(Reading time: 22 - 43 minutes)

ஹலோ ஹலோ கூல் எதுக்கு இவ்ளோ டென்ஷன் உங்களுக்கு ப்ராப்ளம் இல்லனா நா வேணா ஹெல்ப் பண்றேன்..-சஹானா

அச்சச்சோ நீங்க எப்படி உங்க வீட்ல எதாவது சொல்ல போறாங்க என்றவாறு ஹாலில் இருந்த கார்த்திக்கை பார்க்க..

அட கார்த்திக்க சொல்றீங்களா அவரு ஒண்ணும் சொல்லமாட்டாரு..இருங்க நா சொல்லிட்டு வந்துறேன்..

மாமா ஹிப்னோதெரபில அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு வரேன் உனக்கு ஓ.கே தான???

ஏய் பெர்மிஷன் கேக்குறியா இல்ல இன்பர்மேஷன் குடுக்குறியா???எதுக்கு சஹி உனக்கு இந்த தேவையில்லாத வேலை..

மாமா ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்ச நேரம்தான் நா முடிச்சுட்டு வந்து லாஸ்ட் பெர்த்ல நா என்னவாயிருந்தேன்னு உனக்கு சொல்றேன்..அதுவரை இந்த பேப்பரை கெட்டியா பிடிச்சு உக்காரு..தேங்க் யூ சோ மச் மாமா..பை..

கார்த்திக்கிற்கு பயத்தையும் மீறி சஹியை பற்றி அவன் தெரிந்து வைத்திருப்பது சரியே என்ற எண்ணம் நிறைவாய் இருந்தது..இந்த சூழ்நிலையில் மட்டுமே அவளை இற்கு ஒத்துக்கொள்ள வைக்க முடியும் என்று தீர்மானமாய் நம்பினான்..காயத்ரியின் குரலில் நினைவு பெற்றவன்.ரொம்ப தேங்க்ஸ் காயத்ரி எனக்காக இந்த ஹெல்ப் பண்ண ஒத்துகிட்டதுக்கு..

பரவால்லண்ணா..கல்யாணமே ஆகல அதுகுள்ள நீங்க அவங்க பிரைச்சனைய உங்க ப்ரச்சனையா நினைச்சு யோசிக்குறீங்களே அந்த ஒரு காரணத்துக்காக தான் நா இதுக்கு சம்மதிச்சேன்..கவலபடாதீங்க நல்ல முடிவு கிடைக்கும்..கரெக்ட்டா 20 நிமிஷம் கழிச்சு நீங்க உள்ள வாங்க அண்ட் முக்கியமான விஷயம் ட்ரீட்மெண்ட் நடுல அவங்க என்ன ரியாக்ஷன் குடுத்தாலும் பார் எக்சாப்பிள் அழுகை கோபம் ஆத்திரம்னு எதுவா வேணாயிருக்கலாம் பட் நீங்க எந்த காரணத்தை கொண்டும் அவங்களை டிஸ்டர்ப் பண்ணிட கூடாது..நீங்க தான் பாத்து நடந்துக்கனும்..

ஷீவர் மா நா பாத்துக்குறேன்..என்றவனுக்கு சிறு புன்னகையை பதிலளித்தவள் அறைக்குள் நுழைய அவள் கூறீய இருபதாவது நிமிடம் உள்ளே நுழைந்தவனுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை..சிறிய இரவு விளக்கு, மென்மையான. வாசனை காதுக்கு இனிமையாய் மெல்லிய இசை ககட்டிலின் அருகே சாய்வு நாற்காலியில் சஹானா கண்மூடி அமர்ந்தீருக்க கட்டிலில் அவளது வலப்பக்கமாய் காயத்ரி அமர்ந்திருந்தாள்..அவர்களுக்கு எதிரே கையில் மொபைலோடு நடப்பதை பதிவு செய்வதற்காக அமர்ந்திருந்தாள் கௌரி..கௌரி தன் அருகில் இருந்த சேரில் அமருமாறு கார்த்திக்கிற்கு செய்கை காட்ட அமைதியாய் அமர்ந்தான்..

