(Reading time: 22 - 43 minutes)

14. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய் 

பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி 

கண்ணுக்குள் வீடொன்று கட்டித்தான் வைத்தேனே 

அங்கே நீ வந்தபின்னே கோவில் ஆனதே 

இதயம் உன்னை தேடுதே 

உயிரும் உன்னை தேடுதே 

உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே 

நினைவும் உன்னை தேடுதே 

நிழலும் உன்னை தேடுதே 

உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே 

அடி பெண்ணே இறந்தாலும் 

உன் மடியில் கண் மூடத்தானே 

ஓடி வந்து உயிர் விடுவேன் 

ஒரு பார்வை நீ பார்த்தால் 

அது போதும் இப்போது நானும் 

மீண்டும் மண்ணில் உயிர்த்தெழுவேன் 

பெண்ணே உன் நெஞ்சுக்குள் சோகங்கள் கூடாது 

ஆனந்த கண்ணீரில் அழுதாலும் தாங்காது 

வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய் 

பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி 

கண்ணுக்குள் வீடொன்று கட்டித்தான் வைத்தேனே 

அங்கே நீ வந்தபின்னே கோவில் ஆனதே 

காலை ஆறு மணிக்கே தயாராகி அனைவரும் வெளியே வர ஒரு முதியவர் மணியிடம்,என்ன மணி பட்டணத்து புள்ளைக இவ்ளோ விரசா எழுந்து கிளம்பிடாக ஊருக்கு போறாகளா??

இல்ல சித்தப்பூ பாபநாசம் போறாக இப்ப போனா கொஞ்சம் கூட்டமில்லாம இருக்கும்ல அதான்..

அதுவும் சரிதான் பாத்து போய்ட்டு வாங்க கண்ணுகளா..என்றவாறு நகர மணி உள்ளே சென்று பெரிய பையை எடுத்து வந்தார்..தம்பி இதுல மதியானத்துக்கும் சேர்த்து சாப்பாடு வச்சுருக்கேன்..அங்கப் போய் கடையை தேடி அலைய வேண்டாம் பாருங்க..எதுனாலும் போன் பண்ணுங்க..

தேங்க்ஸ் அண்ணா போய்ட்டு வரோம் என்றவாறு கிளம்பினர்..பாபநாசம் பாவநாசம் என உள்ளுர் வட்டாரங்களில் அழைக்கப்படும் ஒரு அழகிய சுற்றுலா தலம்..அகஸ்த்தியர் அருவி என்றுமே வற்றாத ஒன்று..போகும் வழி எங்கும் பச்சைபசலென சுற்றுச்சுழலும் சில்லென்ற காற்றும் ரம்மியத்திற்கே ரம்மியம் சேர்ப்பதாய் இருந்தது..அகத்திய முனிவர் சிவபெருமானை திருமண கோலத்தில் காணப்பெற்ற இடமாதலால் இப்பெயர் பெற்றது….பேச்சும் சிரிப்புமாய் வந்தலில் சட்டென வந்தடைந்துவிட்டதாய் தோன்றியது..அருவியை கண்டதும் அனைவருக்குமே உற்சாகம் தொற்றிக் கொள்ள சஹானா மட்டும் அங்கேயே நின்றாள்.

1.அகத்தியர் அருவி  

2.பானதீர்த்தம்(தாமிரபரணியின் முதல் அருவி)

வா சஹி போலாம்..

எனக்கு தான் பயம்நு தெரியும்ல நீ போ மாமா..அதான் நாயிருக்கேன்ல வா என கட்டாயப்படுத்தி அவளை அனுப்பியவன் அவள்மீதே கவனம் வைத்திருந்தான்..அருவியில் தலையை நுழைத்தவளுக்கோ உடல் மனம் அனைத்தும் குளிர்ந்துவிட்டதாய் தோன்றியது..சில நிமிடங்களில் அவள் படிக்கரைக்கு செல்வதை கண்டவனும் வெளியே வர,என்ன சஹி அதுக்குள்ள வந்துட்ட..ரொம்ப வருஷம் ஆச்சுல மாமா மூச்சடைக்குது அதான்..போன தடவை நாம வந்தத மறக்கவே முடியாது நா ரொம்ப சந்தோஷமா இருந்த நாள் மாமா..

அவனுக்குத் தெரியும் இது தேவிகாவென இருப்பினும் எதையும் வெளிக்காட்டாமலேயே பேச்சை தொடர்ந்தான்..ம்ம் சரி சரி வா நாம ஒரு வாக் போலாம்..மாமா கோவிலுக்கு போலாம் மாமா..

பாபநாசநாதர் பாவங்களை அழிக்கும் இடத்தில் தாயார் லோகநாயகி(உலகாம்பிகை)யோடு பள்ளிக் கொண்டுள்ளார்..மனமாற வேண்டிக் கொண்டு பிரகாரத்தை சுற்றிவர அங்கு ஒருவருடைய கைப்பையை குரங்கு எடுத்துக் கொண்டு மேலே அமர்ந்தவாறு ஒவவ்வொரு  ரூபாய் தாளாய் கீழே இறைத்துக் கொண்டிருக்க அதற்குரியவர் கீழிருந்து பழத்தை தூக்கிப் போட்டவாறு அதை திரும்ப பெற போராடிக் கொண்டிருந்தார்..அதை பார்த்து சிரித்தவாறே வெளியே வந்தவர்கள் வொண்டர்புல் ப்லேஸ் சஹி இந்த ட்ரிப்பை மறக்கவே முடியாது..

ம்ம் இதவிட நூறுமடங்கு அழகை நான் உனக்கு காட்டவா உனக்கு ரொம்ப பிடிச்ச இடமும்கூட..இதவிட அழகாவா போலாம்டா எல்லாரும் வந்துரட்டும்..என்று முடிப்பதற்குள் அனைவரும் வந்துவிட அனைவருமாய் கிளம்பி மலையிலிருந்து இறங்கி ஒரு சிறு கோவில் அருகில் காரை பார்க் செய்துவிட்டு நடக்க ஆரம்பிக்க நீரின் சத்தம் காதில் விழ..

ஹய் மறுபடியும் பால்ஸ்ஸா ஜாலி என ஷரவ் ஓட அங்கு அவள் கண்ட காட்சியில் மறுபடியும் அனைவரையும் நோக்கி ஓடிவந்தாள்..அண்ணா சீக்கிரம் வாயேன் செமயா இருக்கு இதெல்லாம் நா எக்ஸ்பெக்ட்டே பண்ணல..சூப்பராயிருக்குண்ணா..சிவா இது என்ன இடம் சிவா??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.