றாளா?இங்கே பாரு மாயா!எங்கம்மா இதெல்லாம் என் கண்ணுல காட்டியே பல வருஷமாச்சு!ஒழுங்கா அவங்க கொடுக்கும் போதே குடி!இல்லை...நான் வாங்கி குடித்துவிடுவேன்!"-அவன் பேசிய தோரணை அவன் தாய்க்கும்,அருகிலிருந்த செவிலிக்குமே சிரிப்பை வரழைத்தது.இவளோ அசைந்துக் கொடுப்பதாய் இல்லை.

"என்னை எப்போ டிஸ்சர்ஜ் பண்ணுவாங்க?"

"ஏன்மா?"

"நிறைய வேலை இருக்கு!நிஷாந்த் ஒருத்தனால எல்லாத்தையும் செய்ய முடியாது!"

"இங்கே பாரு..!நீ அட்மிட் ஆன இந்த இரண்டு வாரமா உன் ஆபிஸ்ல தான் நான் லிவிங்ஸ்டன்!எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்!"

"அப்போ கூட எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கலை!"

"டோன்ட் வொரி!நான் இன்னிக்கு அதை விசாரிக்க தான் வந்தேன்.கேட்டுட்டு வரேன்!"-என்று வெளியேறினான் அர்ஜூன்.

"ஸாரி சார்!கிரிஷ் டாக்டர்  செய்த தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்!"-ருத்ராவுடன் பேசியப்படி வந்தார் ஒரு நடுத்தர வயது மருத்துவர்.

"பரவாயில்லை மேடம்!மாயாவை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுறீங்க?"

"வெல்..நாளைக்கே கூட்டிட்டு போகலாம்!பட் ஒன் திங் சார்...அவங்க கம்ப்லீட்டா ரெஸ்ட் எடுக்கணும்!"

"டோன்ட் வொரி டாக்டர்!மாயாவை நான் என் வீட்டுக்கு தான் கூட்டிட்டு போறேன்!அம்மா பத்திரமா பார்த்துப்பாங்க!"

"அர்ஜூன் சார்!கூடுமான அளவு அவங்களை சுற்றி நிறைய பேர் இருக்க முயற்சி பண்ணுங்க!ஏன்னா,ரொம்ப டிப்பிரஸ்டா இருக்காங்க!வாழணும்னு துளிக்கூட மனசுல ஆசை இல்லை.அதனால தான் அவங்களை போராடி பிழைக்க வைக்க வேண்டியதா போச்சு!'

"கலகலன்னு வைத்துக்கோங்க!சும்மா தனியா மட்டும் கூடுமான வரை விட வேணாம்!"

"அப்பறம் ருத்ரா சார்!ஃபரிதா சொன்னா,இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னு!கங்கிராட்ஸ்!"-ஆசி வழங்கினார் அவர்.

"தேங்க்யூ டாக்டர்!"

"ஓ.கே!சார்!எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு!யூ கேரி ஆன்!"-என்று நகர்ந்துக் கொண்டார் அவர்.

"என்ன பண்றது இப்போ?"

"மச்சான்!"

"என்னடா?பாசமா கூப்பிடுற?"

"மாயாவை நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டா?"

"எது?"-அவனையே இமைக்காமல் பார்த்தான் அர்ஜூன்.

"அவ ஏற்கனவே உன் மேலே கொலைவெறியில இருக்கா!இப்போ தான் கொஞ்சமாவது கோபம் தணிந்திருக்கு!மறுபடியும் உன் சேட்டையை நீ ஆரம்பித்த,கதை முடிந்துவிடும்!"

"போடா!அப்படி நான் என்ன தப்பா கேட்டுட்டேன்!"-பாவமாய் கேட்டான் அவன்.

"அடேங்கப்பா!இப்படி பாவமா கேட்டா உன்னை நல்லவன்னு நம்பிவிடுவாங்கன்னு நினைப்பா?"

"ஏதோ!மாயா என் வீட்டில இருந்தா பாட்டி இருப்பாங்க!மித்ரா இருப்பா!இதான் சாக்குன்னு காயத்ரிம்மாவை அவக்கூட பழக விடலாம்னு பார்த்தா ரொம்ப பண்ற நீ!"-அர்ஜூன் சில நொடிகள் மௌனமானான்.

"ஆனா,உன்னை பார்த்தா அதுக்காக மட்டும் யோசிக்கிறதா தெரியலையே!"-அவன் கூறவிட,தொண்டையை ஒருமுறை செறுமி கொண்டான் ருத்ரா.

"சரி...அதெல்லாம் இருக்கட்டும்!மாயாக்கிட்ட யார் இதைப் பற்றி பேசுறது?"

"நீ தான்..."

"எது?அது ஏன்டா என்னை வைத்தே டெஸ்ட் பண்ற?"

"எல்லாம் ஒரு நம்பிக்கை தான்!"

"அதெல்லாம் முடியாது!நான் போக மாட்டேன்."

"டேய்!டேய்!"

"நான் வீட்டுக்கு ஒரே பையன்டா!என்னை பலிக்கொடுக்க பார்க்காதே!"-அவன் இந்த பரீட்சைக்கு தயாராவதாய் இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.