ஓ.கே சஹானா டேக் அ டீப் ப்ரெத்..ரிலாக்ஸ் குட்..சோ நாம இப்போ கொஞ்ச கொஞ்சமா உங்க சின்ன வயசுக்கு போகப் போறோம்..இப்போ உங்க வயது 15 நீங்க எங்க இருக்கீங்க சொல்லுங்க..

நா..நா பெங்களூர்ல இருக்கேன்..என் சித்தி வீட்ல..

ஓ..இப்போ நீங்க என்ன பாக்குறீங்க என்ன நியாபகம் இருக்கு உங்களுக்கு??

இன்னைக்கு தீபாவளி நா என் தம்பி தங்கையோட பட்டாசு வெடிக்குறேன்..என் அப்பா அம்மாவும் வந்துருக்காங்க..

நைஸ் இப்போ நாம இன்னும் கொஞ்சம் பின்னாடி போய் அம்மாவோட வயித்துக்குள்ள இருக்குற சஹானாவா பாக்க போறோம் அங்க நீங்க எப்படியிருக்கீங்க அதாவது அம்மா ஹேப்பியா இருக்காங்களா??உங்களுக்கு உள்ளே எப்படியிருக்கு பயமாயிருக்கா???

இருட்டாயிருக்கு ஆனா ஆனா எனக்கு பயமில்ல அம்மா எனக்கு நிறைய சிவன் பாட்டு கதையெல்லாம் சொல்றாங்க அதனால நா சந்தோஷமா தான் இருக்கேன்..

வெரிகுட் சோ இப்போ நாம உங்களோட முன்ஜென்மத்துக்கு போக போறோம்..அம்மாவோட வயித்துக்குள்ள வர்றதுக்கு முன்னாடி சஹானா எங்கயிருக்கீங்க..உங்களுக்கு என்ன தெரியுது???

கோவில் சிவன்..நா நா கோவில்ல இருக்கேன்..

ஓ அப்படியா சரி உங்களுக்கு எத்தனை வயசு உங்க பேர் என்ன எதாவது தெரியுதா அங்க எல்லாரும் உங்கள எப்படி கூப்டுறாங்க சொல்ல முடியுமா???

என் என் பேரு..தேவிகா..ஒரு 21-22 வயசு இருக்கும்..

வெரி குட்..அது எந்த இடம்னு தெரியுதானு பாருங்க அந்த இடத்துக்கு ஒரு பேர் இருக்கனுமே???அப்பா அம்மா யாரு என்ன பண்றாங்க சொல்ல முடியுமா???

இது ப்ரம்மதேசம்..அங்கதான் நாயிருக்கேன்..அம்மா அப்பா இறந்துட்டாங்க..நா என் சாமிகூட இருக்கேன்..

ஓ சாமியா அவரு யாரு???

அவர அங்க எல்லாரும் அப்படிதான் கூப்டுவாங்க..என்னை அவருதான் வளர்த்தாரு..

வேற என்னலா நியாபகத்துக்கு வருது உங்களுக்கு எங்ககிட்ட சொல்றீங்களா??

ம்ம்  என்றவாறு மெல்லிய குறுநகை இதழோரம் இழையோட சஹானா தேவிகாவாய் மனதளவில் வாழ தயாராகிக் கொண்டிருந்தாள்..

மக்களே இது எனக்கு மிக மிக பிடித்த ஒரு விஷயத்தின் அடீப்படையில் எழுதப்பட்ட எபி ஹிப்னோதெரபி பத்தி நிறைய தெரிஞ்சு அதை செஞ்சு பாக்கனும்னு கூட ஆசை பட்டுருக்கேன்..சோ எனக்கு தெரிஞ்ச விஷயங்களை வச்சு எழுதிருக்கேன்..இது எந்தளவு உண்மை இப்படிதான் நடக்குமாநுலா தெரியாது சோ சைக்காலஜி சம்மந்தப்பட்ட யாராவது இதை படிச்சா சண்டைக்கு வந்துராதீங்கலாஜிக்லா பாக்காம சமத்தா என்ஜாய் பண்ணி படிச்சுட்டு கருத்துக்களை பதிவிடுங்க பாக்கலாம்..;)

தொடரும்

Ninnai saranadainthen - 13

Ninnai saranadainthen - 15

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.